பூச நட்சத்திரத்தின் அதிபதி சனீஸ்வர பகவான். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பீர்கள். நல்ல ஆரோக்கியம் உடையவர்களாக இருப்பீர்கள். மிகச் சிறந்த அறிவாளிகளாக இருப்பீர்கள். மென்மையாகப் பேசுவீர்கள் உங்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும். அறிவுசார்ந்த வேலைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். மிகக் கடுமையான பிரச்னைகளுக்குக்கூட எளிதாகத் தீர்வு கண்டு சமாளித்துவிடுவீர்கள். தெய்வ பக்தி உங்களிடம் அதிகம் இருக்கும். பெற்றோர்களுக்கு கீழ்படிந்து நடப்பீர்கள். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளிடம் அன்பாகப் பழகுவீர்கள். செல்வந்தர்களாக இருப்பீர்கள். உங்களிடம் இரக்க குணம் மற்றும் தொண்டுள்ளம் காணப்படும். பிறருக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வீர்கள். அறிவுக் கூர்மையுடன் செயல்படுவீர்கள்.
பல துறைகளிலும் விஷய ஞானம் பெற்றிருப்பீர்கள். எப்படிப்பட்ட நெருக்கடியான நிலை ஏற்பட்டாலும், சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள். நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். வீடு, வாகன வசதிகளைப் பெற்றிருப்பீர்கள். மனோ திடம் கொண்டவர்களாகவும், எப்போதும் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் விரும்புபவர்களாகவும் இருப்பீர்கள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும்கூட உயர்ந்த நிலையை அடைந்துவிடுவீர்கள்.
சவாலான காரியங்களையும்கூட சாமர்த்தியமாகத் திட்டமிட்டு, கச்சிதமாக முடிப்பீர்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்வது உங்களுக்கு பிடிக்கும். அடிக்கடி கோபப்படுவீர்கள். சற்று கர்வமும் பெற்றிருப்பீர்கள்.யோகா, மந்திர தந்திரங்கள், ஜோதிடம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். பெண்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பீர்கள். தயவு தாட்சண்யம் பார்ப்பதிலும், மனசாட்சிக்கு பயந்து நடப்பதிலும் உங்களுக்கு நிகர் நீங்களே. எல்லா விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள். தன்னம்பிக்கையாலும், தளராத தைரியத்தாலும் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
நட்சத்திர அதிபதி – சனி; ராசி அதிபதி – சந்திரன்; நவாம்ச அதிபதி – சூரியன்
பூசம் முதல் பாதத்தில் பிறந்த நீங்கள் பெரியவர்களிடம் பக்தி சிரத்தையுடன் பழகுவீர்கள். புத்தி கூர்மை உடையவர்களாக இருப்பீர்கள். கல்வியில் திறமை கொண்டவர்களாக இருப்பீர்கள். படித்த பெரிய மனிதர்களின் நட்பைப் பெறுவீர்கள். எதையும் உடனடியாகவும் விரைவாகவும் செய்து முடிக்க விரும்புவீர்கள். சோம்பேறித்தனம் இன்றி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பலர் கூடியிருக்கும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். அடிக்கடி தந்தையுடன் வாக்குவாதம் செய்வீர்கள். படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். தார்மீக சிந்தனையுடன் இருப்பீர்கள். தவறு செய்ய மாட்டீர்கள்.அநீதி கண்டு பொங்கி எழுவீர்கள். அக்கிரமத்திற்கு எதிராக குரல் கொடுப்பீர்கள். மற்றவர்கள் தவறு செய்வதை கண்டிப்பீர்கள். தெய்வ பக்தி நிறைந்தவர்களாக இருப்பீர்கள். செல்வந்தர்களாகவும் இருப்பீர்கள். உங்கள் விருப்பப்படியே மண வாழ்க்கையை அமைத்துக்கொள்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவு இருக்கும். சமூகத்தில் மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைவீர்கள். நவாம்ச அதிபதி சூரியனாக இருப்பதால், அடிக்கடி உஷ்ணத்தால் பாதிக்கப்படுவீர்கள்.சேவை மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். அரசு மற்றும் அரசியல் பதவியில் இருப்பீர்கள்.
