மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறக்கும் போதே மூன்று கடன்களுடன் தான் பிறக்கிறோம் அவை தேவ கடன், ரிஷி கடன் மற்றும் பித்ரு கடன். தேவ கடன் என்பது குல தெய்வ வழிபாடு செய்யாமல் இருப்பது. ரிஷி கடன் என்பது ரிஷிகளை, சாதுக்களை, சன்னியாசிகளை அவமானப்படுத்துவதால் ஏற்படுவது. பித்ரு கடன் என்பது முன்னோர்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல் இருப்பது, தாய் தந்தையைக் கைவிடுவது போன்றவற்றால் ஏற்படுவது. முற்பிறவி கடன் மற்றும் இந்தப் பிறவிக் கடன் என நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கடன் சம்பந்தமான பிரச்சினையில் தவிக்கிறோம் இந்தப் பிறவியும் ஒரு கடன் தான் இந்த பிறவிப் பிணி தீரவும் வாங்கிய கடன் அடைக்கவும் பல இறைவழிபாடுகளை நமது முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். யாருக்கும் கடனாளியாக வாழ்வது என்பது விருப்பமில்லாத ஒன்று என்று தான் கூற வேண்டும். என்றாலும் நாம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ கடனாளியாக ஆகி விடுகிறோம்
முதலில் கடன் வாங்க வேண்டுமா என்பதை பல முறை யோசிக்க வேண்டும். தேவையான விஷயத்திற்கு கடன் வாங்கலாம் ஆனால் பிறரை பார்த்து அல்லது அவர்களிடம் இருக்கும் பொருட்களை போன்று நாமும் பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கடன் வாங்குதல் கூடாது. அதே போல வாங்கிய கடனை நம்மால் திருப்பி செலுத்த முடியமா என்று யோசித்து வாங்க வேண்டும். நமது தகுதிக்கு மீறி கடன் சுமையை ஏற்றிக் கொள்ளக் கூடாது. அவ்வாறு வாங்கினால் குடும்பத்தின் செலவுக்காக சம்பாதிப்பது என்ற நிலை மாறி கடன்களை அடைக்கவே சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை ஏற்படலாம் இப்போதெல்லாம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் மட்டும் அன்றி கார் வீடு, அலைபேசி தொலைக்காட்சி பெட்டி என்று அனைத்தையும் கடனில் தான் வாங்குகிறோம்.
அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். கடன் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தால் திங்கட்கிழமை அன்று கடன் வாங்குவது நல்லது. செவ்வாய்க்கிழமை கடன் அடைக்க வேண்டும். இந்த வழக்கத்தை மேற்கொண்டால் கடன் தொல்லையில் இருந்து வெளியே வரக் கூடிய சூழல் ஏற்படும்.
திருச்சேறையில் வீற்றிருகுக்கும் ருண விமோச்சனரை வணங்கி மார்கண்டேயர் பிறவிப் பெருங்கடனில் இருந்து வெளி வந்தார். நித்திய சிரஞ்சீவியாக வாழும் தன்மயைப் பெற்றார். எனவே ருண விமோச்சனரை வணங்குவதன் மூலம் கடனில் இருந்து விடுபடலாம்.
அனைவராலும் கோவிலுக்கு செல்ல முடியும் என்று கூற இயலாது. எனவே அவ்வாறு கோவிலுக்கு செல்ல இயலாதாவர்கள் வீட்டிலேயே ஸ்ரீ நரசிம்ம ருண விமோசன மந்திரத்தை தினமும் தொடர்ந்து 48 நாட்கள் காலை அல்லது மாலை ஓதி வர எத்தனை கடன் இருந்தாலும் உங்கள் வருவாய் படிப்படியாக பெருகி கடன்கள் தீரும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிடைப்பதன் மூலம் கடன் தீரும். கடன் கொடுத்தவரே மனம் மாறி கருணை காட்டும் நிலை வரும். கடனால் உண்டான வம்பு வழக்குகள் சுபமாக மாறும்.
கணத்தில் ஓடி வந்து காக்கும் கருணை தெய்வமான ஸ்ரீ நரசிம்மரை மனதில் தியானித்து முடிந்தால் அவரது திருப்படத்திற்கு முன்னால் அமர்ந்து தூப தீயம் ஏற்றி இந்த மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். சுத்தமான பசும்பாலில் கல்கண்டு கலந்து நைவேத்தியம் செய்வது சிறப்பு.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025