நாம் பிறக்கு போதே நமது தலை எழுத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. பிரம்மன் நம்மை படைக்கும் போதே நமது தலை எழுத்தையும் எழுதி விடுகிறான். நமது வாழ்க்கை நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் திடீரென்று நமது வாழ்வில் நாம் சந்திக்கும் பல பிரச்சினைகள் நமது தலையெழுத்தை நினைத்து புலம்ப வைத்து விடுகிறது. எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை? எனது தலைவிதி மாறாதா என்னும் எண்ணமெல்லாம் வந்து விடுகிறது.
சிலருக்கு வேலை இல்லை என்று பிரச்சினை. ஒரு சிலருக்கு திருமணம் தமாதமாகிறதே என்னும் கவலை. சிலருக்கு உறவுப் பிரச்சினை. வேறு சிலருக்கோ வருமானப் பற்றாக்குறை. ஒரு சிலருக்கு ஆரோக்கியத்தில் பிரச்சினை. பல பேருக்கு மேலே சொன்ன பிரச்சினைகள் எல்லாம் தீர்க்க முடியாத பிரச்சினையாகக் கூட சில சமயங்களில் ஆகி விடுகிறது. நாமும் பிறரைப் போல நன்றாக வாழ மாட்டோமா? நமது தலை எழுத்தும் மாறாதா என ஏங்குவோர் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தான் இந்தப் பதிவு.
திருப்பட்டூர் பிரம்மன் கோவிலுக்கு சென்றால் தலை எழுத்து மாறும் என்று கூறுவார்கள். சரபேஸ்வரரை வணங்கி வழிபட்டால் நமது தலை விதி மாறும் என்று கூறுவார்கள். இந்தப் பதிவில் எளிய வழிபாடு மற்றும் மந்திரம் பற்றிக் காண்போம்.
அந்த வழிபாடு முருகன் வழிபாடு ஆகும். முருகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள் ஆகும். செவ்வாய் அன்று திருச்செந்தூர் முருகனை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அவரது திருவுருவப் படம் ஒன்றை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய் அன்று காலை எழுந்து நன்னீராடி முருகன் திருவுருவப் படத்திற்கு முன் இரண்டு அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றுங்கள். முருகன் படத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து அரளி பூக்களை சாற்றுங்கள்.மாலை நேரத்தில் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். கோவிலில் முருகப்பெருமானுக்கு விளக்கு போட்டு, அவருக்கு செவ்வரளி பூக்களை வாங்கி கொடுத்து வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். முருகனை ஆறு முறை வலம் வந்து முருகப்பெருமான் சன்னிதானத்தில் அமர்ந்து ‘ஓம் நமோ குமாராய நம’ என்ற இந்த ஒரு மந்திரத்தை 108 முறை ஆழ் மனதிற்குள் சொல்லுங்கள். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே முருகன் படத்தின் முன் அமர்ந்து இந்த மந்திரத்தைக் கூறலாம்.
இவ்வாறு தொடர்ந்து நீங்கள் செய்து வர கஷ்டங்கள் உங்களை விட்டு விலகி தூர சென்று விடும். உங்கள் தலை எழுத்து நல்லபடியாக மாறும்.
முருகனை சரணாகதி அடைந்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். கோயிலுக்கு செல்ல வாய்ப்பு இல்லை என்பவர்கள் வீட்டிலேயே விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகப்பெருமான் முன்பு அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி நம்பிகையுடன் இந்த மந்திரத்தை சொல்பவர்களுக்கு நிச்சயம் தலையெழுத்து மாறும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025