Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு | theipirai panchami in tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு

Posted DateDecember 20, 2024

மார்கழி மாதம் என்றாலே பீடுடைய மாதம் என்று கூறுவார்கள். அதாவது சிறப்புகள் பொருந்திய மாதம் என்று கூறுவார்கள். இந்த மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம் ஆகும். இப்பொழுது மார்கழி மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இன்று பஞ்சமி திதி ஆகும். அதுவும் தேய்பிறை பஞ்சமி திதி ஆகும். இன்று, 19ஆம் தேதி மதியம் 1:11 மணிக்கு பஞ்சமி ஆரம்பிக்கிறது. இது வெள்ளிக்கிழமை மதியம் 1:43 வரை இருக்கிறது. பஞ்சமி நாள் அன்னை வாராஹியை வழிபட உகந்த நாள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தேய்பிறை பஞ்சமி அன்று அன்னை வாராஹியை வழிபடுவதன் மூலம் அனைத்து நலன்களும் வந்து சேரும். பொதுவாக தேய்பிறை வழிபாடு நமது கஷ்டங்களை குறைக்கும். தடைபட்ட காரியங்கள் நடக்கும். எனவே நமது துன்பங்கள் மற்றும் கஷ்டங்கள் குறைய இன்று வாராஹி வழிபாட்டை மேற்கொள்ளலாம்.தேய்பிறை பஞ்சமி நாளான இன்று அன்னையை எவ்வாறு வழிபட வேண்டும் என்று இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.

 வாராஹி அன்னை அழைத்த உடன் வந்து அருள் புரியும் அன்னை அவளுக்கு உரிய நாளான தேய்பிறை பஞ்சமி நாளான இன்று இரவு அல்லது பஞ்சமி திதி இருப்பதால் நாளை பிரம்ம முகூர்த்த வேளையில் அவளை வழிபடலாம். அதாவது இன்று மாலை 6:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் வழிபடலாம்.  அப்படி இல்லாத பட்சத்தில் நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரமான 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள்ளும், காலை 6:00 மணியிலிருந்து 7:30 மணிக்குள்ளும் வழிபடலாம். வாராஹி அன்னையை வழிபடுவதற்கு முன் விநாயகர் மற்றும் குல தெய்வ வழிபாட்டை முதலில் மேற்கொள்ளுங்கள்.

 உங்கள் வீட்டில் வாராஹி விக்கிரகம் அல்லது படம் இருந்தால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து சிவப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். விக்கிரகமோ படமோ இல்லை என்னும் பட்சத்தில் ஒரே ஒரு அகல் விளக்கில் தீபம் ஏற்றி அந்த தீபத்தில் வாராகி அம்மன் எழுந்தருள வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இன்று சிறப்பு பூஜையாக செய்வது நல்லது. பஞ்சமி திதி அன்று எந்த முறையில் வாராகி அம்மனை வழிபாடு செய்வீர்களோ அதே முறையில் வழிபாடு செய்துவிட்டு கூடுதலாக இந்த ஒரு வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.

வாராஹி அன்னை முன் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். வழக்கமாக செய்யும் பூஜை மற்றும் நைவேத்தியம் செய்து கொள்ளுங்கள்.  மஞ்சள் அல்லது பச்சை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஐந்து  நீட்டு மஞ்சள் அதாவது  விரலி மஞ்சள் வைத்து அதனை ஒரு மூட்டை போல கட்டிக் கொள்ளுங்கள்.  இதை உங்களுடைய இடது கையில் வைத்துக்கொண்டு முதலில் உங்களுடைய குலதெய்வத்தை வழிபட வேண்டும். அடுத்ததாக வாராஹி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு உங்களின்  நீண்ட நாள் வேண்டுதல் என்னவோ கோரிக்கை என்னவோ எந்த செயல் தடைபட்டு நின்று கொண்டு இருக்கிறதோ அது நீங்க வேண்டும் என்று  முழுமனதோடு வழிபாடு செய்துவிட்டு அந்த முடிச்சை அப்படியே வாராகி அம்மனின் பாதத்தில் வைத்து விடுங்கள். தீபம் ஏற்றி வைத்து வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அந்த விரலி மஞ்சள் முடிச்சை தீபத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். பிறகு கீழ் வரும் மந்திரத்தை 108 முறை கூறி கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.

“ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி”

இந்த முடிச்சு ஐந்து நாட்கள் அப்படியே இருக்கட்டும். ஐந்தாவது நாள் இந்த முடிச்சை பிரித்து அதில் இருக்கக்கூடிய மஞ்சளை எடுத்து நாம் எப்பொழுதும் சமையலுக்கு உபயோகப்படுத்துவது போல் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த முறையில் நாம் மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது வாராகி அம்மனின் அருளால் உங்கள் துன்பங்க யாவும் தீரும். உங்க நியாயமான வேண்டுதல்கள், கோரிக்கைகள் நிறைவேறும். நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து வாழ்வில் வளமும் நலமும் பெறுங்கள.