Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
தாலி கயிற்றை எந்த கிழமையில் மாற்ற வேண்டும்? இந்த நேரம் மாற்றினால் சிறப்பாம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தாலி கயிற்றை எந்த கிழமையில் மாற்ற வேண்டும்? எப்படி மாற்றினால் நல்லது

Posted DateNovember 16, 2024

தாலி என்பது மங்களகரமான ஒன்று ஆகும். திருமண நேரத்தில் மேள தாளம் முழங்க  மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டுவது நமது மரபு ஆகும். இந்த தாலியை திருமாங்கல்யம் என்றும் கூறுவார்கள். அவரவர் குல வழக்கப்படி தாலியின் அமைப்பு இருக்கும்.  பொதுவாக பதினாறு பிரிவுகளாக தாலிக் கயிறு அமைய வேண்டும் என்று கூறுவார்கள். அதனை கருத்தில் கொண்டு தான் நமது முன்னோர்கள் பதினாறும்  பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துவார்கள்.

புனிதமாக கருதப்படுகின்றது தாலி. தாலியை மஞ்சள் கயிற்றிலும், சில வசதியுள்ளவர்கள் தங்க செயினிலும் அணிந்து வருகின்றனர். இந்த தாலிக் கயிறானது நாளாக நாளாக நிறம் மாறலாம். அல்லது நைந்து போகலாம். மஞ்சள் கயிற்றில் அணிந்திருப்பவர்கள் வருடத்திற்கு 2 முறையாவது தாலி கயிற்றினை நிச்சயமாக மாற்ற வேண்டுமாம். அதிலும் ஆடிப்பெருக்கில் மாற்றுவது மிகவும் சிறப்பாகும்.

அந்த நாளை தவிர வேறு எந்த நாட்களில் மாற்றலாம் என்ற சந்தேகம் பல பெண்களிடம் இருக்கும். அதற்கான பதிலை இங்கு காணலாம்.

தாலிக் கயிறு மாற்ற உகந்த நாட்கள்

வளர்பி  பஞ்சமி, தசமி  நாளில் திருமாங்கல்யக் கயிறை மாற்றலாம். திங்கள், செவ்வாய், வியாழன், அன்று மாற்றலாம். பொதுவாக  சாதாரண நாட்களில் வெள்ளிக்கிழமை மாற்றக் கூடாது. இதற்கு சில விதி விலக்குகள் உண்டு. தெய்வங்களின்  திருக்கல்யாண நாள் வந்தால், அது எந்த நாளாக இருந்தாலும் அன்று  எபொழுது வேண்டுமாலும் தாலிக் கயிறை மாற்றலாம். அவரவர்கள் இருக்கும்  அந்தந்த ஊரில் அந்தந்த அம்பிகைக்கு திருமணம் நடக்கும் நாளில் அது எந்த நாளாக இருந்தாலும் தாலி  மாற்றிக் கொள்ளலாம்.

 தாலிக் கயிறு மாற்ற முக்கிய நாட்கள்.

ஆடிப் பதினெட்டு எந்த கிழமை வந்தாலும் மாற்றலாம். மாசி மகம் அன்று மாற்றிக் கொள்ளலாம். மாசிக் கயிறு பாசி ஏறும் வரை நிலைத்து இருக்கும் என்று கூறுவார்கள். அதாவது கணவனுக்கு தீர்க்காயுள் இருக்கும் என்று பொருள்.  திருவாதிரை திருநாள் அன்று நோன்பு எடுத்து கயிறு மாற்றிக் கொள்ளலாம். அதிகாலை  பிரம்ம முகூர்த்த வேளையில் இறைவன் முன் அமர்ந்து மாற்ற வேண்டும்.

தாலியை எவ்வாறு மாற்றுவது

முதலில் ஒரு  மஞ்சள் கயிறை கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.பிறகு தாலியை கழற்ற வேண்டும். தாலியை முன் பக்கமாக கழற்ற வேண்டும். பின் பக்கமாக கழற்றக் கூடாது. சுத்தமான துணி விரித்து கோர்க்கும்  வகையில் உருக்களை வரிசையாக வைக்க வேண்டும். அம்பிகையின் திருவுருவத்திற்கு முன் அமர்ந்து மாற்றிக் கொள்வது நல்லது. . உங்களுக்கு தெரிந்த அம்பிகையின் ஸ்தோத்திரம் கூறி அர்ச்சனை செய்து நல்ல நேரம் பார்த்து மாற்றிக் கொள்ள வேண்டும். கணவர் அருகே இருந்தால் அவர் கையால் கட்டிக் கொள்ள வேண்டும். கணவர் வெளியூரில் இருந்தால் நீங்களே கட்டிக் கொள்ளலாம். அல்லது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அல்லது பழுத்த சுமங்கலிகள் கையால் கட்டிக் கொள்ளலாம். ஒரு பெண்ணின் தாலியை மற்றொரு பெண் காணுதல் கூடாது. அதனால் தான் பெரியவர்களை வைத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.  பழைய கயிறை மண்ணில் புதைத்து விடலாம். மாதம் தோறும் தாலிக் கயிறை மாற்றக் கூடாது. ஆண்டுக்கு இரண்டு முறை மாற்ற வேண்டும்.

செய்யக்கூடாத தவறுகள்

தாலிக்கயிறு மாற்றும் போது பாதியிலேயே எழுந்திருக்க கூடாது. தேவையான பொருட்கள் அனைத்தையும் அருகில் வைத்து கொண்டு தான் மாற்ற வேண்டும். திருமாங்கல்யம், மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றை ஒரு தட்டில் எடுத்து அருகில் வைத்து கொள்ள வேண்டும்.கர்ப்பமாக இருக்கும் தாலி கயிற்றை மாற்றக்கூடாது. பிரசவம் ஆன பிறகே மாற்ற வேண்டும்.