Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
இந்திர ஏகாதசி என்றால் என்ன? | இந்திர ஏகாதசி 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

இந்திர ஏகாதசி என்றால் என்ன?

Posted DateOctober 3, 2024

புரட்டாசி மாதம் கிருஷ்ண பட்சத்தின்  11வது நாள் இந்திர ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இது மகாளய பட்சத்தில் அதாவது  பித்ரு பட்சத்தில்  விழுவதால், இது ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திர ஏகாதசி விரதம் மரணத்திற்குப் பிறகு முக்தியைக் கொடுப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, பக்தர்கள் தங்கள் முன்னோர்களின் முக்தி வேண்டி இந்த நாளில் விரதம் அனுசரிக்கிறார்கள். இந்திர ஏகாதசி விரதம் அனைத்து விரதங்களிலும் மிகவும் சிறப்பானதாகவும்  புனிதமானதாகவும் கருதப்படுகிறது.

நம்பிக்கையின்படி, இந்த விரதத்தை முறையாகக் கடைப்பிடித்த பிறகு, ஒருவர் சொர்க்க வாசஸ்தலத்திற்குச் செல்லலாம். முக்தி பெற விரும்பும் மூதாதையர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் முயற்சியால் அதை பெறலாம். அதாவது அவர்களின் சந்ததியினர்  இந்த ஏகாதசியில் முறையாக விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் முக்தி பெறுகிறார்கள். இது விஷ்ணுவின் அருளால் மட்டுமே சாத்தியமாகும். எனவே பக்தர்கள் இந்திர ஏகாதசியின் போது விஷ்ணு பூஜை செய்து விஷ்ணுவை வழிபடுகின்றனர்.

இந்திர ஏகாதசி நாள் செப்டம்பர் 28, 2024

ஏகாதசி நேரம் காலை 6:11 முதல் 29 செப்டம்பர் காலை  08:35  வரை

துவாதசி முடிவு 29 செப்டம்பர் மாலை 04:47

    

இந்திர ஏகாதசி முக்கியத்துவம்

இந்திர ஏகாதசி விரதம் முன்னோர்களின் விடுதலை மற்றும் அவர்களின் ஆன்மா சாந்தியுடன் தொடர்புடையது. இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், பகவான் விஷ்ணு உயிர்களுக்கு மோட்சம் அளிக்கிறார். இந்நாளில் இறைவனை வழிபடுபவர்கள் அவருடைய அருளைப் பெறுவார்கள். அவர்களின் முன்னோர்கள் சொர்க்கத்தில் இளைப்பாறுவார்கள். அதோடு, இந்த விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடுபவர்கள் தங்கள் வாழ்வில் அபரிமிதமான மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறலாம். இறைவனின் ஆசீர்வாதத்தைப் பெற இறைவனைப் பிரியப்படுத்த அவர்கள் ஒரு நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தவிர, விரத சடங்குகள் மற்றும் வழிபாடுகளுடன் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் மூவுலகிலும் அமைதி பெறலாம்.

இந்திர ஏகாதசி விரத கதை

புராணத்தின் படி, மகிஷ்மதி நகரின் மன்னர் இந்திரசேன் சத்யுகத்தில் விஷ்ணுவின் சிறந்த பக்தர் மற்றும் கம்பீரமான அரசராக இருந்தார். அவரது  ராஜ்ஜியத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள், அங்குள்ள மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு நாள், அரசர் அரசவையில் அமர்ந்து மந்திரிகளுடன் விவாதித்துக் கொண்டிருந்த போது, ​​தேவரிஷி  நாரதர் அவரது அவையில் தோன்றினார்.

மன்னரும் அவரை வரவேற்று அவருக்குரிய மரியாதை அளித்து அவரை உபசரித்தார். பின் மன்னர் தாங்கள் வந்த காரணம் என்ன என்று வினவினார். நாரத முனிவர் மன்னனிடம், உனது ராஜ்ஜியத்தில், மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ்கிறார்கள், ஆனால் உங்கள் தந்தை தனது மோசமான கர்மங்களால் யமலோகத்தில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைக் கேட்டு கவலை கொண்ட மன்னன் இந்திரசேனன் தேவரிஷி நாரதரிடம் தன் தந்தையின் ஆன்மா முக்தி பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். நாரத  முனிவர் அவனிடம் தன் தந்தையின் பாவங்களைப் போக்க புரட்டாசி  மாத கிருஷ்ண பட்ச ஏகாதசியில் விரதம் இருக்க வேண்டும் என்று கூறினார்.

மன்னர் இந்திரசேனன் நாரத முனிவரிடம் ஏகாதசி விரதத்தை எப்படி கடைப்பிடிப்பது என்று கேட்டார். அதற்கு நாரதர், இந்திர ஏகாதசிக்கு ஒரு நாள் முன்னதாக, பத்தாம் நாள் அதாவது தசமி திதி அன்று  நதியில் நீராடி, உங்கள் முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்யுங்கள். ஏகாதசி அன்று விஷ்ணுவை வணங்கி மாலையில் பழங்களை உண்ணுங்கள். இந்த விரதத்தை கடைபிடிப்பதால் உங்கள் தந்தைக்கு புண்ணிய பலன்கள் கிடைக்கும். மன்னன் இந்திரசேனன் தன் சகோதரர்களுடன் சேர்ந்து இந்திர ஏகாதசியின் சடங்கு விரதத்தைக் கடைப்பிடித்தான். இதன் விளைவாக, அவரது தந்தை முக்தி பெற்றார் மற்றும் மன்னர் இந்திரசேன் இறந்த பிறகு, அவரது ஆன்மா சொர்க்கம் சென்றார்.

இந்திர ஏகாதசிக்கான பூஜை விதி மற்றும் விரத விதி

∙  அதிகாலையில் எழுந்து,  குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணியுங்கள்.

∙ சாலிகிராம பூஜை உள்ளவர்கள் அன்று  அதனை கடைபிடிக்க வேண்டும்..

∙  குங்குமத்தால் துணியில் ஸ்வஸ்திகாவை உருவாக்கவும்.

∙  விநாயகப் பெருமானை வணங்கி “ஓம் கணேசாய நமஹ்” என்று உச்சரிக்கும் போது ஸ்வஸ்திகா மீது பூக்கள் மற்றும் அரிசியை வழங்குங்கள்.

∙  விஷ்ணுவின் சிலை மீது கங்காஜல் நீரை ஊற்றி விஷ்ணு பூஜை செய்யுங்கள்.

∙  சந்தனம், அட்சதை, தூபக் குச்சிகள், இனிப்புகள் போன்றவற்றை வழங்குங்கள்.

∙  விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து ஆரத்தி செய்யவும்.

∙  மாலையில் துளசி செடியின் முன் தீபம் ஏற்றவும்.

∙  இந்திரா ஏகாதசி விரதத்தின் கதையைக் கேளுங்கள்.

∙  முன்னோர்களின் பெயரில் சிரார்த்தம் செய்த பிறகு பிராமணர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள்.

∙  துவாதசி தினத்தில் பழங்களைச் சாப்பிட்டு உங்களின் விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

முழு மனதுடன் இறைவனை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், முன்னோர்கள் முக்தியும் அடைவார்கள். உங்களுக்கு இந்திர ஏகாதசி நல்வாழ்த்துக்கள்.