நவராத்திரியின் முதல் நாள், ஷைலபுத்ரி தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ஷைல என்றால் மலை புத்ரி என்றால் மகள். மலைகளின் ராஜாவான அதாவது ராஜா ஹிமவானின் மகளான பார்வதியை வணங்க வேண்டும். இவள் ஆற்றலையும், வலிமையும் தரக் கூடிய தேவியாக விளங்குகிறாள். முதல் நாளில் ஷைல்புத்ரி தேவிக்கு சுத்தமான நெய்யை கொண்டு அபிஷேகம் அர்ச்சனை செய்வதன் மூலம் பக்தர்கள் ஆரோக்கிய வாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.அவளை வழிபடுவதால் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். தீய எண்ணங்களை ஒழியும். இவளுக்குரிய நிறமாக சிவப்பு நிறம் சொல்லப்படுகிறது.
இரண்டாம் நாளில் அன்னை பிரம்மச்சாரிணியாக வணங்கப்படுகிறாள். ‘பிரம்ம’ என்றால் தபஸ் என்று பொருள். பிரம்மச்சாரிணி என்றால் ‘தப சாரிணி’ என பொருள்படும். இவள் மிகவும் எளிமையாக காட்சி தருபவள். இந்த வடிவத்தில், பார்வதி கடுமையான தவம் செய்தார். சிவபெருமானை மணந்து கொள்வதற்காக அவள் கடும் தவம் செய்தாள். 1,000 ஆண்டுகள் பழங்கள் மட்டுமே உட்கொண்டு தரையில் உறங்கினாள், மேலும் 100 ஆண்டுகள், அவள் தவத்தின் ஒரு பகுதியாக இலை காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டாள்.இந்த தேவி அறிவு மற்றும் ஞானத்தின் அம்சமாகத் திகழ்பவள். இவள் தூய்மை மற்றும் பக்தியின் அடையாளமாக கருதப்படுகிறாள். அடர் நீலம் இவளுக்குரிய நிறமாக சொல்லப்படுகிறது.
சந்திரகாந்தா பார்வதி அன்னையின் மூன்றாவது வடிவமாக கருதப்படுகிறாள். இவரது பெயருக்கு, “மணி போன்ற அரை நிலவைக் கொண்டவர் என்று பொருள். இவருடைய மூன்றாவது கண் எப்போதும் திறந்திருக்கும் எனவும், இவர், எப்போதும் அரக்கர்களுக்கு எதிரான போருக்கு தயாராக இருப்பவர். இவருடைய கருணையால் பக்தர்களின் அனைத்து பாவங்களும், துன்பங்களும், உடல், மன உபத்திரவங்களும், பேய் தடைகளும் ஒழிக்கப்படுகின்றன என்று கருதப்படுகிறது. இவரது உக்கிர வடிவம் சண்டி அல்லது சாமுண்டிதேவி என்று கூறப்படுகிறது. மற்ற நேரங்களில், இவர், அமைதியின் உருவகமாக சித்தரிக்கப்படுகிறார். இவளை மஞ்சள் நிறத்தில் அலங்கரித்து வழிபட வேண்டும்.
நவராத்திரி 4ம் நாள் – “கூ” என்றால் சிறிய என்று பொருள். “உஷ்மா” என்றால் வெப்ப மயமான என்று பொருள். “அண்ட” என்றால் உருண்டை வடிவத்தில் உள்ளது. சிறிய வடிவிலான வெப்பமயமான உருண்டை வடிவிலான உலகத்தை உருவாக்கியவள் என்பதால் இந்த தேவிக்கு கூஷ்மாண்டா தேவி என்ற பெயர். நவராத்திரியின் நான்காம் நாளில் அம்பிகையை கூஷ்மாண்டா தேவியாக வழிபடுகிறோம். இவளே அனைத்து படைப்புக்களுக்கும் தாயாக கருதப்படுகிறாள். இந்த நாள் பூமியின் இயற்கை மற்றும் தாவரங்களுடன் தொடர்புடையது. அவளுக்கு 8 கைகள் உள்ளன. எனவே இவளுக்கு அஷ்ட புஜ தேவி என்ற பெயரும் உண்டு.செல்வ செழிப்பை அருளும் தேவியாகவும் இருக்கும் இவளை பச்சை நிறத்தில் அலங்கரித்து வழிபட வேண்டும்.
