உலக வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியம். அதை வைத்துத் தான் சமூகத்தில் நமது அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறது. எனவே தான் நாம் அனைவரும் பணம் சம்பாதிக்கிறோம். ஒரு சிலருக்கு பணத்தை நன்கு சம்பாதிக்க முடிகிறது. அவர்களுக்கு பணமும் விரைவில் சேர்கிறது.ஆனால் நம்மில் பல பேர் கடினமாக உழைத்தாலும் நன்கு பணம் சம்பாதித்து வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாத நிலை இருக்கும். அதற்கு காரணம் நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நினைக்கிறோம்.
பொதுவாக திருஷ்டி இல்லாத நிலையைத் தான் அதிர்ஷ்டம் என்று கூறுகிறோம். ஆனால் அந்த அதிர்ஷ்டம் என்பது எல்லாருக்கும் அமைந்து விடுவது இல்லை. வாழ்க்கையில் பலரும் போராடித் தான் முன்னுக்கு வருகிறார்கள். அதுவும் படிப்படியான முன்னேற்றம் காண்கிறார்கள். ஒரு சிலர் எவ்வளவு போராடினாலும் முன்னுக்கு வர முடியாமல் தவிக்கிறார்கள். அவர்கள் தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று புலம்புவார்கள்.
அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் இரண்டு பரிகாரங்கள் பற்றித் தான் இந்தப் பதிவில் காணப் போகிறோம்.
எப்பொழுதும் போல காலையில் எழுந்து குளித்து முடித்து விளக்கேற்றுங்கள். பிறகு ஒரு கிண்ணத்தில் இரண்டு பூங்கற்பூரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிய அளவில் பச்சை கற்பூரத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் தினசரி பூஜைகளை மேற்கொள்ளுங்கள். மஞ்சள் குங்குமம், பூ சாற்றி பூஜை முடித்த பிறகு., அந்த கற்பூர தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். குறிப்பாக வீட்டு நிலை வாசல் மற்றும் கதவிற்கு தெளியுங்கள். இதன் மூலம் நீங்கள் நேர்மறை ஆற்றலை ஈர்க்க முடியும். துரதிஷ்டத்தை விலக்க முடியும். அதிர்ஷ்டத்தை ஈர்க்க முடியும். இந்தப் பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து பதினோரு நாட்கள் செய்ய வேண்டும்.
தூபம் காட்டும் தட்டில் அல்லது தூபக் காலில் பன்னிரண்டு ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிது பூங்கற்பூரம் எடுத்து அதன் மேல் வைத்து ஏற்றி விடுங்கள். உங்கள் துரதிர்ஷடம் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். கற்பூரம் கரைவது போல உங்கள் துரதிர்ஷ்டமும் கரையும். இந்த பரிகாரத்தையும் தொடர்ந்து பதினோரு நாட்கள் மேற்கொள்ளுங்கள்.
மேலே சொன்ன இரண்டு பரிகாரங்களையும் நம்பிக்கையுடன் மேற்கொள்ளுங்கள். தூய்மையான மனதுடன் இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். எதிர்மறை ஆற்றல் நீங்கும். மற்றும் உங்களால் அதிர்ஷ்டத்தை ஈர்க்க முடியும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025