Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
காமதேனுவை வீட்டில் வைக்கும் முறை மற்றும் வழிபடும் முறை
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

காமதேனுவை வீட்டில் வைக்கும் முறை மற்றும் வழிபடும் முறை

Posted DateJuly 30, 2024

திருப்பாற்கடலை கடையும் பொழுது பல தெய்வீக அம்சம் பொருந்திய பொருட்கள் தோன்றின என்று கூறப்படுகிறது. அப்படி தோன்றிய பொருட்களில் ஒன்றாக திகழ்வதுதான் காமதேனு.  காமதேனு என்பது ஒரு பசு. இதன் மேனியில் அனைத்து தெய்வங்களும் குடி கொண்டு இருப்பார்கள். காமதேனு அனைத்து பசுக்களின் தாயாக கருதப்படுகிறது. சொர்கத்தின் பசு என்றும் கூறப்படும் இதன் வேறு பெயர் சுரபி ஆகும். அதன் கன்று நந்தினி எனப்படும்.  நமது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் சக்தி காமதேனுவிற்கு உண்டு. வீட்டில் காமதேனு சிலை இருப்பது வாழ்க்கையில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் ஈர்க்கும்.

அனைத்து தெய்வங்களும் குடியிருக்க கூடிய ஒன்றாக திகழ்வதுதான் காமதேனு. காமதேனுவின் உடலில் இடம்பெறாத தெய்வங்களே இல்லை என்று தான் கூற வேண்டும். அப்படிப்பட்ட காமதேனுவை நாம் வழிபடும் பொழுது அனைத்து தெய்வங்களின் அருளையும் நம்மால் எளிதில் பெற முடியும் என்பது ஐதீகம். இந்த காமதேனுவின் அருளை பெறுவதற்கும் அனைத்து தெய்வங்களின் அருளை பெறுவதற்கும் காமதேனுவை வீட்டில் எந்த இடத்தில் வைத்து எவ்வாறு வழிபட வேண்டும் என்று இந்த  பதிவில் நாம் காணலாம்.

காமதேனு சிலை/படம் எந்த திசையில் வைக்கலாம்

காமதேனுவை சிலையாகவோ அல்லது படமாகவோ வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் கன்றுடன் கூடிய காமதேனு பசுவைத் தான் வைக்க வேண்டும்.  இதனை பூஜை அறையில் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும். வடகிழக்கு திசை புனிதமான திசை ஆகும். அல்லது வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைக்கலாம். அதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தீபமேற்றி நாம் வழிபாடு செய்து வரலாம் அல்லது காமதேனுவின் படத்திற்கு முன்பாக  பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பூக்களை போட்டு வைப்பதும் மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. இப்படி செய்வதன் மூலம் காமதேனுவின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.காமதேனு பூஜையை வீட்டில் செய்வதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கும். சுபிட்சம் இருக்கும். பணவரவு இருக்கும். மகிழ்ச்சி இருக்கும்.

வெள்ளிக்கிழமை பூஜை

காமதேனுவை முறையாக வழிபடுவதன் மூலம் நாம் வாழ்வில் நலமும் வளமும் பெறலாம். வாரம் ஒரு முறையாவது குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று காமதேனுவை வழிபடுவது சிறப்பு. வீட்டில் காமதேனு படம் அல்லது விக்கிரகத்திற்கு பூஜை செய்வது சிறப்பு. மஞ்சள் குங்குமம் சாற்றி வெண்தாமரை மலர் கொண்டு அர்ச்சிப்பதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம். அவ்வாறு பூஜிக்கும் பொழுது “ஓம் காமதேனு நமஹ” என்று ஜெபித்து வழிபட வேண்டும்.

காமதேனு காயத்ரி:

ஓம் சுபகாயை வித்மஹே

காமதாத்திரியை

சதீமஹி தந்நோ தேனு

ப்ரசோதயாத்

பூஜையின் பலன்:

இது செல்வத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. நல்ல அதிர்ஷ்டத்தை தருகிறது. அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் சக்தி இதற்கு உண்டு.  விருப்பங்களை நிறைவேற்றும் மற்றும் குடும்பத்திற்கு  ஸ்திரத்தன்மை மற்றும் வளத்தை வழங்கும் ஆற்றல் உள்ளது. துர்சக்திகளை விரட்டும் தன்மை காமதேனுவிற்கு  உண்டு.