Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கண்ணாடி டம்ளரில் எலுமிச்சை போட்டு வைப்பது எதற்காக தெரியுமா?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கண்ணாடி டம்ளரில் எலுமிச்சை போட்டு வைப்பது எதற்காக தெரியுமா?

Posted DateJuly 29, 2024

ஒரு சில வீடுகளில் மற்றும் தொழில் செய்யும் இடத்தில் ஒரு கண்ணாடி டம்ப்ளரில் எலுமிச்சம் பழத்தைப் போட்டு வைத்திருப்பார்கள். இதன் தாத்பரியம் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

நமது வீட்டிற்கு அல்லது வியாபார ஸ்தலத்திற்கு வருபவர்கள் அனைவரும் நல்ல எண்ணத்துடன் வருவார்கள் என்று கூற முடியாது. எனவே பிறரின் தீய பார்வையில் இருந்து தப்பிக்க பலரும் பல வகையான பரிகாரங்களை மேற்கொள்கிறார்கள். அவற்றுள் ஒன்று தான் கண்ணாடி டம்ப்ளரில் எலுமிச்சை வைப்பது.

தெய்வக் கனி :

எலுமிச்சம் பழத்தை தெய்வக் கனி என்று கூறுவார்கள். பொதுவாக எலுமிச்சம் பழம் அது இருக்கும் இடத்தில் இருக்கும் சக்தியை ஈர்க்கும் சக்தி வாய்ந்தது. எலுமிச்சை பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இதில் சிட்ரிக் அமிலம் உள்ளது.  இது நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது சமையல் மற்றும் சமையல் அல்லாத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆன்மீக ரீதியாக இதன் பயன் அதிகம். எலுமிச்சை தன்னை சுற்றி இருக்கும் இடத்தில் உள்ள  எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை கொடுக்கும் பண்பை கொண்டுள்ளது.கண்ணாடி டம்ப்ளரில் தண்ணீரில் எலுமிச்சை பழத்தை வைப்பதன் மூலம் தீய எண்ணத்தோடு நம் வீட்டிற்ககோ  அல்லது வியாபார இடத்திற்கோ யாராவது வரும்பொழுது அந்த எண்ணங்களை மாற்றக்கூடிய சக்தியால் எதிர்மறை ஆற்றல் நீங்குகிறது.

வைக்கும் முறை:

கண்ணாடி டம்ளரில் எலுமிச்சை பழத்தை போட்டு வைப்பது ஒரு நல்ல பரிகாரமாக கருதப்படுகிறது. இதனை  வெள்ளிக்கிழமையில் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. இதனை கண்ணாடி டம்ப்ளரில் வைப்பது தான் சிறப்பு. கண்ணாடி டம்ப்ளரில் சுத்தமான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு பச்சை கற்பூரம் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் பழுது எதுவும் இல்லாத எலுமிச்சம் பழத்தைப் போட வேண்டும்.

இந்த தண்ணீரை ஒரு வாரம் வைத்து அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் மாற்றிக் கொள்ளலாம். பழைய தண்ணீரை கொட்டும் பொழுது மற்றவர்களின் கால்கள் படாத இடத்தில் கொட்டிவிட்டு  புதிய தண்ணீரில் எலுமிச்சையை போட்டு வைத்துக் கொள்ளலாம்.

இதனைக் கொண்டு நாம் சகுனம் அறியலாம். அதாவது நாம் வைத்த எலுமிச்சை மேலோட்டமாக இருந்தால் திருஷ்டி எதுவும் இல்லை என்று கொள்ளலாம். அதுவே சற்று மூழ்கினால் எதிர்மறை ஆற்றலைக் காட்டும்.

இந்த பரிகாரம் செய்வதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்கும். கண்திருஷ்டி கழியும். பொருளாதார முன்னேற்றம், வியாபார விருத்தியும் உண்டாகும்.

கண் திருஷ்டிக்கு என்று ஆன்மீகத்தில் பல வழிமுறைகளும் பூஜைகளும் இருந்தாலும் இந்த எளிமையான முறையான எலுமிச்சை மற்றும் தண்ணீர் பரிகாரம் அனைவராலும் செய்யக் கூடியது தான். உங்களது முயற்சி  உழைப்பு அவற்றுடன் கூட இந்த பரிகாரம் மூலம் நீங்கள் உங்கள் காரியங்களில் வெற்றி காணலாம். நம்பிக்கையுடன் இதனை முயற்சி செய்து பாருங்கள்.