Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி விரத வழிபாடு
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி விரத வழிபாடு

Posted DateAugust 5, 2024

ஆடி மாதம் பிறந்தாலே ஒவ்வொரு நாளும் விசேஷம் தான். அதிலும் முக்கியமாக ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி மற்றும் ஆடி ஞாயிறு மிக விசேஷ நாட்கள் ஆகும். இந்த வருடம் ஆடி வெள்ளி முதலாவதாக வருகிறது. ஆடி வெள்ளியில் அம்பாளை வழிபடுவது மிகவும் சிறப்பு. பொதுவாகவே ஆடி மாதம் மகா லட்சுமி மற்றும் துர்கை அன்னையை வழிபடுவது சிறப்பு.ஆடி செவ்வாய் அன்று துர்கை அம்மனையும் ஆடி வெள்ளி அன்று மகா லட்சுமியையும் வணங்குவது சிறப்பு.

வழிபாடு என்றாலே நமது வேண்டுதலும் அதில் இருக்கும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வேண்டுதல்கள் இருக்கலாம். சிலருக்கு பணம் தேவைப்படலாம். ஒரு சிலருக்கு மன நிம்மதி தேவைப்படலாம். பலருக்கு நோய் தீர வேண்டும் என்ற வேண்டுதல் இருக்கலாம். அதே போல கடன் பிரச்சினை, வழக்குப் பிரச்சினை, உறவுப் பிரச்சினை என்று சொல்லிக் கொண்டே போகலாம். நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகள் தீர கடவுள் வழிபாடு ஒன்றே உயரிய வழி ஆகும். அந்த வகையில் ஆடி மாத வழிபாடுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

ஆடி வெள்ளி மகாலட்சுமி வழிபாடு

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று கூறும் அளவிற்கு அம்மனின் சக்தி இந்தப் பூ உலகில் எங்கும் வியாபித்து இருக்கும். அந்த மாதம் முழுவதும் நாம் அம்மன் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் அவளின் பரிபூரண அருளைப் பெற முடியும். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை வழிபாடு மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்றாலும் வெள்ளிக்கிழமை காலை வரும் சுக்கிர ஹோரையில் ம்கா லட்சுமியை வழிபடுவதன் மூலம் நமது வாழ்வு மேன்மை பெரும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து குளித்து முடித்து சுத்தமான பூஜை அறையில் கோலமிட்டு மகாலட்சுமி படத்திற்கு முன் நெய் விளக்கேற்ற வேண்டும். மஞ்சள் குங்குமம் அட்சதை மற்றும் வாசம் மிக்க மலர்கள் கொண்டு மகா லட்சுமியை வணங்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலையில் ஆறு மணிக்கு சுக்கிர ஹோரை வரும் எனவே இந்த வேளையில் இந்தப் பூஜையை மேற்கொள்ளலாம். காலை வேளையில் செய்ய முடியாதவர்கள் இரவில் வரும் சுக்கிர ஹோரையில் விளக்கேற்றி பூஜை செய்யலாம். பால் அல்லது கற்கண்டு நைவேத்தியம் செய்யலாம். கற்கண்டு சாதம் அல்லது பாலில் கற்கண்டு போட்டும் நைவேத்திய செய்யலாம். இந்தப் பூஜை செய்வதன் மூலம் மன நிம்மதி கிட்டும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

ஆடி வெள்ளி அம்மன் பூஜை

பொதுவாக நாம் பிரச்சினைகளை சந்திக்கும் போது அந்த  பிரச்சினைகள் தீர இறை வழிபாடு மேற்கொள்கிறோம். அந்த வகையில் கடன் நோய் தீர வழக்கு சம்பந்தமான பிரச்சினைகள் அல்லது நமது அன்றாட வாழ்வில்  நாம் சந்திக்கும் பிரச்சினைகள் தீர வேண்டும் எனில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது. துர்க்கை அம்மனுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து செவ்வரளி மலர்களால் துர்க்கை அம்மனின் போற்றிகளை கூறி அர்ச்சனை செய்து வழிபாடு செய்தாலே நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சினைகளாக இருந்தாலும் அந்த பிரச்சினைகள் அனைத்துமே தீர்ந்துவிடும் என்பதி ஐதீகம்.

மேற்சொன்ன இரண்டு பூஜைகளும் மிக எளிய பூஜைகள் ஆகும். இது எல்லோராலும் செய்ய இயலும். இந்த எளிய பூஜை வழி முறைகளை ஆடி மாதம் பின்பற்றி நீங்கள் வாழ்வில் வளமும் நலமும் பெற எங்கள் வாழ்த்துக்கள்.