Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
சிம்மம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024 | August Matha Simmam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சிம்மம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024 | August Matha Simmam Rasi Palan 2024

Posted DateJuly 26, 2024

சிம்மம் ஆகஸ்ட் 2024 பொதுப்பலன்கள்:

சிம்ம ராசிக்காரர்கள் செலவுகள் மற்றும் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தலாம். இந்த மாதம் நீங்கள்  கலவையான காலகட்டத்தை கடந்து செல்லலாம்.  மன அமைதியில் இடையூறுகள் ஏற்படலாம். சொந்த வாழ்க்கையில் முடிவெடுப்பதில் சுதந்திரமாக செயல்படுவீர்கள்.  ஆகஸ்ட் மாதத்தில் வருமானம் மற்றும் செலவுகள் சமமாக இருக்கலாம். தொழிலில் தத்துவ நாட்டமும் அதிகாரமும் இருக்கலாம்.  வழிகாட்டிகள் மற்றும் ஆன்மீகத்தின் மூலம் ஆதாயங்களைப் பெறலாம். சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் ஆச்சரியமூட்டும்  ஆதாயங்களைக் கொண்டுவரும். இந்த மாதம் எதிர்பாராத பயணங்கள் மற்றும் தூக்கம் தொந்தரவு ஏற்படலாம். பொதுவாக மோதல்கள் இருந்தபோதிலும் எதிர் நபர் மீது  மேலாதிக்கமாக இருக்கும். இருப்பினும், ஈகோ பிரச்சினைகளால் தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வப்போது பின்னடைவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாகக் காத்திருந்த பரம்பரைச் சொத்துக்கள் சார்ந்த பிரச்சினைகள் வெற்றிகரமாக நிறைவேறும். நீங்கள்  புனித ஸ்தலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வீர்கள். பொதுவாக எதிர் நபருடன் பழகும் போது கோபம் வரலாம். எனவே, சிம்ம ராசிக்காரர்கள் தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சர்ச்சைகளில் ஈடுபட வேண்டாம், இதனால் நஷ்டம் ஏற்படும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாத இறுதியில் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் அதிர்ஷ்டமும் ஆதாயங்களும் கிடைக்கும். இந்த மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து உங்களின் நம்பிக்கை மிகவும் மேம்படும்.

காதல் / குடும்ப உறவு :

சிம்ம ராசிக்காரர்கள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் கலவையான பலன்களை சந்திக்கலாம். சனியின் செல்வாக்கு தம்பதியினரிடையே உறவில் பிரச்சனைகள் மற்றும் விரிசல்களை உருவாக்கும். புதிய உறவில் ஈடுபட இது ஒரு சிறந்த காலம் அல்ல. குடும்ப வாழ்வில் தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சச்சரவுகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களால் தாம்பத்திய வாழ்க்கையில் சலசலப்பு ஏற்படலாம். காதலில்  உள்ள சிம்ம ராசிக்காரர்கள் சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதத்தில் நல்ல தாம்பத்திய வாழ்வில் சுகம் மற்றும் சில சிறிய தவறான புரிதல்களுடன் மகிழ்ச்சி மிதமாக இருக்கும்.  ஆகஸ்ட் மாதத்தில் சமூக நிகழ்ச்சிகள் மற்றும் மத சடங்குகளில் கலந்து கொள்ளலாம். சிம்ம ராசிக்காரர்கள் குடும்பத்தில் உள்ள பிணக்குகளைத் தீர்ப்பதில் கூடுதல் முயற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கும். சிம்ம ராசிக்காரர்கள் குடும்பத்தில் நல்லிணக்கத்தை நிலைநாட்ட கோபம் மற்றும் ஈகோ போன்றவற்றை தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை

நிதிநிலை :

சிம்ம ராசிக்காரர்களின் நிதி நிலை இந்த மாதத்தில் சராசரியை விட குறைவாக இருக்கும். நிதி வரவுகளில் அதிர்ஷ்டமும் யோகமும் இருக்க வாய்ப்பில்லை. கடன்களும் படிப்படியாக அதிகரித்து சுமையாக மாறும். உடல்நலம் மற்றும் மருத்துவமனைக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். ரியல் எஸ்டேட் விஷயங்களில் நிதி ஆதாயம் மற்றும் பங்குச் சந்தையில் வர்த்தக லாபம் ஏற்படும். முறையான நடவடிக்கைகள் மற்றும் முன் திட்டமிடல் மூலம் செலவினங்களைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தின் செயல்பாடுகள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்குச் செலவுகள் இருக்கலாம். சிம்ம ராசிக்காரர்களுக்கு பயணச் செலவுகள் கூடும். இந்த மாதம் நிதி பரிவர்த்தனைகளில் எதிர் நபரின் வலையில் சிக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் மற்றவர்கள் சார்பாக உறுதிமொழிகள் மற்றும் உத்தரவாதங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உங்கள் நிதிநிலை மேம்பட  :சுக்கிரன் பூஜை

