Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கன்னி டிசம்பர் மாத ராசி பலன் 2024 | December Matha Kanni Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கன்னி டிசம்பர் மாத ராசி பலன் 2023 | December Matha Kanni Rasi Palan 2024

Posted DateNovember 25, 2024

கன்னி டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2024

இந்த மாதம் நீங்கள் உத்தியோகத்தில் முன்னேற்றம் காணலாம். பணியிடத்தில் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை நீங்கள் பெறலாம். தொழில் தொடங்க நினைப்பவர்கள் புதிதாக தொழில் தொடங்கலாம் என்றாலும் முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதம் கூட்டுத் தொழில் சிறக்காது. காதலர்கள் தங்கள் உறவில் சில குழப்பங்களை உணரலாம்.  உங்கள் உறவு விவகாரங்களில் மூன்றாவது நபரை ஈடுபடுத்தாதீர்கள். கன்னி ராசி அன்பர்களின் திருமண வாழ்க்கை இந்த மாதம்  அற்புதமாக இருக்கும்,என்றாலும்  உங்கள் துணையுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், உங்கள் சிரித்த முகத்தைக் காட்டி இந்த மோதல்களைத் தவிர்க்கவும். இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உங்களுக்கு சிறிய உடல்நலப் பிரச்சினைகள் இருக்கும், எனவே வெளி உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். தேர்வுக்கு தயாராகும் கன்னி ராசி மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும்.

குடும்ப உறவு

காதலர்கள் தங்கள் உறவில் சில குழப்பங்கள் மற்றும்   சில சவால்களை சந்திக்க நேரிடலாம். உங்கள் உறவு குறித்து நீங்கள் முடிவு எடுக்கும் போது மூன்றாவது நபரை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி உறவில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் எழும் என்றாலும் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கலாம். நீங்கள் வீட்டில் உள்ள  வயதானவர்களுடன் இணக்கமான உறவைக் கொண்டிருக்கலாம். ஆனால், குழந்தைகளுடனான உங்கள் தொடர்புகள் சில சிரமங்களை ஏற்படுத்தலாம்,

திருமண உறவில் நல்லிணக்கம் காண : புதன் பூஜை

 நிதிநிலை

இந்த மாதம் உங்கள் நிதிநிலை ஸ்திரமானதாக இருக்கலாம். உங்கள் நிதி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இந்த மாதம் வாய்ப்பு கிட்டலாம். பொருளாதார முன்னேற்றம் காணும்  முக்கியமான காலகட்டம். இந்த மாதம் நீங்கள் அதிக பணத்தை சேமிப்பீர்கள். பட்ஜெட் அமைத்து வரவு செலவுகளை மேற்கொள்வீர்கள். உங்கள் பணத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கூடுதலாக, இந்த மாதம் முழுவதும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து முழுமையான ஊக்கத்தையும் ஆதரவையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்கள் பொருளாதார  வெற்றியை நோக்கி நீங்கள் உழைக்கும்போது அவர்களின் உதவி முக்கியமானது. அவர்களின் ஆதரவு உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும். அது உங்கள் நோக்கங்களில் கவனம் செலுத்துவதை எளிதாக்குகிறது. ஒட்டுமொத்தமாக, டிசம்பர் மாதம் உங்கள் நிதிப் பயணத்திற்கான வாக்குறுதிகள் நிறைந்த மாதமாகும், மேலும் உங்கள் அன்புக்குரியவர்களின் உதவியுடன் அதை வெற்றிகரமாக வழிநடத்தலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை

 உத்தியோகம்

இந்த மாதம்  நீங்கள் உங்கள் தொழிலில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அனுபவிக்கலாம். இந்த மாதம்  முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கான பல வாய்ப்புகளை உறுதியளிக்கிறது,  குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தொழில் மேம்பாட்டிற்காக பாடுபடும்போது உங்களின்  முன்னேற்றத்திற்கு  அவர்களின் ஊக்குவிப்பு முக்கிய பங்கு வகிக்கும். இந்த தனிப்பட்ட ஆதரவுடன் கூடுதலாக, அலுவலக நிர்வாகமும் உங்களின்  வளர்ச்சியை அங்கீகரித்து உதவும், உங்களின் முயற்சிகளுக்கான பாராட்டைப் பெறுவீர்கள். பணியிடத்தில் நேர்மறையான பணிச்சூழல் காணப்படும்.