நட்சத்திர அதிபதி – சனி; ராசி அதிபதி – சந்திரன்; நவாம்ச அதிபதி – புதன்
நீங்கள் அனைவருடனும் நன்கு பழகுவீர்கள். உறவினர்களாலும் நண்பர்களாலும் விரும்பப்படுவீர்கள். செல்வங்களுடன் ஆடம்பரமாக வாழ வேண்டுமென்று விரும்புவீர்கள். பெற்றோரிடம் மிகுந்த அன்புகொண்டிருப்பீர்கள். அவர்கள் சொல்வதைத் தட்டாமல், தயங்காமல் செய்வீர்கள். எது நடந்தாலும் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்வீர்கள்.எல்லோரிடத்திலும் நட்புறவுடன் பழகுவீர்கள். சற்று கோபம் அதிகமாக இருக்கும். அதே சமயம் பிறரை அனுசரித்து செல்லக்கூடிய குணமும் உங்களிடம் இருக்கும். உங்களிடம் மென்மையான குணம் இருக்கும். வாழ்க்கைத் துணையிடம் அன்புடன் நடந்து கொள்வீர்கள். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு பொறுமையாக செய்வீர்கள். புதிய நண்பர்களை எளிதாக பெறுவீர்கள். இரக்க குணம் காரணமாக பிறருக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வீர்கள். குடும்பத்துக்குச் செல்வம் சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பீர்கள். திரைப்படங்களைப் பார்ப்பதைவிட, பத்திரிகை படிப்பதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள்.
நட்சத்திர அதிபதி – சனி; ராசி அதிபதி – சந்திரன்; நவாம்ச அதிபதி – சுக்கிரன்
கவலைகளை மறந்து சிரித்துப் பேசும் குணம் கொண்டிருப்பீர்கள். எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும், அவற்றை முறியடித்து எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பார்ப்பவர்கள் உங்கள் வயதைக் குறைத்துச் சொல்லும் அளவுக்கு இளமையாகக் காட்சி அளிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுமுக உறவு மேற்கொள்வீர்கள். கூட்டுக் குடும்ப வாழ்கையை விரும்புவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்ளின் பாராட்டு பெறுவீர்கள். புகழும் பெருமையும் உடையவர்களாக இருப்பீர்கள். நீங்கள் சாமார்த்தியசாலிகள். புத்திசாலியாகவும் செயல்படுவீர்கள். இயற்கை எழில் சூழ்ந்த வீட்டில் வாழ நினைப்பீர்கள். நவீன டிசைனில் ஆடை, ஆபரணங்களை வாங்க விரும்புவீர்கள். வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள். எல்லாருடனும் சகஜமாகப் பழகுவீர்கள். கல்வி ஞானம் பெற்றவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு தெய்வ பக்தி அதிகம் இருக்கும். அடிக்கடி வாகனங்களை மாற்றிக்கொண்டே இருப்பீர்கள். சண்டையைவிட சமாதானத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நினைத்த காரியத்தை எப்பாடுபட்டாவது சாதித்தே தீருவீர்கள். வீட்டில் செல்லப் பிராணிகளை பிரியமுடன் வளர்ப்பீர்கள்.
நட்சத்திர அதிபதி – சனி; ராசி அதிபதி – சந்திரன்; நவாம்ச அதிபதி – செவ்வாய்
நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். எதிர் பாலினத்தவருடன் ஈர்ப்பு அதிகம் இருக்கும். பெண்களிடம் அன்பாகப் பழகுவீர்கள்.ஒப்பனை செய்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். கூட்டுக் குடும்பத்தில் வாழ நினைப்பீர்கள். உங்களிடம் பேராசை இருக்கும். சண்டையிடும் குணம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் உறவினர்களை உதாசீனப்படுத்தவோ விட்டுக்கொடுக்கவோ மாட்டீர்கள். அனைத்துச் சுகங்களையும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புவீர்கள். செல்வம் பொன் பொருள் சேர்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். பேச்சாலேயே காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். பிள்ளைகளை அதிகம் நேசிப்பீர்கள். அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில் துடிப்பாக இருப்பீர்கள். உங்களுக்கு அதிக கோபம் வரும். முன்கோபத்தால் சண்டையிட்டு வார்த்தைகளை விட்டு விடுவீர்கள். என்றாலும் பிறகு வருந்துவீர்கள். எடுத்துக் கொண்ட வேலையில் வெற்றி அடைந்து ஆக வேண்டும் என்ற வேங்கை குணம் உங்களிடம் இருக்கும். உங்களிடம் இரக்கம் தயை, தாட்சணியம் போன்ற குணங்களைக் காண்பது அரிது.
வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீ தட்சிணாமூர்த்தி
அணியவேண்டிய ரத்தினம்: முத்து
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுக்கா, விளங்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில். தாயார் அபிவிருத்தி நாயகி. தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் அகல பூசம் நட்சத்திரக்காரர்கள் இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். உடல் ஊனமுற்றவர்கள், கால் வலி உள்ளவர்கள், தோஷங்களினால் திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சிறந்த பலன்களைப் பெறலாம்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025