Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
பாவங்கள் தீர சோமவார அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்.
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

பாவங்கள் தீர சோமவார அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்.

Posted DateSeptember 5, 2024

திங்கட்கிழமையை சோமவாரம் என்று கூறுவார்கள். அமாவாசையும் சோமவாரமும் சேர்ந்து வந்தால் அந்த நாளை அமா சோமவாரம் என்று கூறுவார்கள். இது மிகவும் விசேஷமான நாள் ஆகும். இந்த நாளில் அரச மரத்தை வழிபட வேண்டும். மரங்களில் உயர்ந்தது அரச மரம். மரங்களின் அரசன் அரச மரம் ஆகும். இது மிகவும் உயர்ந்த மரம். ஸ்ரீ மந்நாராயணனே அரசு. இந்த மரத்தில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கின்றார்கள். மரத்தின் அடிப் பகுதியில் பிரம்மன் வசிப்பதாகவும் நடுப்பாகத்தில் விஷ்ணு வசிப்பதாகவும் நுனிப் பகுதியில்  சிவபெருமான் வசிப்பதாகவும் ஐதீகம் எனவே அரச மரத்தை சுற்றி வழிபடுவதன் மூலம் நாம்  நூற்றுக்கணக்கான ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகும். பிறகு அஸ்வத்த நாராயணுக்கு வெல்லம் வைத்து நைவேத்தியம்  செய்ய வேண்டும். மும்மூர்த்திகள் வாசம் செய்யும் அரச மரத்தை நீங்கள் திங்கட்கிழமையும்  அமாவாசையும்  சேர்ந்து வரும் நாளில் சுற்றி வழிபடுவதன் மூலம் பாவங்கள் விலகும்.

மேலும் நீங்கள் நினைத்த காரியம் நடக்க அரசமரத்தை வலமிருந்து இடமாக நூற்றிஎட்டு முறை சுற்ற வேண்டும். கீழ்கண்ட ஸ்லோகத்தை கூற வேண்டும்.

“மூலதோ ப்ரம்ஹ ரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபினே

அக்ரத:சிவ ரூபாய விருக்ஷ ராஜாயதே நமஹ

அஸ்வத்த சர்வபாபானி சதஜன்மார்ஜிதானி ச

நுதஸ்வ மம விருக்ஷேந்திர ஸர்வைச்வர்ய ப்ரதோ பவ “