இது நவரத்தினங்களில் ஒன்றாகும். இதுவும் மாணிக்கத்தின் வர்க்கத்தைச் சேர்ந்த ரத்தினம் ஆகும். இதனை கனக புஷப்ராகம் என்று கூறுவார்கள். கனகம் என்றால் தங்கம் என்று பொருள். தங்க நிறத்தில் இது கிடைப்பதால் இதற்கு கனக புஷ்பராகம் என்று பெயர். சாதாரண புஷ்பராகம் நிறமில்லாமல் தான் கிடைக்கும்.அதனை வெண் புஷ்பராகம் என்று கூறுவார்கள். வெள்ளை புஷ்பராகம் மிகவும் ஜொலி ஜொலிப்புடன் அழகாக காணப்படும். அதனுடன் சேரும் தாதுப் பொருள் தான் கல்லுக்கு நிறத்தை அளிக்கிறது. இந்த வகை கற்கள் மஞ்சளாக இருக்கும் போது மஞ்சள் புஷ்பராகம் எனவும், நீல நிறத்தில் இருக்கும் போது நீலமணி என்றும் அழைக்கப்படும். மஞ்சள் புஷ்பராகம் மிகவும் ஜொலிப்பு தன்மையுடையதாக காணப்படுகிறது. எனவே வெள்ளை புஷ்பராகத்தைவிட மஞசள் புஷ்ப ராகம் சற்று விலை கூடுதலானது. இதை கேரட் கணக்கில்தான் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.
புஷ்ப ராகக் கற்கள் இந்தியாவில் தமிழ்நாடு, ஒரிஸா ஆகிய இடங்களிலும், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றன. ஆறுகளில் அடித்து வரப்படும் கூழாங்கல் போன்ற தோற்றத்துடன் ஆற்று ஓரங்களில் கிடைக்கின்றது. புஷ்ப ராகக் கல் கடினத்தன்மை அதிகமுள்ளதால் நெடுநாள் உபயோகத்தாலும் பளபளப்பு குன்றாது.இதன் ரசாயன பார்முலா AL2O3 இதன் கடினததன்மை 9 அடர்த்தி எண் 4 ஒளிவிலகல் எண் 1.76-1.77. புஷ்பராகம் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட மஞ்சள் நிறம். பழுப்பான மஞ்சள், ஆரஞ்சு பழுப்பு சேர்ந்த நிறம், இளஞ்சிவப்பும் பழுப்பும் சேர்ந்த நிறம் ஆகிய பல வண்ணங்களில் கிடைக்கும். இது ஒரு கடினமான ஒளி பொருந்திய அபூர்வ இரத்தினம் ஆகும்.
அன்பையும் சகோதரத்துவத்தையும் குறிப்பது. நல்ல தன்மைகளையும், ஆன்மீக ஞானத்தையும் வளர்ப்பது, மகப்பேறு மற்றும் பிரசவத்தில் உதவும் கல். தோஷம் உடையவருக்கு தோஷத்தை விலக்கும். திருமணத்தடையை விலக்கும். மஞ்சள் காமாலை போன்ற நோய்களைத் தடுக்கும். வியாபாரத்தியாற்கும், பொருளாதார விஷயங்களுக்கும் அற்புத பலன் தரும். புஷ்பராகம் அணிவதால் கல்லீரல் கணையம், தொடர்பான வியாதிகள், கழுத்து வீக்கம், வயிறு கோளாறு, தைராய்டு சுரப்பிக் கோளாறு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். அடிக்கடி மயக்கம் வருதல், தோல் நோய்கள், ராஜ பிளவை போன்ற பிணிகளையும் இக்கற்களை அணிவதன் மூலம் குணப்படுத்தலாம்.
இது குரு பகவானுக்கு உரிய இரத்தினம் ஆகும். குருவின் ஆதிக்கத்திலிருந்து வரும் கதிர்களை உறிஞ்சி குருவின் திருவருளை கனக புஷ்ப ராகம் பெற்று தருகிறது, இந்த புஷ்பராகக் கல்லை 3,12, 21, 30 போன்ற எண்களில் பிறந்தவர்கள் தங்கத்தில் பதித்து ஆள்காட்டிவிரல் அல்லது மோதிர விரலில் உடலில் படும்படி அணிந்து கொள்வது நல்லது. மற்றும் தனசு, மீன ராசிகளில் பிறந்தவர்களும், குரு திசை நடப்பில் உள்ளவர்களும் இந்த புஷ்பராகக் கல்லை அணியலாம்
புஷ்பராகக் கல்லை அணியும்போது வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் 7 அல்லது 13 ரத்திகள் எடையில் உடலில் படும்படி அணிந்து கொள்வது நல்லது. இது குளிர்ச்சி தன்மை அளிப்பது. தங்கத்தில் பதித்து அணிந்து கொள்ளலாம்.
மஞ்சள் புஷ்ப ராக கல்லுக்குப் பதில் மஞ்சள் கார்னெட் என்ற கல்லையும் அணியலாம். வெண் பவளத்தையும் ஓயிட் கோரல் 3ம் எண்ணின் ஆதிக்கத்தை உடையவர்கள் அணியலாம். ஸ்படிக வகையைச் சேர்ந்த கோல்டன் டோபஸ்ட் என்ற கல்லையும் அணியலாம்.ஆனால் இது எடைகுறைவாகவும், நாளடைவில் பளபளப்பு குன்றியும் காட்சியளிக்கும்.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025