வைரத்தின் ஆங்கிலப் பெயர் டைமண்ட் ஆகும். இது இரத்தினங்களில் மிகவும் விலை உயர்ந்தது. ஒளி மிக்கது. வைரத்தைப் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. வைரம் அதிக கடினத்தன்மை வாய்ந்தது என்பதால், வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும். இதன் இரசாயன பார்முலா C. அதாவது வெறும் கார்பன் அல்லது கரியின் பரிணாம வளர்ச்சியே வைரமாகும். இதன் கடினத் தன்மை 10. இதன் அடர்த்தி எண் 3.52 இதன் ஒளி விலகல் எண் 2.42
வைரம் தன் மீது படும் ஒளியை முழு அக எதிரொலிப்பு செய்வதால் வைரத்தின் வழியே எந்தவொரு பொருளையும் பார்க்க இயலாது. புளு ஜாகர் எனப்படும் வைரம் தான் உலகிலேயே விலை உயர்ந்ததாகும். இது காலை நேர சூரிய ஒளியில் நீல நிற ஒளி உமிழும் தன்மையுடையதாகும். வைரத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாதான் ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு காலியாகிவிட்டதால் ஒரிஸாவில் மீண்டும் வைரங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை கண்டு பிடித்துள்ளனர்.
நிறமற்ற, நீலம் அல்லது சிவப்பு நீல ஒளியைக் கொண்ட, கரும்புள்ளிகள் இல்லாத வைரமே மிகவும் சுபமான வைரமாகும். மஞ்சள், சிவப்பு ஒளி தரும் வைரம், அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஏற்றது. வெண்மையான வைரம் மதம் மற்றும் ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்கு ஏற்றது. மஞ்சள் நிறம் மட்டும் கொண்ட வைரம் வெற்றியையும் செல்வ செழிப்பினையும் தரும். வெண்மையாகவும், தீவு போன்ற வடிவம் கொண்ட தோஷமுள்ள வைரம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வைரம், சுக்கிரனின் இரத்தினம் ஆகும். சாதகத்தில் சுக்கிரன் சுபராக உள்ளவர்கள் வைரம் அணியலாம்.
இந்தியாவில் கோகினூர் என்ற இடத்தில் எடுக்கப்படும் வைரம் மிகவும் தரம் வாய்ந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்திலிருந்தும் வைரம் வெட்டி எடுக்கப்படுகிறது. வைரத்தின் தெளிவு நிறம், எடை இவற்றை வைத்தே இதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. வைரத்தை எவ்வளவு நாட்கள் உபயோகித்தாலும் அதன் ஓரங்கள் தேயாமலும் நுணுங்காமலும் காணப்படும்.
வைரம் பாலுணர்வு தொடர்பான நோய்கள், சரும வியாதிகள் போன்றவற்றை போக்கும்.கண்களின் கோளாறுகள், காது மூக்கு, முக ஜன்னி, நிமோனியா, மூச்சுத்திணறல், வெண்குஷ்டம், குழந்தைகளுக்கு ஏற்படும் இழுப்பு நோய் போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி இதற்குண்டு. சிற்றின்ப நோய்கள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் நோய் போன்ற நோய்களும் வைரத்தை அணிவதால் குணமாகும். ஆண் குழந்தையை விரும்புபவர்கள் சிறு கருமை கலந்த வைரங்களை அணிவது நன்மையளிக்கும். வைரம் அணிபவர்களை விஷ ஜந்துக்கள் மற்றும் தீய ஆவிகள் தீண்டாது.
வைரத்தை ரிஷபம், துலாம் ராசிகளில் பிறந்தவர்களும் சுக்கிரன் சுபராக இருந்து சுக்கிர திசை நடப்பில் உள்ளவர்களும் 6,15,24 ம் எண்ணில் பிறந்தவர்களும் அணிவது சிறப்பு. வைரத்தை தங்கம் அல்லது பிளாட்டினத்தில் பதித்து மோதிர விரல் அல்லது நடு விரலில் வெள்ளிக்கிழமைகளில், சுக்கிர ஓரையில் அணிந்து கொள்வது நல்லது. ¼ அல்லது ½ ரத்திகள் எடையில் அணிவது நல்லது.
ஜிர்கான். வைரத்தை வாங்க இயலாதவர்கள் இந்த ஜிர்கான் கற்களை வாங்கி அணியலாம். ஜிர்கான் கற்களும் பளபளப்பும், கடினத் தன்மையும் கொண்டது. வைரத்தைப் போலவே நற்பலனை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025