மகாளயபட்சம் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது நமது முன்னோர்கள் தான். மகாளயபட்சம் முன்னோர்களை போற்றி வணங்குவதற்கு உகந்த நாட்கள் ஆகும். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். அதாவது பதினான்கு நாட்கள் மகாளய பட்சம் அனுசரிக்கப்படும். பதினைந்தாவது நாள் வரும் அமாவாசை மகாளய அமாவாசை ஆகும். இந்த நாள் முன்னோர்களை வணங்க மிகவும் ஏற்ற நாள். இந்த பதினைந்து நாட்களும் நமது முன்னோர்கள் நமது பூமிக்கு வந்து, நாம் தரும் படையல்களை (எள், தண்ணீர், பிண்டம்) பெற்றுக் கொண்டு மனம் குளிர்ந்து நம்மை ஆசிர்வதிப்பதாக ஐதீகம்.எனவே தான், மாதா மாதம் அமாவாசை தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் மகாளய அமாவாசை தர்பணத்தை தவறாமல் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்
எனவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான மகாளய அமாவாசை நாளில் புனித நீராடி, குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த நீர் நிலைகளில் நீராடி விரதம் இருந்து தர்ப்பணம் செய்வதன் மூலம் நமக்கு முன்னோர்களின் ஆசிகள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம். நாம் தரும் படையல்களை அவர்கள் மிகழ்ச்சியுடன் பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்கள் ஆன்மா சாந்தி அடைகிறது, அவர்களின் ஆசியும் நமக்கும் நமது சந்ததியருக்கும் கிடைக்கிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு 2024 மகாளய அமாவாசை தினம் மிகவும் விசேஷமானது. ஏனெனில், இந்த ஆண்டு மகாளய பட்சம் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 2ம் தேதி மகாளய அமாவாசையுடன் நிறைவடைகிறது. இதில் விசேஷம் என்னவென்றால், மகாளய பட்சம் தொடங்கும் நாளில் சந்திர கிரகணமும், மகாளய அமாவாசை நாளில் சூரிய கிரகணம் நடக்கப்போகிறது. இந்த இரண்டு கிரகங்கள் 15 நாட்கள் இடைவெளியில் நிகழ்கின்றது.
இது இந்த வருடத்தின் இரண்டாவது சூரிய கிரகணம் கிரகணம் ஆகும் கிரகணம் நடை பெரும் நேரம் இரவாக இருப்பதால் நம்முடைய நாட்டில் இந்த சூரிய கிரகணத்தை காண முடியாது. இந்த வருடத்தில் சூரியன் மற்றும் சந்திர கிரகணம் 15 நாட்கள் இடைவெளியில் வருவதால், அது அவ்வளவு சுபமானது இல்லை என்கின்றனர் பண்டிதர்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025