மேஷ ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் உங்கள் தொழில் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற காலமாகும். நீங்கள் சில சிறிய பின்னடைவுகளை சந்திக்க நேரிடலாம், ஆனால் இறுதியில் தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றியை அனுபவிப்பீர்கள். உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடம் மகிழ்ச்சியையும் அற்புதமான நினைவுகளையும் பகிர்ந்து கொள்வார்கள். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைப் பெறுவீர்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு உடல்நிலையில் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம். உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது. மேஷ ராசிக்காரர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் சிரமங்களை சந்திப்பார்கள். எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேற்படிப்பு அல்லது வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம்.
காதலர்கள் இந்த மாதம் சிறிது கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் உறவில் சில பிரச்சினைகள் எழலாம். உங்கள் உறவு விவக்காரங்களில் மூன்றாம் நபரை ஈடுபடுத்தாதீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை தக்க சமயத்தில் உங்களுக்கு ஆதரவளித்து ஒத்துழைப்பார். தம்பதிகள் ஒன்றாக இணைந்து வெளி இடங்களுக்கு சென்று மகிழ இந்த மாதம் ஏதுவாக உள்ளது. எனவே இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கலாம். உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். உங்கள் குழந்தைகளுடனான உறவு மிகவும் சவாலாகவும் கடினமாகவும் இருக்கும், பொறுமையாக இருந்தால் விஷயங்கள் விரைவில் மாறும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
இந்த மாதம் கணிசமான அளவில் பணத்தை சேமிக்க நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். இந்த மாதம் நீங்கள் செலவுகளை கண்காணித்து மேற்கொள்வீர்கள். அது ஆரோக்கியமான நிதிநிலையை அளிக்கும். திட்டமிட்டு வரவு செலவுகளை மேற்கொள்வதன் மூலம் அனாவசிய செலவுகளைத் தவிர்க்க முடியும். இந்த மாதம் நீங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ள ஏதுவாக உள்ளது. அதன் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். கவனமுடன் ஆராய்ந்து முதலீடு மேற்கொண்டால் நீங்கள் லாபம் காணலாம். பிறருக்கு கடன் கொடுக்கும் விஷயங்களில் நீங்கள் கவனமாக இருங்கள். தற்போதைய நிலையில் அதனை தவிர்ப்பது நல்லது. உங்கள் நிதிநிலையில் முன்னேற்றம் காண உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம். பணத்தை நிர்வகிக்கும் விஷயங்களில் அவர்கள் உங்களுக்கு ஊக்கத்தையும் ஆதரவையும் அளிக்கலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை
இந்த மாதம் உத்தியோகத்தில் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு வழிகாட்டியாக செயல்படுவார்கள். இந்த மாதம் உங்கள் வருமானம் உயரலாம். சக பணியாளர்களின் ஒத்துழைப்பை நீங்கள் பெறலாம். ஒரு சிலருக்கு ஆன் சைட் வாய்ப்புகள் கிட்டலாம். ஊடகம் மற்றும் திரைத் துறையில் இருப்பவர்கள் சிறந்த முன்னேற்றம் காணலாம். சட்டத் துறையில் பணி புரிபவர்கள் சிறு பின்னடைவுகளுக்குப்பின் வெற்றி காணலாம். மருத்துவர்களுக்கு அதிக அளவில் வெற்றி வாய்ப்புகள் கிட்டலாம். ஐ டி துறையில் இருப்பவர்கள் சிறு பின்னடைவுகளுக்குப் பின் வெற்றி வாய்ப்பினைப் பெறலாம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் உள்ளவர்கள் புதிய யோசனைகளைக் கொண்டு வர இது ஒரு சிறந்த நேரம். உற்பத்தி சார்ந்த துறையில் இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் உங்கள் வளர்ச்சிக்காக பொறுமை காக்க வேண்டும், சில பின்னடைவுகளுக்குப் பிறகு உங்கள் வரவுகளைப் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் மேன்மை பெற : சனி பூஜை
தொழில் செய்யும் மேஷ ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறந்த முன்னேற்றம் காணலாம். புதிய தொழில் தொடங்க இது ஏதுவான காலக்கட்டமாக இருக்கலாம். ஆனால் தொழிலில் முதலீடு செய்ய அதிக கடன் வாங்குதல் கூடாது. இந்த மாதம் கூட்டுத் தொழிலில் இறங்காதீர்கள். தனியாக வியாபாரம் செய்வது நல்லது. உங்களுக்கு கீழ் பணி புரிபவர்கள் மீது கண் மூடித்தனமான நம்பிக்கை வைக்காதீர்கள். சிறிது கவனமுடன் செயல்படுங்கள். தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் முன்னேற்றங்கள் காணப்படும். இந்த மாதம் தொழிலில் போட்டியாளர்களை வெல்வதன் மூலம் நீங்கள் சிறந்த வருமானம் பெறுவீர்கள்.
மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சியடையும் காலம் இது. புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது சிறந்த நேரம். மேஷ ராசிக்காரர்கள் தங்கள் நிறுவனத்தைத் தொடங்கும்போது அதிக கடன்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். கூட்டுத் தொழிலையும் இந்த மாதம் தவிர்க்க வேண்டும். தொழில் சார்ந்த முடிவுகளை சுயமாக எடுக்க வேண்டும். உங்கள் கீழ் பணிபுரிபவர்களை கண்காணிக்க வேண்டும், மேலும் அவர்களை கண்மூடித் தனமாக நம்புவதைத் தவிருங்கள். இந்த மாதம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். மேஷ ராசிக்காரர்கள் இந்த முறை நல்ல லாபம் காண்பீர்கள். உங்கள் போட்டியாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்திக்கலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் உடல் நலத்தில் சிறு பின்னடைவு ஏற்படும். அடிக்கடி சளி, சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகளை சந்திக்கலாம். உங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது நல்லது. இந்தக் காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மனரீதியாக, மேஷ ராசிக்காரர்கள் மனச்சோர்வு மற்றும் ஊக்கமில்லாமல் இருப்பார்கள்; அதிக நம்பிக்கையுடனும் ஆற்றலுடனும் உணர, யோகா மற்றும் தியானத்தை முயற்சிக்கவும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : புதன் பூஜை
பள்ளி மாணவர்கள் தங்கள் அறிவையும் ஞானத்தையும் அதிகரிக்க இது ஒரு சிறந்த தருணம், மேலும் அவர்கள் உயர் கல்வி தரங்களைப் பெறலாம். இளங்கலைப் பட்டதாரிகளுக்கு, உங்கள் முயற்சிகள் நல்ல மதிப்பெண்களுடன் வெகுமதியைப் பெறுவதற்கான சிறந்த தருணம் இது. இந்த நேரத்தில், முதுகலை மற்றும் சர்வதேச கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். நீங்கள் விரும்பும் நாட்டில் மற்றும் கல்லூரியில் நீங்கள் படிக்க முடியும். ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கைக்கான அங்கீகாரம் பெற பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்க : பிருகஸ்பதி பூஜை
சுப தேதிகள் : 1,2,3,6,8,12,13,17,20,22,24,26,29,31
அசுப தேதிகள் : 4,7,11,14,18,21,25,28
September 19, 2025
September 17, 2025
September 15, 2025