Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
வீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்க | Dheiva Sakthi Athirikka
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்க

Posted DateJune 27, 2024

நாம் பணம் சம்பாதிக்க, பிறரைக் காண, பொழுது போக்க என்று எங்கு வெளியில் சென்றாலும் இறுதியில் நாம் தஞ்சம் புகுவது நமது வீட்டிற்குள் தான். எனவே அந்த வீடு என்பது நாம் வசிப்பதற்கு இனிமையானதாக இருக்க வேண்டும். வீட்டில் அமைதி இருந்தால் தான் அங்கு நம்மால் வசதியாக வசிக்க முடியும். இரவு-பகல், இன்பம்-துன்பம் என்று அனைத்திலும் இரண்டு நிலை இருப்பது போல வீட்டிலும் நேர்மறை சக்தி மற்றும் எதிர்மறை சக்தி என இரண்டு இருக்கும். வீட்டில் நேர்மறை சக்திகள் அதிகரிக்க அதிகரிக்க அங்கு நாம் தெய்வ சக்தி இருப்பதைக்  காணலாம். தெய்வ சக்தி என்பது நாம் மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஆகும்.நாம் வசிக்கும் வீடு பெரியதோ அல்லது சிறியதோ, அளவு எதுவாக இருந்தாலும் அங்கு அமைதியும் மகிழ்ச்சியும் குடி கொண்டிருந்தால் தான் அது தெய்வ சக்தி நிரம்பப்பெற்ற வீடாக கருதப்படும்.

வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க:

தினமும் வீட்டை காலை மாலை என இருவேளை பெருக்கி சுத்தப்படுத்த வேண்டும். ஒரு வேளையேனும் மஞ்சள் தண்ணீர்,பச்சை கற்பூரம் போன்றவற்றை பயன்படுத்தி வீட்டை துடைக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை என இரு வேளை விளக்கு ஏற்ற வேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் விளக்கு ஏற்றுவது நல்லது. இல்லாவிட்டால் காலை எட்டு அல்லது ஒன்பது மணிக்குள் விளக்கை ஏற்றுவது நல்லது. மாலை ஆறு மணிக்கு மேல் விளக்கு ஏற்ற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர இன்னல்கள் நீங்கி நன்மை பெருகும்.

வீட்டில் எப்பொழுதும் பூஜை அறையில் கண்ணாடி ஒன்றை வைத்திருங்கள். கண்ணாடிக்கு தெய்வீக சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆற்றல் உண்டு. குறிப்பாக, குலதெய்வம் அதில் வந்து இறங்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் பூஜை அறையில் சிறிய கண்ணாடி ஒன்றை வைக்குமாறு சொல்லப்படுகிறது.

வீட்டின் பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் நறுமணம் வீச வேண்டும். துர்நாற்றங்கள் கூடாது.

வீட்டில் ஒரு வேளையாவது குடும்பமாக சேர்ந்து இறைவழிபாடு செய்வது நல்லது. இது தெய்வ சக்தியை வீட்டில் அதிகரிக்கும்.

வீட்டில் மந்திர ஒலிகள் ஒலிக்கப்பட்டால் அதன் மூலம் எழக்கூடிய அதிர்வலைகள் தெய்வ சக்தியை அதிகரிக்கும். எனவே உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை சத்தமாக உச்சரித்து பூஜை செய்ய வேண்டும். அல்லது பூஜை மந்திரங்களை ஒலிக்கச் செய்து கேட்கலாம். பூஜை நேரத்தில் தொலைகாட்சி தொடர், கைபேசியில் வரும் விஷயங்களை பார்ப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

வீடு எப்பொழுதும் நறுமணமாக இருக்க வேண்டும். வீட்டுக்குள் நுழைந்தாலே நல்ல ஒரு நறுமணம் வீசினால் அங்கு தெய்வ சக்தி அதிகரிக்கத் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே  பூஜை அறை மட்டுமல்லாமல் வீடு முழுவதும் சாம்பிராணி வாசம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

விளக்கேற்றும் நேரத்தில் தலை வாருதல், நகம் வெட்டுதல் கூடாது.

வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்கக் கூடாது.

வீட்டில் உணவுப் பொருட்களின் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பால், தயிர், உப்பு, ஊறுகாய்  போன்றவை நிறைந்து இருக்க வேண்டும்.

சமையல் அறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீடு தேடி வருபவர்களை நன்கு உபசரிக்க வேண்டும்.

மங்கலப் பொருட்களில் ஒன்றாக கண்ணாடி இருப்பதால் சுமங்கலிப் பெண்கள் வீட்டுக்கு வரும்பொழுது மஞ்சள், குங்குமத்துடன் சிறு கண்ணாடி, வெற்றிலை, பாக்கு சேர்த்து கொடுத்து வழி அனுப்பலாம். இதனால் கொடுப்பவர்களுக்கும் அதனை பெறுபவர்களுக்கும் தெய்வீக சக்தி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை