இதுவும் நவரத்தினங்களில் ஒன்றாகும். இது Zirconகுடும்பத்தைச் சேர்ந்ததாகும். காப்பி நிறத்துடன் சற்று மஞ்சள் கலந்து காணப்படும். மற்றும் சில வகை, தேனின் நிறம் முதல் பசுவின் சிறுநீர் நிறம் வரை பல நிறங்களில் கிடைக்கிறது. கோமேதகம் கோமூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது. பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல் என்பதாலேயே இதற்கு கோமேதகம் என்று பெயரிட்டனர். புகை படிந்த சிவப்பு ஒளி வீசும் நிறங்கொண்ட கோமேதகம் நல்ல நிறமும், ஒளி ஊடுவருவக்கூடிய தன்மையும் கொண்டதாகும். மென்மை, பிரகாசம் மற்றும் ஒளி தரும் கல்லே உயந்த சுபமான கோமேதகம் ஆகும். கல்லின் உள்ளே பார்க்கும் போது தேனில் காணப்படும் குமிழ்களைப் போல காணப்படுவது கோமேதகத்தின் சிறப்பு அம்சமாகும். தோசமுள்ள கோமேதகம் அணிபவருக்கு துன்பம் தரும். இதன் இரசாயன கலவை பார்முலா Ca3Al2(SO4) இதன் கடினத்தன்மை இதன் அடர்த்தி 7 ¼ இதன் ஒளி விலகல் தன்மை 3.65 1.73 – 1.75
இது குளிர்ச்சி தன்மை கொண்டது. தோஷமற்ற கோமேதகம் அணிவதால், அது பயங்கரமான எதிரிகளைக்கூட வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச் செழிப்பும் உண்டாகும். கோமேதகம் ரத்தினம் அணிவதால் வாயு கோளாறு, பாலியல் நோய் போன்றவை கட்டுப்படும். காலரா, முடக்கு வாதம், தற்கொலை எண்ணம் போன்றவற்றையும் கோமேதகம் கட்டுப்படுத்தும்.

இது இராகுவிற்கு உரியதாகும். சாயாகிரகமான ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. ராகு எந்த வீட்டில் உள்ளாரோ அந்த வீட்டின் அதிபதியின் காரகத்துவத்திற்கேற்றவாறு செயல்படுவார். ராகு நின்ற வீட்டின் அதிபதி சுபர் வீட்டில் இருந்து அவரும் சுபராக இருந்தால் கோமேதகக் கல்லை அணியலாம். அதுபோல் ராகுவின் திசை நடப்பில் உள்ளவர்களும் திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரக்காரர்களும் 4,13,22,31 ஆகிய எண்ணுக்குரியவர்களும் கோமேதகக் கல்லை அணியலாம். கோமேதகக் கல்லை வெள்ளி அல்லது தங்கத்தில் பதித்து மோதிர விரலில் உடலில் படும் படி அணிவது உத்தமம்.
கோமேதகக் கல்லானது இந்தியா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் எடுக்கப்படும் கற்கள் இங்கேயே பட்டை தீட்டி விற்பனை செய்யப்படுகிறது.6,11, அல்லது 13 ரத்திகள் அணிய உகந்தது. வெள்ளியில் சேர்த்து அணியலாம். இதனை சனிக்கிழமை அன்று அணிவது நல்லது.
இளநீலம் மற்றும் அக்வா மரைன்.
January 27, 2026
January 19, 2026
January 13, 2026
January 12, 2026