Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கர்மா கரைந்து போக தானங்கள் | கர்மாவை கரைக்கும் தானம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கர்மா கரைந்து போக தானங்கள்

Posted DateJuly 5, 2024

கர்மா என்பது செயல் எனப்படும். நாம் செய்யும் செயலே கர்மா எனப்படும். நாம்  பிறந்த நாளில் இருந்து வாழும் நாள் வரை உடலாலும், மனதாலும், உணர்வாலும்  செய்கின்ற ஒவ்வொரு செயலும் கர்மா தான்  அது மட்டும் இன்றி கடந்த பிறவியில் செய்த செயல்களும் நம்மை தொடரும் என்பது ஐதீகம். நாம் விதைத்த விதையின் பழத்தைத் தான் நம்மால் சாப்பிட முடியும். நாம் செய்யும் செயல் அனைத்தும் கர்மா  என்பதால்  ஒரு மனிதன் கஷ்டப்படுவது கர்ம வினையினால் தான். அவன் கர்ம வினை தீரும் போது அந்த கஷ்டத்தில் இருந்து விடுபடுகிறான். இது எப்படி, யாருக்கு எப்பொழுது வரும் என்று தெரியாது. திடீர் என்று வரலாம். இதனை யாராலும் கணிக்க முடியாது.

இந்த கர்ம வினையில் இருந்து விடுபட நாம் முதலில் இயற்கைக்கு ஒத்திசைவாக செயல்பட வேண்டும். தனக்காக என்று மட்டும் வாழாமல் தனக்கு இருப்பதில் கொஞ்சம் பிறருக்கும் தர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் போது கர்ம வினை அகலும்.

இந்த வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் கர்மா தான் காரணம். நாம் எதைச் செய்கிறோமோ அதையே நமக்கு இந்த பிரபஞ்சம் அளிக்கும். பிறரை மனதில் கொண்டு நல்ல நோக்கத்துடன் நாம் செயல் செய்யும் போது கர்ம வினையில் இருந்து விடுபடுகிறோம்.

கர்மாவின் காரணமாக நாம் பல இன்னல்களை அனுபவிக்கிறோம். பண ரீதியாக, மன ரீதியாக, பிரச்சினைகள், உறவுப் பிரச்சினைகள் போன்றவற்றை அனுபவிக்கிறோம். தீர்க்க முடியாத வியாதி வருவதற்கு கூட கர்ம வினை தான் காரணம். இதில் இருந்து விடுபட தானம் செய்வது நல்லது. மருந்தில்லா மருத்துவமாக விளங்குவது  தானம். அதிலும் குறிப்பாக அன்ன தானம், தண்ணீர் தானம் மற்றும் வஸ்திர (ஆடை) தானம் ஆகும். .

நாம் பிறக்கிறோம் இறக்கிறோம், மீண்டும் பிறக்கிறோம். நாம் பிறந்த நோக்கத்திற்கு இந்த உலகத்திற்கு ஏதாவது தர வேண்டும் என்றால் அதில் மிகவும் முக்கியமானது அன்ன தானம் ஆகும். அது ஒன்று தான் போதும் போதும் என்று கூறும் அளவிற்கு நம்மால் பிறருக்கு அளிக்க முடியும்.

கர்ம வினை காரணமாக ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பாவக்கணக்கு இருக்கும். அதில் இருந்து விடுபட  தானங்கள் முக்கியம் ஒன்று அன்ன தானம் மற்றொன்று வஸ்திர தானம். மனிதனை மனிதனாக புனிதனாக ஆக்குவது அன்ன தானம் ஆகும்.

உங்கள் கையால் அன்னதானம்  கொடுக்கும் போது அந்த நிமிடமே உங்கள் கர்மா குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. கர்மாவை கரைக்கும் மற்றொரு தானம் தாகத்தோடு இருக்கும் உயிரினத்திற்கு தண்ணீர் கொடுப்பது.

அன்னதானம் ஏற்றுக் கொண்டவர்களுக்கு அல்லது வீதியில் தாகத்தால் கஷ்டப்படுபவர்களுக்கு தண்ணீர் தானம் கொடுக்கலாம்.. பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீராக இருந்தாலும் சரி. குடி தண்ணீர் வாங்கி தானம் கொடுக்கலாம். ஏழை எளியவர்களுக்கு அளிப்பதன் மூலம் அதன் முழுப் பயன் உங்களை வந்து அடையும்.

.அதைப் போலவே ஆடை தானம். மானத்தைக் காக்கும் ஆடையை தானமாக வழங்குவதன் மூலம் அந்த தர்மம் உங்கள் தலைகாக்கும், உங்கள் தலைமுறையை காக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. கன்னிப் பெண்களுக்கு அளிக்கும் தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது

கர்மவால் கஷ்டத்தை அனுபவிப்பவர்கள், மேலே சொன்ன இந்த எளிய தானங்களை செய்யுங்கள். உங்கள் கர்மா அன்றே, அந்த நிமிடமே குறைய ஆரம்பிக்கும்.