கணவன் மனைவிக்கு இடையே சண்டை வராமல் இருக்க எளிய பரிகாரம் | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கணவன் மனைவிக்கு இடையே சண்டை வராமல் இருக்க எளிய பரிகாரம்

Posted DateSeptember 23, 2024

கணவன் மனைவி உறவு என்பது மற்ற உறவுகளில் இருந்து வேறுபட்டது. பொதுவாக குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் அதிலேயே உறுப்பினர்களுக்கு இடையே பல விதமான  கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதுவும் கணவன் மனைவி என்று எடுத்துக் கொண்டால் சொல்லவே வேண்டாம். மனப் பொருத்தம் இருந்தால் தான் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். ஒரு சில கணவன் மனைவி மிகவும்  அன்னியோன்யமாக இருப்பார்கள். அவர்களுக்குள் சண்டையே வராது என்று கூற முடியாது சண்டை வந்தாலும் ஓரிரு நாட்களுள் சரியாகிவிடும். ஆனால் ஒரு சில கணவன் மனைவி கீரியும் பாம்பும் போல தொடார்ந்து சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். காரணமே இல்லாமல் கூட  இருவருக்கும் இடையே சண்டை வந்து கொண்டே இருக்கும். கணவன் மனைவி உறவில் சண்டையே இல்லாமல் இருக்காது. சிவன் பார்வதிக்கே சண்டை வந்துள்ளது எனும் போது சாதாரண மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம். சிறு சிறு விஷயங்களுக்குக்  கூட சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் தம்பதிகள் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு  அது நாளாக நாளாக பெரிய பூகம்பமாக வெடிக்கலாம். ஒரு தடவை சண்டை வந்தால் அது இரண்டு நாட்களுக்குள் சரியாக வேண்டும்.

Husband Wife Problem

 

சில முரண்பட்ட கருத்து வேறுபாடுகள் எழும் போது பிரச்சினைகள் எழலாம். இதனால் அடிக்கடி வாக்குவாதம் எழும். ஜாதக ரீதியாக குரு அல்லது சுக்கிரன் பலவீனமாக இருந்தால் மன ஒற்றுமை இருக்காது. சண்டை வரும். .அமைதி இருக்காது.

கணவன் மனைவிக்கு இடையே சண்டை வராமல் இருக்க என்ன  பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

பரிகாரம் 1.

வியாழக்கிழமை தோறும் நவகரகத்தில் இருக்கும் குருவிற்கு கொண்டைக் கடலை மாலை சாற்ற வேண்டும். செவ்வாய்க் கிழமை சுக்கிரனுக்கு மொச்சைப் பயறு வைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். இதனை நாற்பத்தி எட்டு வாரம் செய்ய வேண்டும். இது நீண்ட காலமாக இருப்பதாக இருந்தாலும் குடும்பத்தில் அமைதி வேண்டும் என்றால் செய்து தான் ஆக வேண்டும்.

பரிகாரம் – 2

உங்களுக்கு பவள மல்லி அல்லது பாரிஜாத மலர் தெரிந்திருக்கும். கீழே விழாத,  குறைந்த பட்சம்   பத்து எண்ணிக்கையிலான பவள மல்லி அல்லது பாரிஜாதமலரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மலர் நல்ல வாசனையுடன் இருக்கும். இதனை பறித்து எடுத்துக் கொள்ளுங்கள். சிவன் பார்வதி இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு இந்த மலரை சாமி பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள். சண்டை இல்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பிறகு அதனை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். கணவனுக்கு ஒன்று மனைவிக்கு ஒன்று என இரண்டு  வெள்ளி தாயத்து வாங்கிக் கொள்ளுங்கள். பூஜை செய்த அந்த மலரை  (தலா ஐந்து) வெள்ளி தாயத்தில் வைத்து கையிலோ கழுத்திலோ அணிந்து கொள்ளுங்கள்.  குறைந்தபட்சம் ஐந்து மலரை வைத்து தாயத்தை கழுத்தில் அல்லது கையில் கட்டிக் கொள்ளுங்கள்.

AstroVedSpeaks Birth Chart