உத்தியோகம் :

சிம்ம ராசிக்காரர்களின் தொழில் ஆகஸ்ட் மாதத்தில் சில சாதகமான மாற்றங்களைச் சந்திக்கும். வேலை சம்பந்தமாக நீண்ட தூரப் பயணங்கள் ஏற்படலாம். இந்த மாதம் பணியிடத்தில் சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகபூர்வ விஷயங்களில் பெண் ஊழியர்கள் சாதகமற்றவர்களாக இருப்பார்கள். இந்த மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து பதவி உயர்வு / இடமாற்றம் ஆகியவை சாத்தியமாகும். உத்தியோகத்தில் நம்பிக்கையும் தலைமைத்துவமும் மேம்படும். இருப்பினும், ஊதிய  அதிகரிப்பு குறுகிய காலத்தில் நடக்காது. உத்தியோகம் சார்ந்த உங்கள் நுண்ணிய அறிவு ஆகஸ்ட் மாதத்தில் நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.  புதிய வேலை தேடும் சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை கிடைப்பதில் வெற்றி கிடைக்கும். அதிக பணிகள் காரணமாக நீங்கள் மன  அழுத்தத்தை உணரலாம். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களும் கூடும். மாதத்தின் பிற்பாதியில் மேலதிகாரியுடன் ஏற்படும்  மோதல்களை நீங்கள்  கவனத்துடன் கையாளலாம்.

தொழில் :

சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம். வியாபாரத்தில் போராட்டங்கள் இருந்தாலும், கூட்டாளிகள் / பங்குதாரர்களுடனான உறவில் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெற்றி கிடைக்கும். இந்த மாதத்தின் நடுப்பகுதியில் அரசாங்க விதிமுறைகள் சாதகமாக முடியும். மொத்தத்தில் பண வரவு மற்றும் வருவாய் நன்றாக இருக்கும். சில தவறான புரிதல்களால் கூட்டாளிகள் மாறுவார்கள். ஆவணங்கள் தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கை தேவை.  வணிக பரிவர்த்தனைகளைல் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். வணிகத்தில் உள்ளார்ந்த வரம்புகள் இருந்தபோதிலும் சந்தையில் போட்டியாளர்களை விட நீங்கள்  மேலாதிக்கம் செலுத்துவீர்கள்.  தலைமையும் நிர்வாகமும் ஆகஸ்ட் மாதத்தில் அடுத்த நிலைக்கு உயர்த்தப்படும்.

உத்தியோகம்/ தொழிலில் மேன்மை பெற  : புதன் பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் சில ஆரோக்கிய பாதிப்புகளை சந்தித்த போதும் அதிலிருந்து குணமடைவீர்கள். எனவே இந்த மாதம் கலவையான  ஆரோக்கிய நிலை இருக்கலாம். மாதத்தின் இரண்டாம் பாதியில் உஷ்ணம் தொடர்பான உபாதைகள் ஏற்படும். காய்ச்சல் மற்றும் சளி தொடர்பான நோய்த்தொற்றுகள் போன்ற பிரச்சினைகள் ஆகஸ்ட் மாதத்தில் உணரப்படும். ஞாபகமறதி பிரச்சனையை இந்த மாதம் சந்திக்கலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் தேவை. தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் பரபரப்பான தன்மை காரணமாக, கவலை மற்றும் தூக்கத்தில் தொந்தரவுகள் அதிகரிப்பதைக் காணலாம். இதுவும் மன அமைதியின்மைக்கு வழிவகுக்கும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட  :ராகு பூஜை

மாணவர்கள் :

சிம்ம ராசி  மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். நினைவாற்றல் குறைபாடு அல்லது போதிய நினைவாற்றல் இல்லாமை ஆகியவை சிம்ம ராசிக்காரர்களின் கல்வியை எதிர்மறையான வகையில்  பாதிக்கலாம். தேர்வுகளைப் பொறுத்த வரையில் மாணவர்கள்  கூடுதல் முயற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கும். தடைகள் சிம்ம ராசி மாணவர்களை முதிர்ச்சியடைந்த நபராக மாற்றும். கல்விக் கண்ணோட்டத்தில் ஆசிரியர்கள் / குருக்கள் மற்றும் வழிகாட்டிகளிடமிருந்து ஆதாயங்கள் மற்றும் மதிப்புமிக்க பெறுதல்கள் இருக்கலாம். மாதத்தின் இரண்டாம் பாதியில் இருந்து மாணவர்களின் நம்பிக்கை மேம்படும். வெளிநாட்டில் கல்வி கற்பது இந்த மாதம் வெற்றிகரமாக இருக்கும்.

கல்வியில் சிறந்து விளங்க  : ஹயக்ரீவர் பூஜை

சுப தேதிகள் : 1, 2, 11, 12, 13, 14, 18, 19, 20, 26, 27, 28 & 29.

அசுப தேதிகள் : 3, 4, 5, 6, 7, 21, 22 & 23.