அலுவலகத்தில் உங்கள் இலக்கை அடைய நீங்கள் கடின முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிதாக இருக்கலாம். எனவே நீங்கள் பொறுமையாகச் செயல்படவேண்டும். உங்கள் பணிகளை பிழையின்றி முடித்து அளிக்க நீங்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும். இந்த மாதம் நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க தாமதம் ஆகலாம். உங்கள் பணிகளை நீங்களே எடுத்து செய்து முடிக்க வேண்டும். சக பனியாயாளர்களை நம்பி ஒப்படைத்தல் கூடாது. இந்த மாதம் நீங்கள் புதிய தொழிலைத் தொடங்கலாம். தனியாகத் தொழில் செய்வது சிறப்பு. கூட்டுத் தொழிலை தவிர்க்க வேண்டும். உங்கள் தொழில் குறித்த முடிவுகளில் மூன்றாவது நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். இந்த மாதம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். இருவருக்கும் இடையிலான புரிந்துணர்வு சிறப்பாக இருக்கலாம். இருவரும் இணைந்து வெளியிடங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டலாம். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கலாம். மாணவர்கள் தங்கள் படிப்புகளில் சிறந்து விளங்குவார்கள்.
குடும்ப உறவு
காதலர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். இருவரும் இணைந்து வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்கள் உறவு சார்ந்த விஷயங்களை மூன்றாம் நபருடன் விவாதிக்காதீர்கள்.அதனால் உங்கள் உறவு நிலை பாதிக்கப்படலாம். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.. பெரியவர்களுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும். குழந்தைகளுடனான உங்கள் உறவு இணக்கமாகவும் சுமுகமாகவும் இருக்கும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : புதன் பூஜை
நிதிநிலை
இந்த மாதம் உங்கள் சேமிப்பு மூலம் உங்கள் வங்கி இருப்பு உயரலாம். பணத்தை முதலீடு செய்ய இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவு புரிவார்கள். பிறருக்கு பணத்தை கடன் கொடுக்க வேண்டாம் மற்றும் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முயற்சிக்க வேண்டாம், ஏனெனில் தற்போதைய நேரம் அதற்கு உகந்ததாக இல்லை.
உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை
உத்தியோகம்
உத்தியோகத்தில் முன்னேற நீங்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு இந்த மாதம் கிட்டாது. எனவே பொறுமையாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும். உங்கள் பணியில் தவறுகள் நேராத வண்ணம் கவனமுடன் பணியாற்ற வேண்டும். உங்கள் கடின உழைப்பு இருந்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்க சிறிது கால் தாமதம் ஆகலாம்.
உற்பத்தித் துறையில் இருக்கும் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் உழைப்புக்கான ஊதியத்தைப் பெறலாம். நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
IT/ITES துறையில் இருப்பவர்கள் தொழிலில் அடுத்த கட்டத்தை அடையலாம். ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் தங்கள் அர்ப்பணிப்பு காரணமாக பள்ளி அல்லது கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து பாராட்டுகளைப் பெறலாம். மருத்துவர்கள் தங்களின் கடின உழைப்புக்கு மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து தகுந்த வெகுமதிகளைப் பெறலாம். சட்ட வல்லுநர்கள் தங்கள் விருப்பத்தை அடைய கடினமாக உழைக்க வேண்டும். இந்த மாதம் உங்கள் பொறுமையை சோதிக்கும் காலக்கட்டமாக இருக்கும். இருப்பினும், வெற்றி சிறிது தாமதத்துடன் உங்களை வந்தடையும். மீடியா மற்றும் சினிமா தொழிலில் இருக்கும் கும்ப ராசிக்காரர்கள் தொழிலில் உச்சத்தை அடையலாம். உங்கள் படைப்புத் திறன் பிறரால் பாராட்டப்படும், உங்கள் லாபம் புதிய உயரத்தை தொடும்.
உத்தியோகத்தில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை
தொழில்
புதிய தொழில் தொடங்கத் திட்டமிடுபவர்கள் இந்த மாதம் தொடங்கலாம். ஏற்கனவே தொழில் செய்து வரும் நபர்கள் அதிகபட்ச லாபத்தை அனுபவிக்கலாம். இந்த மாதம் நீங்கள் கூட்டுத் தொழிலை மேற்கொள்வது உசிதமல்ல. அதனைத் தவிர்க்க வேண்டும். தொழில் குறித்த முடிவுகளில் மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள்.
ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் வயிறு அரிப்பு போன்ற சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், வெளியில் சாப்பிடாமல் இருப்பதன் மூலம் அதைத் தவிர்க்கலாம். நீங்கள் நல்ல மன ஆரோக்கியத்தையும் பேணுவீர்கள். அதிகாலையில் தியானம் செய்வது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : பிருகஸ்பதி பூஜை
மாணவர்கள்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயின்று சாதனைகளைப் படைக்கலாம். ஆசிரியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். . வெளிநாட்டில் படிக்க விரும்பும் முதுகலை பட்டதாரி மாணவர்கள் இந்த மாதம் தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காணலாம். ஏற்கனவே வெளி நாட்டில் படிக்கும் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கையை முடிக்க பேராசிரியர்களிடமிருந்து அனைத்து வழிகளிலும் ஆதரவைப் பெறுவார்கள், மேலும் உங்கள் ஆராய்ச்சிக்காக புதிய இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்க : சுக்கிரன் பூஜை
சுப தேதிகள் : 1,2,3,6,8,9,10,11,12, ,25,14, 20,21,22,23,31
அசுப தேதிகள் : 4,5,7, 28,17,18,19,24,13,15,16,26,27,29,30
September 19, 2025
September 17, 2025
September 15, 2025