கார்த்திகை மாதம் தீபங்களின் மாதம் என்றே கூறலாம். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் தீப ஜோதி பிரகாசமாக மிளிரும். நமது பாரம்பரியத்தை போற்றும் பல வித வழிபாட்டு முறைகளால் இதுவும் ஒன்றாகும். இந்த மாதத்தில் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் மாலையில் மெழுகி கோலமிட்டு இரு புறங்களிலும் தீபங்களை ஏற்றுவது வழக்கம். தொன்று தொட்டு இருந்து வந்த இந்த வழக்கம் இன்றும் நம்மிடையே உள்ளது எனலாம்.
அமாவாசை முடிந்து அடுத்துவரும் பௌர்ணமி வரை இருக்கும் நாட்கள் வளர்பிறை ஆகும். சந்திரன் தேய்ந்து வளர ஆரம்பிக்கும் நாட்கள் வளர்பிறை ஆகும். வளர்பிறையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு வழிபாடும் நமது முன்னேற்றத்திற்கு உதவும். தேய்பிறை வழிபாடு நமது துன்பங்களைக் குறைக்கும். எனே தான் நமதுமுன்னோர்கள் வளர்பிறை வழிபாடு மற்றும் தேய்பிறை வழிபாடு என்று பிரித்து வைத்துள்ளார்கள். வளர்பிறை நாட்களில் வழிபாடு செய்யும்பொழுது நன்மைகள் வளர வேண்டும் என்றும் தேய்பிறை நாட்களில் வழிபாடு செய்யும்பொழுது தீமைகள் விலக வேண்டும் என்றும் வேண்டுதலை வைக்க வேண்டும். இந்தப் பதிவில் கார்த்திகை வளர்பிறை தீப வழிபாடு பற்றிக் காணலாம்.
பொதுவாக கார்த்திகை மாதம் மாலையில் வீட்டு நிலை வாசலில் தினமும் இரண்டு தீபங்கள் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. அத்துடன் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை நாட்களில் வீட்டின் பூஜை அறையில் காலை (பிரம்ம முகூர்த்தம்) அல்லது மாலை இந்த இரண்டு தீபத்தை ஏற்றி நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளம் அதிகரிக்கும். இந்த வளர்பிறை நாட்கள் என்பது டிசம்பர் இரண்டாம் தேதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பித்து பௌர்ணமி வரை அதாவது டிசம்பர் 15ஆம் தேதி வரை இருக்கிறது.
இந்த நாட்களில் தொடர்ச்சியாக நாம் இந்த இரண்டு தீபத்தையும் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஒரு வேளை தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் இந்த வளர்பிறை நாட்களில் வரக்கூடிய செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமி போன்ற தினங்களிலாவது இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.
முதல் தீபம் மாவிளக்கு தீபம். பச்சரிசி மாவில் வெல்லம் ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து மாவிளக்காக தயார் செய்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு குலதெய்வ படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அடுத்ததாக உப்பு தீபம் ஒரு அகல் விளக்கில் கல் உப்பை வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு வளர்பிறையில் செய்து வர உங்கள் வாழ்வில் ஏற்றம் பெறலாம். வளமும் நலமும் பெறலாம். நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டு பலன் பெறுங்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025