பொதுவாக நமக்கு அணிகலன் அணிவது மிகப் பிடித்தமான விஷயம் ஆகும். பெண்கள் மட்டும் அல்ல. ஆண்களும் அணிகலன் அணிவது உண்டு. கழுத்தில் சங்கிலி, கையில் வளையம் காதில் கடுக்கண் என ஆண்களும் விரும்பி அணிகலன் அணிவது உண்டு. அந்த வகையில் யானை முடி மோதிரம் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
யானை முடி மோதிரம் அணியலாமா என்ற சந்தேகம் பல பேருக்கு இருக்கலாம். சந்தேகமே வேண்டாம். யானை முடி மோதிரத்தை யார் வேண்டுமானலும் அணியலாம. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். யானை நமக்கு அதிர்ஷ்டம் அளிக்கக் கூடியது. அதனால் தான் நாம் யானையிடம் ஆசிர்வாதம் வாங்குகிறோம்.பிரேஸ்லெட், மோதிரம், டாலர் போன்ற வடிவங்களில் யானை முடியை வைத்து அணிகலன்களை அணியலாம்.
பயந்த சுபாவம் உள்ளவர்கள் யானை முடி மோதிரத்தை அணியலாம். இரவில் பணி செய்பவர்கள், இரவில் பயப்படும் குழந்தைகள் இதனைப் பயன்படுத்தலாம். பயணம் செய்பவர்கள் இதனை அணியலாம். கையில் அணிந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் இதனை பர்சில் அல்லது கைப் பையில் வைத்துக் கொள்ளலாம். காரில் இதனை வைத்துக் கொள்ளலாம். யானை முடியை தாயத்தில் வைத்து குழந்தைகளுக்கு அணிவிக்கலாம். பெரியவர்கள் கூட இதனை அணியலாம். .குறிப்பாக வியாழக்கிழமை பிறந்தவர்கள் மற்றும் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அணிவது மிகச் சிறப்பாகவும் கூறப்படுகிறது.
இது பலத்தை கொடுக்கும். பாதுகாப்பைக் கொடுக்கும். விபத்தை தடுக்கும். மனோ தைரியம் மற்றும் மன பலத்தை அளிக்கும். இது பாதுகபாப்பு கவசமாக விளங்கும். இது எதிரிகளின் சூழ்ச்சியை உடைக்கக் கூடியது. பில்லி சூனியம் போன்றவற்றை நெருங்க விடாது. காத்து கருப்பு அண்ட விடாது
ஆள்காட்டி விரலில் இதனைப் போடலாம். மோதிர விரலிலும் இதனை அணியலாம். இந்த யானை முடியை தங்கம் ,வெள்ளி. ஐம்பொன் போன்ற அணிகலன்களில் மோதிரமாக கையில் அணிந்து கொள்வது சிறப்பாகும். சாஸ்திர ரீதியாக தங்கத்தில் அணிவது மிகச் சிறப்பாக கூறப்படுகிறது. ஏனெனில் நவக்கிரகங்களின் குரு பகவானின் வாகனமாக திகழ்வதுதான் யானை. மேலும் தங்கம் குருவிற்கு உகந்த பொருளாகும் .அதனால்தான் தங்கத்தில் அணிவது சிறப்பாக கூறப்படுகிறது.
முதன் முதலில் அணியும்போது வியாழக்கிழமை குரு ஓரையில் வளர்பிறை திதியில் அணிவது சிறப்பாகும். ஆண் பெண் என இரு பாலருமே அணியலாம் .ஆண் என்றால் வலது கையிலும் பெண் என்றால் இடது கையிலும் அணிவது நல்ல பலனை கொடுக்கும்.மாதத்திற்கு ஒரு முறை சாம்பிராணியில் காண்பித்து பிறகு பயன்படுத்தலாம் இவ்வாறு செய்யும்போது அதில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025