Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கடவுளுக்கு உடைக்கப்படும் தேங்காய் அழுகினால் நல்ல சகுனமா?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கடவுளுக்கு உடைக்கப்படும் தேங்காய் அழுகினால் நல்ல சகுனமா?

Posted DateOctober 4, 2024

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் நாம் வீட்டில் இறைவன் முன் வெற்றிலை, பாக்கு, பழம் தேங்காய் வைத்து பூஜைகள் செய்து வழிபடுவோம். ஆலயம் சென்று வழிபடும் போதும் நம்து வழிபாட்டில் தேங்காய் உடைக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு உடைக்கும் போது தேங்காய் உடையும் தன்மை வைத்து சகுனத்தைக் கூறுவார்கள்.

கடவுளுக்கு தேங்காய் உடைப்பது ஏன்?

எந்த ஒரு முக்கிய வேலையையும் தொடங்கும் முன் தேங்காய் உடைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருக்கும் பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால் வேண்டும் காரியம் வெற்றியை தரும். தேங்காயை உடைத்து, அதன் குடுமியை அகற்றிவிட்டு, உள்ளிருக்கும் வெண்மையான பருப்புகளை இறைவனுக்கு சமர்ப்பித்து, தீப ஆராதனை செய்யும்போதுதான், நம்முடைய பூஜை முழுமை பெற்றதாக உணருகிறோம்.அதேபோல் கோயில்களுக்குச் செல்லும்போது, அர்ச்சனைத் தட்டை குருக்களிடம் கொடுத்துவிட்டு, நாம் கொடுத்த தேங்காய் சரியாக உடைபடுகிறதா? இல்லையா என்று கொன்போம். அதனை வைத்துத் தான் நமது வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா இல்லையா என நம் மனதில் நினைத்துக் கொள்வோம். தேங்காயை கடவுளுக்கு சமர்பிப்பதால் பல அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தேங்காய் பிரசாதம் கொடுத்தால்தான் கடவுள் தரிசனம் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது.  தேங்காய் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனின் சின்னமாக கூறப்படுகிறது. தேங்காயில் இருக்கும் மூன்று கண்கள் மும்மூர்த்திகளைக் குறிக்கிறது. ஆணவம், கன்மம், மாயை இம்மூன்றும் மும்மலம் என்று சொல்லப்படுகின்றது. தேங்காய் உடைப்பதென்பது நம் ஆன்மாவைச் சுற்றியுள்ள இம்மும்மலங்களைப் போக்குவதற்காகவே. தேங்காயின் மேல் இருக்கும் மட்டையை மாய மலம் என்றும், மட்டை என்னும் மாய மலத்தை நீக்கினால், அடுத்ததாக வரும் நார் என்பதை கண்ம மலம் என்றும், கண்ம மலத்துக்கு அடுத்து வரும் ஓட்டை ஆணவ மலம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மூன்று மலங்களையும் நீக்கிய பிறகு கிடைக்கும் வெண்மையான பருப்பே பேரின்பம் என்றும் சொல்லப்படுகிறது. நம் மனதை மூடியிருக்கும் இந்த மூன்று மலங்களையும் அகற்றி, பேரின்பத்தை அடையவேண்டும் என்பதற்காகவே தேங்காய் உடைத்து இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம்.

 தேங்காய் உடையும் பலன்கள்

நாம் கோவில் வழிபாட்டிற்கு வெற்றிலை பாக்கு பழம் பூ, தேங்காய் எடுத்துக் கொண்டு செல்வோம். மற்ற பொருட்கள் வாங்கும் போதே அது நன்றாக இருக்கிறதா என்று நமக்கு தெரியும். ஆனால் தேங்காய் வாங்கும் போது நம்மால் அது உள்ளே நன்றாக இருக்கிறாதா என்று காண முடியாது. ஆனால் அதனை ஆட்டிப் பார்த்து ஒரு சிலர் இது இளம் தேங்காய் அல்லது முற்றின தேங்காய் என்று கண்டுபிடிப்பார்கள். மற்றபடி அது அழுகின தேங்காயா,  நல்ல தேங்காயா என்று காண முடியாது. கோவிலில் அரச்சகர் உடைக்கும் போது தான் அதனைக் காண முடியும்.

 தேங்காய் எப்படி உடைந்தால் என்ன பலன்?

தேங்காய் உடையும் போது தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும்.

ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும்.  தேங்காய் சரிசமமாக  உடைந்தால் துன்பம் தீரும், செல்வம் பெருகும்

மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் இரத்தினம் சேரும் என நம்பப்படுகின்றது.

தெய்வத்திற்கு படைத்த  தேங்காய் அழுகி இருந்தால் அது நன்மையாகவே முடியும். இதன் மூலம் நமக்கு வரும் தீய சக்திகள் பீடைகள், கண்திருஷ்டிகள் போன்றவை நீங்கும் என நம்பப்படுகிறது.

கடவுளுக்காக உடைக்கிற தேங்காயில் பூ விழுந்தால் ரோக நாஸ்தி ஏற்படும் என்று சொல்வார்கள். சில சாஸ்திரங்கள் பொன், பொருள் சேர்க்கையான ஸ்வர்ண லாபம் உண்டாகும் என்று சொல்கிறார்கள்.

தெய்வத்திற்கு உடைக்கப்படும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் அந்த வீட்டில் சுபகாரியம் நிகழும் என நம்பப்படுகிறது. இதனால் மக்கள் பயப்பட தேவையில்லை.

இதேபோல் தெய்வத்திற்கு உடைக்கபட்ட தேங்காயில் பூ இருந்தால் மிகவும் நல்லது. பணவரவு எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நம்பப்படுகிறது.