உற்பத்தித் துறையில் பணிபுரியும் கன்னி ராசிக்காரர்களுக்கு, அவர்களின் கடின உழைப்புக்கான வெகுமதிகள் சில தாமதங்களுடன் வரக்கூடும், இந்த கடின உழைப்பு இறுதியில் அங்கீகரிக்கப்பட்டு வெகுமதி கிடைக்கும் என்பதால் பொறுமையாக இருப்பது அவசியம். வெகுமதிகளுக்கு நேரம் ஆகலாம், ஆனால் விளைவு மதிப்புக்குரியதாக இருக்கும். இதற்கு நேர்மாறாக, IT மற்றும் ITES துறைகளில் உள்ளவர்கள், அவர்களின் திறமைகள் மற்றும் பங்களிப்புகளுக்கு உடனடி பாராட்டுக்களைப் பெறுவார்கள், மேலும் அவர்களது மேலதிகாரிகள் மற்றும் சகாக்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறுவார்கள், இது மேலும் தொழில்முறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

கல்வித் தொழிலில் ஈடுபடும் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடிய சில சிறிய சவால்களை சந்திக்க நேரிடும், ஆனால் விடாமுயற்சி அவர்களை இறுதியில் வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.. இடையூறுகள் ஏற்பட்டாலும், தங்கள் பணியில் உள்ள அர்ப்பணிப்பு இறுதியில் பிரகாசிக்கும்.  சுகாதார வல்லுநர்கள் தங்கள் நிர்வாகம் மற்றும் நோயாளிகள் இருவரிடமிருந்தும் அங்கீகாரம் பெறலாம்.. இந்த காலம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், ஏனெனில் அவர்களின் கடின உழைப்புஅங்கீகரிக்கப்படும்.

சட்டத் துறையில் பணிபுரியும் கன்னி ராசிக்காரர்களுக்கு, வாடிக்கையாளர்களிடமிருந்தும் அரசாங்க ஒப்பந்தங்களிலிருந்தும் குறிப்பிடத்தக்க நிதி வெகுமதிகள் கிடைக்கும். அவர்களின் முயற்சிகள் கவனிக்கப்படாமல் போகாது, மேலும் இந்த நிதி அங்கீகாரம் அவர்களின் தொழில்முறை முன்னேற்றத்திற்கு சாதகமாக பங்களிக்கும். கடைசியாக, ஊடகம் மற்றும் சினிமா துறையில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்கள், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் நிறைந்த ஒரு அற்புதமான நேரத்தை எதிர்நோக்க முடியும். அவர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படும் காலம் இதுவாகும், இது அவர்களின் வாழ்க்கையில் எதிர்கால வெற்றிகளுக்கு வழி வகுக்கும்.

தொழில்

தொழில் முதலீடு குறித்து நீங்கள் ஆலோசித்து பொறுமையாக முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த மாதம் கூட்டுத் தொழிலை தவிர்த்து விடுங்கள்.சுயமாக தொழில் தொடங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க வேண்டும்.

ஆரோக்கியம்

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் அஜீரணக் கோளாறு மற்றும் காலில் சில சிறிய பிரச்சனைகள் வரலாம். வெளி உணவுகளைத்  தவிர்ப்பதன் மூலம் செரிமான அமைப்பில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல மன ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

உங்கள் ஆரோக்கியம்  மேம்பட : சனி பூஜை

மாணவர்கள்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த மாதம் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். ஆசியரியர்களை அனுசரித்து நட்டந்து கொள்ள வேண்டும்.  முதுகலை கல்வி மாணவர்கள் தங்கள் படிப்பில் கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். உங்கள் மதிப்பெண்களை மேம்படுத்த நீங்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்கக் கூடாது. ஆராய்ச்சிக் கல்வியில் இருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு உங்கள் ஆய்வறிக்கையை சமர்பித்து வெற்றி காண ஒரு சிறந்த நேரம்.

கல்வியில் சிறந்து விளங்க : பிருகஸ்பதி பூஜை

  சுப தேதிகள் : 1,2,7,13,15,16,17,19,3,4, 5,6,8,9,10,11,12

 அசுப தேதிகள் : 24,23,24,25,26,27,29,31,14,18,20,21,22,28,30