Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
திருநள்ளாறு கோவிலில் சனீஸ்வரரை வழிபட பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

திருநள்ளாறு கோவிலில் சனீஸ்வரரை வழிபட பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை

Posted DateAugust 14, 2024

திருநள்ளாறு கோயிலுக்குச் செல்லும்போது கீழே பட்டியலிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

  • திருநள்ளாறில் சனி பகவானை வழிபட மிகவும் உகந்த நாள் சனிக்கிழமை.

  • சனி பகவானின் கதிர் வீச்சு அங்கு அதிகம் உள்ளதாக ஐதீகம். அந்த கதிர் வீச்சு உங்கள் மேல் படுவது சிறப்பு. எனவே நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஒரு நாள் முன்னதாக சென்று அங்கு தங்குவது சிறப்பு.

  • சனிக்கிழமைகளில் அதிக கூட்டம் இருக்கும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரலாம்.

  • பொதுவாக சனி பகவான் என்றாலே எல்லாருக்கும் ஒரு வித பயம் அல்லது அச்சம் கலந்த பக்தி இருக்கும். ஆனால் சனி பகவான் குற்றங்கள் இருந்தால் மட்டுமே தண்டனை அளித்து படிப்பினை வழங்குவார். நேர்வழியில் செல்பவர்களுக்கு எந்த வித அச்சமும் தேவை இல்லை.

  • திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே செல்ல வேண்டும்

  • உங்களால் தனிப்பட்ட முறையில் கோவில் செல்ல இயலாவிட்டால்  நீங்கள் மற்ற நபர்கள் அல்லது சேவை வழங்குநர்கள் மூலம் பூஜைகளை வழங்கலாம்.

நள தீர்த்தத்தில் நீராடுதல்

கோயிலுக்குள் நுழையும் முன் முதல் படியாக நள தீர்த்தம் எனப்படும் கோயில் குளத்தில் நீராட வேண்டும்.

முதலாவதாக நள தீர்த்தத்தில்  நீராட வேண்டும்.  அவ்வாறு நீராடும் போது தலை முதல் கால் வரை நன்றாக  ஈரமாக இருக்க வேண்டும்.குளிக்கும் போது அணிந்த பொருட்களை எடுத்துச் செல்வது சனியின் தோஷத்தை அதிகரிக்கும் மற்றும் மற்றவர்களின் தோஷங்களும் உங்களைத் தாக்கும் என்பதாக ஒரு சிலர் கூறுகின்றனர். இது குறித்து உங்கள் வீட்டு பெரியவர்கள் அல்லது நல்ல ஜோதிடரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் குளித்து முடித்தவுடன், சுத்தமான அல்லது புதிய ஆடைகளை அணிந்து கொள்ளவும், தலை மற்றும் உடல் முற்றிலும் ஈரமின்றி வறண்டு இருப்பதை உறுதி செய்யவும். குளித்து முடித்தவுடன் “நள தீர்த்தத்தை” திரும்பிப் பார்க்காதீர்கள்.

விநாயகர் சந்நிதி

முதலில் விநாயகர் சந்நிதி உள்ளது. சன்னதிக்குள்  நுழையும் முன் தேங்காய், கற்பூரம் வாங்கவும். விநாயகர் சந்நிதி  விட்டு வெளியே வந்ததும், மனதில் பிரார்த்தனையுடன் தேங்காய் ஸ்டாண்டில் தேங்காய் உடைக்கவும்.

சனி பகவான் மற்றும் தர்ப்பாரன்யேஸ்வரர் தரிசனம்

சனி பகவான் சன்னிதிக்குள் நுழையும் முன், தேவையான பூஜை பொருட்களை வாங்க வேண்டும், அதில் நீல நிற பூக்கள் (அலரி பூ) நல்லெண்ணய் ஒரு சிறிய கருப்பு துணி, வெற்றிலை மற்றும் வாழைப்பழங்கள் ஆகியவை அடங்கும்.

உங்கள் விருப்பத்தைப் பொறுத்து நுழைவாயிலுக்கு வந்தவுடன், இலவச தரிசன வரிசையைத் தேர்வுசெய்யலாம் அல்லது கட்டண தரிசன வரிசையைத் தேர்வுசெய்யலாம்.பொதுவாக  வரிசை நீளமாக இருக்கும் என்றாலும் சீரான வேகத்தில் நகரும். கோவில் அதிகாரிகள் பெரிய கூட்டத்தைக் கையாள்வதில் அனுபவம் வாய்ந்தவர்கள், மேலும் அவர்கள் கூட்டத்தைக் கட்டுக்குள் வைத்து வேகமாக நகர்த்துவதில் வல்லவர்கள். .

கோவிலுக்கு சென்றவுடன், முதலில் சனி பகவானை தரிசனம் செய்துவிட்டு, அதன்பிறகுதான் சிவனை தரிசனம் செய்ய வேண்டும். எனவே முதலில், சனீஸ்வர பகவானை தரிசித்து தொடர்ந்து சிவபெருமானையும், அம்பாளையும் தரிசனம் செய்யுங்கள்.

சனீஸ்வர பகவானுக்கும் தர்பாரண்யேஸ்வரருக்கும் அபிஷேகம் செய்யலாம். பால், பன்னீர், தேங்காய், எண்ணெய், தயிர், சந்தனம், விபூதி ஆகியவை கொண்டு அபிஷேகம் நடைபெறும்.

அம்பாள் சந்நிதியில் ஏராளமான பக்தர்கள் புடவை காணிக்கை செலுத்துகின்றனர்.

நவகிரக சாந்தி ஹோமம்

சந்நிதியை விட்டு வெளியே வந்ததும் நல்லெண்ணெய் மற்றும் கருப்பு எள் ஆகியவற்றால் தீபம் ஏற்றலாம். நவக்கிரக சாந்தி ஹோமம் (கிரகங்களின் கோபத்தைத்  தணிக்க செய்யும் பூஜை) செய்யும் வசதி கோயிலில் உள்ளது. நவக்கிரக சாந்தி ஹோமத்தை  கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு செய்யலாம்.

ஏராளமான பக்தர்கள் கோவில் உண்டியலில் பணம் மற்றும் கோவிலுக்கு மாடுகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். பலர் தங்கள் தலையை மொட்டையடித்து, முடியை வழங்குகிறார்கள்.

கோவிலில் அன்னதானமும் செய்யலாம். கோவிலில் பக்தர்கள் தங்கள் தலைமுடியை மொட்டையடித்து காணிக்கை செலுத்த வசதிகள் உள்ளன.

பெரிய சந்நிதிகள் தவிர, இன்னும் பல சிறிய சன்னிதிகள் கோயிலில் உள்ளன. குபேர கணபதி சந்நிதியை தரிசிக்க பலர் விரும்புகின்றனர், ஏனெனில் இது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. சுமங்கலிகள் துர்க்கா தேவி சந்நிதியை தரிசிக்க விரும்புகிறார்கள்.

திருநள்ளாறு கோவிலுக்குச் சென்ற பிறகு, நீங்கள் நேரடியாக வீடு திரும்ப வேண்டும். வழியில் வேறு எந்த கோயிலுக்கும் செல்லக் கூடாது என்பது ஐதீகம்.

இந்த இடத்தில் இருந்து விபூதி தவிர வேறு எந்த பிரசாதத்தையும் கொண்டு செல்லக் ்கூடாது