ஸ்கந்தன்/கார்த்திகேயனின் தாயான அன்னை பார்வதி தேவி ஸ்கந்தமாதா என்று குறிப்பிடப்படுகிறார். பார்வதி தேவியின் இந்த திருவுருவத்தை வழிபடுபவர்கள் முருகப் பெருமானின் அருளையும் பெறுகிறார்கள். அன்னை உக்கிரமான சிங்கத்தின் மீது அமர்ந்து இருப்பாள். தனது மடியில் குழந்தை முருகனை வைத்திருப்பாள். பத்மாசனம் என்னும் ஆசனத்தில் தாமரை மலரின் மீது அமர்ந்திருப்பாள். இவளை சாம்பல் நிறத்தில் அலங்கரித்து வழிபட வேண்டும்.
மகிஷாசுரனை அழிப்பதற்காக பார்வதி தேவி காத்யாயனி தேவியாக உருவெடுத்தாள். இவள் போருக்கு உரிய தேவியாவாள். இவள் தைரியத்தையும், வெற்றியையும் தரக் கூடியவள். நவராத்திரியின் ஆறாம் நாள் மா காத்யாயனியை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பார்வதி தேவி காத்யா முனிவரின் வீட்டில் பிறந்ததாக த்ரிக் பஞ்சாங்கம் கூறுகிறது, அதனால்தான் இந்த தேவியின் பெயர் காத்யாயனி என்று அழைக்கப்படுகிறது. இவளை ஆரஞ்சு அல்லது காவி நிறத்தில் அலங்கரித்து வழிபட வேண்டும்.
பார்வதி தேவி, சும்ப மற்றும் நிசும்ப என்ற அசுரர்களை தன் தங்க தோலை நீக்கி கொன்றதால் காளராத்திரி என்று பெயர். மிகவும் உக்கிரமான அம்சத்தில் பார்வதி தேவி காளராத்திரியாக வணங்கப்படுகிறாள். கழுதையை வாகனமாகக் கொண்டவள்.அவள் இரவைக் குறிக்கிறாள். இவளை வழிபடுவதன் மூலம், அன்னை (அறியாமை)இருள் பயத்தை அழிப்பதால், பக்தர்கள் ஆறுதலையும் தைரியத்தையும் பெறுகிறார்கள். அவள் பேய்கள், தீய ஆவிகள், திருஷ்டி தோஷங்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அழிக்கிறாள்.கருமை நிறத்தில் இருப்பவள். துர்கையின் இந்த வடிவம் தூய்மை மற்றும் தெய்வீகத்துடன் தொடர்புடையதாகும். இந்த தேவியை வெள்ளை நிறத்தில் அலங்கரித்து வழிபட வேண்டும்.
ஷைல்புத்ரி தேவிக்கு பதினாறு வயது, மிக அழகாகவும், அழகிய நிறத்துடனும் காணப்படுவாள். இதன் விளைவாக அவள் மகாகௌரி தேவி என்று அழைக்கப்பட்டாள். அவள் ஆட்சி செய்யும் கிரகம் ராகு. மஹாகௌரி தேவி, சங்கு, சந்திரன் மற்றும் வெண்மையான மலருடன் தொடர்புடையவள், ஏனெனில் அவளுடைய அழகிய தோல் நிறம். அவள் வெள்ளை ஆடைகளை மட்டுமே அணிந்திருப்பதால், அவள் ஸ்வேதாம்பரதரா என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த தேவி அன்பு, கருணை மற்றும் தெய்வீக சக்தியின் வடிவமாக வழிபடுகிறோம். இவளை இளம் சிவப்பு நிறத்தில் அலங்கரித்து வழிபட வேண்டும்.
பிரபஞ்சத்தின் தொடக்கத்தில், ருத்ர பகவான் சக்தி வடிவான உருவமற்ற ஆதி-பராசக்தியிடம் படைப்புக்காக முறையிட்டதாக இந்து நூல்கள் கூறுகின்றன. சிவபெருமானின் இடது பாதி அவளை மா சித்திதாத்ரியாகப் பெற்றெடுத்தது, இதன் விளைவாக, சிவன் அர்த்த-நாரீஸ்வர் என்று அழைக்கப்பட்டார். தன்னை வழிபடுபவர்களுக்கு எல்லாவிதமான சித்திகளையும் அருளும் தெய்வம். இவள் ஞானம், அறிவாற்றல் ஆகியவற்றின் வடிவமாக திகழ்பவள் என்பதால் இவளை ஊதா நிறத்தில் அலங்கரித்து வழிபட வேண்டும். இவள் வெற்றியின் வடிவமாக காட்சி தரக் கூடியவள்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025