சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக வரும் 1.30 மணி நேரமே பிரதோஷ காலமாகும். தினமும் வரும் இந்தப் பிரதோஷவேளை சிவவழிபாட்டுக்கு உகந்தது. மாலையில் 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம். ஆலயம் சென்று வழிபட முடியாதவர்கள், அந்த வேளையில் வீட்டிலேயே விளக்கேற்றி சிவனை நினைத்து வணங்கலாம்.நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணம் நமது தீய வினைகளே ஆகும். கடந்த காலத்தில் நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த தீய செயல்கள் தான் முன்வினைப் பயனாக இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்க நேருகிறது. நமது தீவினைகளை அதாவது தீய கர்மாக்களை அகற்றக் கூடிய சக்தி பிரதோஷ வழிபாட்டிற்கு உண்டு. பிரதோஷ நேரத்தில் நாம் சிவனை வழிபட நமது தீவினைகள் யாவும் அகலும் என்பது நம்பிக்கை ஆகும்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறக்கும் போதே மூன்று கடன்களுடன் தான் பிறக்கிறோம் அவை தேவ கடன், ரிஷி கடன் மற்றும் பித்ரு கடன். தேவ கடன் என்பது குல தெய்வ வழிபாடு செய்யாமல் இருப்பது. ரிஷி கடன் என்பது ரிஷிகளை, சாதுக்களை, சன்னியாசிகளை அவமானப்படுத்துவதால் ஏற்படுவது. பித்ரு கடன் என்பது முன்னோர்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல் இருப்பது, தாய் தந்தையைக் கைவிடுவது போன்றவற்றால் ஏற்படுவது. முற்பிறவி கடன் மற்றும் இந்தப் பிறவிக் கடன் என நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கடன் சம்பந்தமான பிரச்சினையில் தவிக்கிறோம் இந்தப் பிறவியும் ஒரு கடன் தான் இந்த பிறவிப் பிணி தீரவும் வாங்கிய கடன் அடைக்கவும் பல இறைவழிபாடுகளை நமது முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். யாருக்கும் கடனாளியாக வாழ்வது என்பது விருப்பமில்லாத ஒன்று என்று தான் கூற வேண்டும். என்றாலும் நாம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ கடனாளியாக ஆகி விடுகிறோம்.மேலும் நமது வாழ்வில் இன்பங்களை துய்க்கவும் விரும்பிய பொருட்களை வாங்கவும் நாம் கடன் வாங்குகிறோம். சில சமயங்களில் பணப் பற்றாக்குறை காரணமாக நாம் பிறரிடத்தில் கடன் வாங்குகிறோம். இந்தக் கடன்கள் யாவும் தீர செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு உதவிகரமாக இருக்கும்.
செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம், ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது. ருணம் என்றால் கடன்; விமோசனம் என்றால் விடுதலை. நாம் பெற்ற கடனில் இருந்து விடுதலை பெற செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். சிவனை தேவர்கள் மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம் என்று அழைக்கபடுகிறது. உலகை காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம் இந்த பிரதோஷ காலமாகும். செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ, விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசிரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரகாரர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும்.செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருனம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும்.
கடன் தீர பரிகாரம்.
செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றுங்கள். ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ரூபாயை அந்த மஞ்சள் துணியில் வைத்து, 2 வில்வ இலைகளையும் அதில் வைத்து, முடிச்சாகக் கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். சிவசிவ என்ற மந்திரத்தை 5 நிமிடங்கள் கண்களை மூடி சொல்லுங்கள். கோவிலுக்கு செல்வதாக இருந்தால் இந்த முடிச்சை கட்டி கையோடு எடுத்துச் சென்று சிவன் கோவிலில் அமர்ந்து பிரார்த்தனை வைக்கலாம். “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும். உங்களுடைய கடன் சுமை தீர வேண்டும், கர்ம வினை குறைய வேண்டும், என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த முடிச்சை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் வைத்த வேண்டுதல் கூடிய சீக்கிரத்தில் நிறைவேறிவிடும். கடன் பிரச்சினை தீர்வதற்கு உண்டான அத்தனை முயற்சிகளையும் நீங்கள்மேற்கொள்வதுடன் உங்களின் இந்த பிரார்த்தனையும் சேரும் பொது இறைவன் அருளால் உங்கள் கடன் சுமை விரைவிலேயே தீர்ந்து விடும். உங்கள் கடன் அடைந்தவுடன் அந்த முடிச்சை கோவில் உண்டியலில் போட்டு விடுங்கள். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை மேற்கொண்டு உங்கள் கடன் சுமை தீர எங்கள் வாழ்த்துக்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025