இந்த மாதம் பணியிடத்தில் உங்கள் நன்மதிப்பு உயரலாம். அதிக வேலைப் பளு காரணமாக சில பணிகளில் பின்னடைவுகள் இருந்தாலும் நீங்கள் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இந்த மாதம் புதிய தொழில் தொடங்க அனுகூலமாக இல்லை. எனவே தொழில் தொடங்கும் திட்டம் இருந்தால் அதனை தள்ளிப் போடவும். தொழிலை விரிவாக்கம் செய்ய விரும்பினால் குறைந்த முதலீட்டில் செய்வது சிறப்பு. அதிக முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். இந்த மாதம் நீங்கள் கணிசமான தொகையை சேமிப்பீர்கள். வரவு செலவு பட்ஜெட் அமைத்து நிதியை நன்கு திட்டமிடக்கூடிய உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் உங்கள் பணத்தை ஒப்படைக்க முயற்சிக்கவும். காதலர்களுக்கு இது மகிழ்சிகரமான மாதமாக இருக்கலாம். உங்கள் உறவு சார்ந்த முடிவுகளை எடுக்கும் போது மூன்றாவது நபரை ஈடுபடுத்த வேண்டாம். திருமணமான தம்பதிகளுக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகலாம். எனவே பொறுமையாக அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள், என்றாலும் அஜீரணக் கோளாறுகளை சந்திக்க நேரலாம். வெளியில் சாப்பிடாமல் இருப்பதன் மூலம் இதனை தவிர்க்கலாம். துலாம் ராசி மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த மாதம் காதலர்கள் ஒற்றுமையுடன் இருக்கலாம். ஒன்றாக வெளியிடங்களுக்குச் சென்று மகிழலாம். என்றாலும் உங்கள் உறவைப் பற்றிய விவகாரங்களில் மூன்றாம் நபரின் தலையீட்டைத் தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் இணக்கமான உறவை பராமரிக்கலாம். . பெரியவர்களுடனான உங்கள் தொடர்பு சுமுகமாகவும் என்றென்றும் மறக்கமுடியாததாகவும் இருக்கும். குழந்தைகளுடனான உங்கள் உறவு நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண :பிருகஸ்பதி பூஜை
இந்த மாதம் உங்கள் வருமானம் உயரலாம். நீங்கள் கணிசமான பணத்தை சேமிக்க வாய்ப்பு கிடைக்கும். என்றாலும் உங்கள் செலவுகளை நீங்கள் கண்காணிக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். பண விஷயங்களை நன்றாக நிர்வகிக்கத் தெரிந்த குடும்ப உறுப்பினர்களிடம் உங்கள் பணத்தை கொடுத்து நிர்வகிக்க சொல்வது நல்லது.இவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் உங்கள் நிதியை மிகவும் திறம்பட நிர்வகிக்க உதவுவார்கள், உங்கள் பணம் புத்திசாலித்தனமாகச் செலவிடப்படுவதையும் முக்கியமான தேவைகள் அல்லது எதிர்கால இலக்குகளுக்காகச் சேமிக்கப்படுவதையும் உறுதிசெய்யும். இந்த நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம், ஏனெனில் அவை நீண்ட காலத்திற்கு அதிக நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மன அமைதிக்கு வழிவகுக்கும். உங்கள் நிதி மேம்பாட்டிற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
இந்த மாதம் உங்கள் கடின உழைப்பு உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்கள் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கிட்டும். உங்கள் அர்ப்பணிப்பிற்கான பாராட்டு கிட்டும். சில பணிகளில் சவால்கள் அல்லது தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். என்றாலும், இந்த சிரமங்கள் இறுதியில் சமாளிக்கப்பட்டு, வெற்றியை அடைய உங்களை வழிநடத்தும் என்பதில் உறுதியாக இருங்கள்.
உங்கள் தொழில்முறை இலக்குகளை அடைய நீங்கள் முயற்சித்தால் திட்டமிட்டு செயல்படுவது பயனுள்ளதாக இருக்கும். உற்பத்தித் துறையில் பணிபுரியும் துலாம் ராசிக்காரர்களுக்கு, இந்த மாதம் தொழில் முன்னேற்றத்திற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது. நிர்வாகம் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் உத்தியோகத்தை அடுத்த நிலைக்கு உயர்த்த தேவையான ஆதாரங்களையும் ஊக்கத்தையும் நிர்வாகத்தினர் உங்களுக்கு வழங்குவார்கள்.
