வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். நாம் ஒவ்வொருவரும் தினமும் ஏதாவது ஒரு பிரச்சினயை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஒரு சிலருக்கு பணப் பிரச்சனை இருக்கலாம். அவர்கள் நினைக்கலாம். ஒரு சிலர் பணத்தை எளிதில் சம்பாதிக்கிறார்கள் நம்மால் அது மாதிரி பணம் சம்பாதிக்க இயலவில்லையே என்று. ஒரு சிலருக்கு தனிமை ஒரு பிரச்சினையாக இருக்கலாம். எல்லாருக்கும் உறவுகள் இருக்கின்றன. நமக்கென்று யாரும் இல்லையே என்று ஏங்கலாம. ஒரு சிலர் சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கவில்லை என்று வருத்தப்படலாம். இப்படி பல பேருக்கு பல விதங்களில் பிரச்சினை இருக்கலாம்.
இதற்கெல்லாம் ஜாதக ரீதியான காரணங்களைக் கூறலாம். நாம் பிறக்கும் நேரத்தில் காணப்படும் கிரக நிலைகள் தான் நம் வாழ்க்கையை அமைக்கிறது எனலாம். அந்த கிரக நிலைகளைப் பொறுத்துத் தான் நாம் கஷ்ட நஷ்டங்களை வாழிவில் அனுபவிக்கிறோம் என்று கூறினால் அது மிகை ஆகாது.
சூரியன்-கோதுமை, சந்திரன் – நெல் செவ்வாய் – துவரை புதன்-பாசிப்பயறு, வியாழன் – கொண்டைக் கடலை, சுக்கிரன்– மொச்சை, சனி – எள்ளு ராகு – உளுந்து கேது – கொள்ளு
அந்தக் காலங்களில் நவ தானியம் அனைவரின் வீட்டிலும் இருக்கும். அவற்றின் மின் காந்த அலைகள் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும். அவை தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அந்தந்த நாட்களுக்கு ஏற்றார் போல தானியங்களை அவர்கள் பயன்படுத்தி வந்தார்கள். உண்ணும் உணவிலும் அவற்றை அதிகம் சேர்த்துக் கொண்டார்கள். இதனால் நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்பு அவர்களுக்கு குறைவாக இருந்தது.நவகிரகங்களின் அருள் அவர்களுக்கு இருந்து வந்தது.

நமது பிரச்சினைகள் தீர நவக்கிரக பரிகாரம் ஒன்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நாட்டு மருந்து கடைகளில் நவதானிய பாக்கெட் விற்கும். அதாவது நவகிரகங்களுக்கு உகந்த 9 தானியங்களும் கலந்த மாதிரி நவதானிய பாக்கெட் விற்கும். அதை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தானியத்தை கோவிலில் இருக்கும் நவகிரகம் முன்பு வைத்து வணங்குங்கள். உங்கள் வீட்டிற்கு அருகாமையில் அர்த்த நாரீஸ்வரர் கோவில் இருந்தால் அந்த கோவிலில் இருக்கும் நவகிரகத்தை வணங்குவது சிறப்பு.
ஏழு சுற்று வலம் இடமாகவும், இரண்டு சுற்று இடம் வலமாகவும் சுற்றுங்கள். பிறகு அந்த தானியத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்து மாலை நேரத்தில் விளக்கேற்றி வைத்து விட்டு ஒரு கிண்ணத்தில் இந்த நவதானியங்களை கொட்டி வைத்து விட வேண்டும்.
“ஆதித்யாச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யஷ்ச ராகவே கேதுவே நமோ நமஹ”
என்னும் இந்த மந்திரத்தை கூற வேண்டும். தினமும் இந்த மந்திரத்தை கூறி அந்த நவதானியங்களை தொட்டு வணங்க வேண்டும். ஒரு வாரம் கழித்து எந்த நாளில் நாம் இந்த நவதானியங்களை வாங்கி வைத்தோமோ அதே நாளில் பழைய நவதானியங்களை எடுத்து விட்டு புதிதாக மறுபடியும் நவதானியத்தை கொண்டு வந்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பழைய நவதானியத்தை சுண்டலாக வேக வைத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தரலாம் அல்லது அதை மாவாக அரைத்து தோசை ஊற்றுவது போல் ஊற்றியும் சாப்பிடலாம். நவதானியங்களை சாப்பிட விருப்பமில்லை என்பவர்கள் இதை நன்றாக ஊற வைத்து அருகில் இருக்கும் பசு மாட்டிற்கு தானமாக வழங்கி விடலாம். இப்படி நாம் ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக செய்து வர நவகிரகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும் மேலும் நவகிரகங்களால் நமக்கு நன்மைகள் உண்டாகும்.
January 27, 2026
January 19, 2026
January 13, 2026
January 12, 2026