முருகப் பெருமானின் அருளைப் பெற்றுத் தரும் விரதங்களுள் சஷ்டி விரதமும் ஒன்றாகும். சஷ்டி என்பது ஆறாவது திதி ஆகும். இந்த திதி ஒரு மாதத்திற்கு இரண்டு முறை வரும். அமாவாசை முடிந்து வரும் ஆறாவது நாளும் பௌர்ணமி முடிந்து வரும் ஆறாவது நாளும் சஷ்டி என்று கூறப்படும். அமாவாசை முடிந்து வரும் சஷ்டி வளர்பிறை சஷ்டி அல்லது சுக்கில பட்ச சஷ்டி எனப்படும். பௌர்ணமி முடிந்து வரும் சஷ்டி தேய்பிறை சஷ்டி அல்லது கிருஷ்ண பட்ச சஷ்டி எனப்படும். ஒரு ஆண்டிற்கு இருபத்தி நான்கு சஷ்டி வரும். சக்தி வாய்ந்த ஆற்றல் வாய்ந்த விரத நாளில் உள்ளன்போடு மனம் உருகி பிரார்த்தனை செய்தால் கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்.
சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று கூறுவார்கள். குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள். வறுமை நீங்க வேண்டும் என்று எண்ணுபவர்கள், தொழிலில் வளர்ச்சி விரும்புபவர்கள், நோய் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், நல்ல கல்வி வேண்டும் என்று நினைப்பவர்கள், பிரச்சினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றும் துயரத்தில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சஷ்டி விரதம் இருக்கலாம்.
காலையில் எழுந்தவுடன் நீராட வேண்டும். பூஜை அறையில் முருகப் பெருமானின் திருவுருவப் படத்தை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம், சந்தனம் பூசி மலர்களை சாற்ற வேண்டும். காய்ச்சின பால், பழம், வெற்றிலை பாக்கு வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். உங்களின் பிரார்த்தனை எதுவோ அதனை வேண்டிக் கொள்ள வேண்டும். உங்கள் வேண்டுதலுக்கு ஏற்ற முருகன் பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். வேண்டுதல் எதுவாக இருந்தாலும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். உள்ளன்போடு செய்து உபவாசம் இருங்கள். எண்ணிய காரியம் நிறைவேறும் வரை இந்த விரதத்தை நீங்கள் மேற்கொள்ளலாம்.
காலையில் எதுவும் சாப்பிடாமல் மதியம் உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது உங்களால் முடிந்த அளவு விரதம் இருங்கள். முடிந்தவர்கள் காலை மாலை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து இரவில் சாப்பிடுங்கள். அருகில் இருக்கும் முருகப் பெருமான் கோவிலுக்கு சென்று முருகனை வணங்கி வழிபடுங்கள். வீட்டிலும் காலை மாலை இருவேளை விளக்கேற்றி ஷட்கோண கோலம் அமைத்தது ஆறு தீபம் ஏற்றுங்கள். அகல் விளக்கு ஏற்றலாம். நெய் தீபம் ஏற்றுவது நல்லது. காலை மாலை இருவேளை முருகன் பாடல்களை பாராயணம் செய்வது நல்லது. நைவேத்தியம் செய்யத பாலை நீங்கள் இரவில் எடுத்துக் கொல்லாம்.
சஷ்டி திதியில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியது. பொதுவாக சஷ்டி திதி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு திருமண தடை விலகும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.செல்வ வளம் பெருக சஷ்டி திதி வழிபாடு மேற்கொள்ளலாம். இதோடு மட்டுமல்லாமல் நமக்கு இருக்கக்கூடிய காரிய தடைகள் விலக வேண்டும் என்றாலும் சஷ்டி திதி அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யலாம். வீட்டிலும் வழிபாடு செய்யலாம்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025