IT மற்றும் ITES தொழில்நுட்பத் துறையில், பணிபுரியம் துலாம் ராசியினர் தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைப் பெறுவார்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்களின் பணி நெறிமுறைகளை மட்டுமின்றி, உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் புதுமையான சிந்தனையையும் பாராட்டுவார்கள், இது உங்கள் உத்தியோகத்தில் ஒரு சிறந்த நிறைவுக்கு வழிவகுக்கும்.
துலாம் ராசியைச் சார்ந்த ஆசிரியர்களுக்கும் இந்த மாதம் நம்பிக்கைக்குரிய தருணமாக இருக்கும். இந்தக் காலகட்டம் உங்களின் தனிப்பட்ட மேம்பாடு மற்றும் உத்தியோக மேம்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும், இது உங்கள் திறன்களைச் செம்மைப்படுத்தவும் உங்கள் மாணவர்களின் மீதான தாக்கத்தை விரிவுபடுத்தவும் உங்களை அனுமதிக்கிறது.
மருத்ததுவத் துறையில் இருப்பவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், தங்கள் உத்தியோகத்தில் புதிய உயரங்களை அடைவார்கள். உங்களின் பங்களிப்புகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும், ஆனால் இந்த காலகட்டத்தில் நீங்கள் தொடர்ந்து பொறுமையாக செயல்படுவது அவசியம்.
வழக்கறிஞர்கள் இந்த மாதம் முன்னேற்றத்தில் சில பின்னடைவுகள் மற்றும் சவால்களை சந்திக்க நேரலாம். இருப்பினும், விடாமுயற்சி பலனளிக்கும், மேலும் வெற்றி இறுதியில் உங்கள் வழியில் வருவதை நீங்கள் காணலாம். .
கடைசியாக, ஊடகம் மற்றும் சினிமாவில் ஈடுபட்டுள்ள துலாம் ராசிக்காரர்கள் ஒரு அற்புதமான நேரத்தை எதிர்பார்க்கலாம். இந்த மாதம் உங்கள் அபிலாஷைகளை அடைவதற்கும் உங்கள் படைப்பு ஆசைகளை நிறைவேற்றுவதற்கும் கதவுகளைத் திறக்கும், இது உங்கள் உத்தியோகத்தில் குறிப்பாக பலனளிக்கும் காலமாக இருக்கும்.
உத்தியோகத்தில் மேன்மை பெற : புதன் பூஜை
புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் உங்கள் எண்ணங்களை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடுங்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் இருந்தால் அதிக முதலீடுகளைப் போடாதீர்கள். குறைந்த முதலீட்டில் மேற்கொள்ளுங்கள். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும்.
துலாம் ராசிக்காரர்கள் சிறிய உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவை கவனமாக கண்காணிக்க வேண்டும்; இருப்பினும், அது அவர்களின் உடல்நிலையில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தாது. டிசம்பர் மாதத்தில் நல்ல மன ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : பிருகஸ்பதி பூஜை
பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். இந்த மாதம் கூடுதல் முயற்சி மேற்கொள்வதன் மூலம் தங்கள் இலக்குகளை அடைய இயலும். இந்த காலகட்டத்தில் ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதல் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். எனவே கடின முயற்சி மேற்கொண்டு படிக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் இருக்கும் துலாம் ராசி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம் மற்றும் தங்கள் முயற்சிகளுக்கான பாராட்டைப் பெறலாம். ஆராய்ச்சித் துறை மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். கல்லூரி நிர்வாகம் உங்கள் பங்களிப்பை அங்கீகரித்து மதிப்பளிக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க : சூரியன் பூஜை
சுப தேதிகள் :3,4, 5,6,8,9,10,11,12,14,18,20,21,22,28,30
அசுப தேதிகள் :1,2,7,13,15,16,17,19,24,23,24,25,26,27,29,31
September 19, 2025
September 17, 2025
September 15, 2025