Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
ஞாபக சக்தியை வளர்க்கும் கந்தர் அனுபூதி பாடல்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஞாபக சக்தியை வளர்க்கும் கந்தர் அனுபூதி பாடல்

Posted DateOctober 10, 2024

ஞாபக சக்தியை நினைவாற்றல்  என்றும் கூறலாம். நினைவாற்றல் என்பது ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள்  மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்க முடியும். இந்த மீட்டெடடுக்குக்ம் திறன் தான் ஞாபக சக்தி ஆகும். குறிப்பாக பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் முக்கியமானதொரு பிரச்சினையாக விளங்குவது கற்பிக்கப்படுவதை விளங்கிக் கொள்ளச் செய்வதும் கிரகிக்கச் செய்வதுமாகும். மனப்பாடம் செய்த விஷயங்களை மாணவர்கள் சில சமயங்களில் மறந்து விடுகின்றனர். ஆனால் தெளிவான கிரகிப்புடன் கற்றவை நீண்ட காலம் நினைவில் நிற்கும். இந்த வகையில் கிரகித்தலுடன் விளங்கிக் கொள்வதும் அதனை நினைவாற்றலுடன் மீட்பதும் கற்றல் செயற்பாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது.

 விஷயங்களை கிரகிப்பதற்கும் அவற்றை நினைவில் கொள்வதற்கும் ஒரு திறமை வேண்டும். இந்தத் திறமை எல்லாருக்கும் ஒரே மாதிரியாக அமைந்து விடுவது இல்லை. ஒரு சிலருக்கு ஞாபகத் திறன் அதிகமாக இருக்கும்.  ஒரு சிலருக்கு அது குறைவாக இருக்கும். குறைவான ஞாபகத் திறன் இருப்பவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒரு சில மாணவர்கள் தாங்கள் படித்த பாடங்களை நினைவில் கொள்வதில் சிரமப்படுவார்கள். அவர்கள் ஞாபக சக்தியை அதிகரித்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கூடுதலாக ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை பெற்றோர்கள் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

முயற்சியுடன் இறை அருளும் இருந்தால் நாம் எண்ணியதை எளிதில்  அடையலாம்.  எனவே ஞாபக சக்தி அதிகரிக்க உதவும் கந்தர் அநுபூதி பாடலை இந்தப் பதிவில் அளிக்கிறோம். இதனை தினமும் படித்து வந்தால் ஞாபக சக்தி கூடும்.

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது என்றால் முருகப்பெருமானின் இந்த பாடலை படிக்க சொல்லுங்கள். கந்தர் அனுபூதியில் வந்திருக்கும் 51 ஆவது பாடல் தான் இது அருணகிரிநாதர் நமக்கு அளித்த பொக்கிஷம். ஞாபக சக்தி பெற கந்தர் அனுபூதி பாடல்

முருகன் குமரன் குகன் என்று

மொழிந்து உருகும் செயல்தந்து

உணர்வு என்று அருள்வாய் பொருபுங் கவரும்,

புவியும், பரவும் குருபுங்கவ எண்குண பஞ்சரனே

 முருகப்பெருமானின் இந்த சிறப்பு வாய்ந்த பாடல் அனைவருக்கும் பயன்படும். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டும் அன்றி அனைவருக்கும் இது உதவிகரமாக இருக்கும். நான்கு வரிகளே கொண்ட இந்தப் பாடலை பார்த்துப் படிக்க படிக்க நாளடைவில் நீங்கள் பாராமலே சொல்லும் அளவிற்கு உங்கள் ஞாபக சக்தி கூடும். வயதுப் பிரச்சினையால் கூட ஒரு சிலர் ஞாபக மறதியால் அவதிப்படுவார்கள். அவர்கள் கூட இந்த பாடலை படிப்பதன் மூலம் தங்கள் குறைகளுக்கு நிவர்த்தி காணலாம். நம்பிக்கையுடன் இந்தப் பாடலை படித்து உங்கள் குறைகள் தீர்ந்து நலமுடன் வாழுங்கள்.