Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கடகம் ஜூலை மாத ராசி பலன் 2024 | July Matha Kadagam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கடகம் ஜூலை மாத ராசி பலன் 2024 | July Matha Kadagam Rasi Palan 2024

Posted DateJune 20, 2024

கடகம் ஜூலை மாத ராசி பொதுப்பலன் 2024 :

கடக ராசிக்காரர்கள் இந்த மாதம்  பொதுவாக புத்திசாலித்தனம் மற்றும் அறிவுக்கூர்மை அதிகரிக்கும். தற்போதுள்ள முரண்பாடுகளை சாதுரியமாகத் தீர்ப்பீர்கள்.  இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் பதட்டங்கள் அதிகரிக்கும். உங்கள் மனதில்  நம்பிக்கை அதிகரிக்கும். தந்தை அல்லது வழிகாட்டிகளுடன் கருத்து வேறுபாடுகள் அல்லது மோதல்கள் ஏற்படலாம். ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் கடக ராசிக்காரர்கள் ஆன்மீகத்தின் பக்கம் ஈர்க்கப்படுவதையும் அறிவாற்றல் அதிகரிப்பதையும் காணலாம். இந்த காலகட்டத்தில்  தொடர்புகள் விரிவடையும்.  எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் பெறக்கூடும். நிதிச் செழிப்பை அனுபவிக்கும் அதே வேளையில், பல வசதிகளை அனுபவிப்பதோடு, ஜூலை மாதத்தில் முந்தைய உடல்நலப் பின்னடைவுகளிலிருந்து மீண்டு வரக்கூடும்.

காதல் / குடும்ப உறவு :

இந்த காலகட்டத்தில் உறவு விஷயங்களில் வாழ்க்கைத் துணையுடன்  வாக்குவாதங்கள் மற்றும் தவறான புரிதல்கள் இருக்கலாம். தாம்பத்திய வாழ்க்கையில் ஈகோ மோதல்களை கவனமாகக் கையாள வேண்டும். குடும்பத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்க சூழ்நிலையை அனுசரித்து  புத்திசாலித்தனத்துடன் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். காதலர்களுக்கு மிதமான பலன் கிட்டும் மாதமாக இந்த மாதம் இருக்கலாம். இளம் வயதினர் மனதில் புதிய காதல் அரும்பு மலரலாம். சிலர் புதிய மற்றும் சாத்தியமான கூட்டாளர்களை சந்திக்கலாம். இருப்பினும், ஜூலை மாதத்தில் உங்கள் துணைக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம். போதிய தகவல்தொடர்பு இல்லாதது கணவன் மனைவிக்கு இடை சில குழப்பங்களையும் தவறான புரிதலையும் உருவாக்கலாம். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு ஜூலை ஒரு நல்ல மாதமாக இருக்கலாம்.  மாதத்தின் ஆரம்ப பாதியில் தாம்பத்திய வாழ்வில் தொந்தரவுகள் இருக்கலாம், இரண்டாவது பாதி இந்த விஷயத்தில் சிறந்த காலமாக இருக்கும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை

நிதிநிலை :

இந்த மாதம்  உங்கள் நிதிநிலை லாபகரமாக இருக்கக் காண்பீர்கள். இந்த மாதம் முழுவதுமே உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கலாம். மாதத்தின் பிற்பாதியில் எதிர் கால நலன் கருதி கணிசமான பணத்தை சேமிப்பீர்கள். முதல் பாதியில் செலவுகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக   மருத்துவச் செலவுகள் இருக்கலாம். பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம். நிதிப் பொறுப்புகள், நிர்வகிக்கக்கூடிய வரம்பிற்குள் இருக்கும்.  இந்த மாதத்தின் பிற்பகுதியில் தொழிலில் அசாதாரண பண வரவு இருக்கலாம். லாபமும் ஆதாயங்களும் கிட்டும். ஊக வணிகம் மற்றும் வர்த்தகத்தில் இருந்து வருமானத்திற்கான வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படும். இந்த மாதம் பயணச் செலவுகள் கூடும். நீங்கள் இந்த மாதம் கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை பெறுவீர்கள்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை

உத்தியோகம் :

இந்த மாதம் உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப்படலாம்.  பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். உங்களின் தேவையற்ற செலவுகள் மற்றும் இழப்புகளுக்கு மேலதிகாரி ஒரு காரணமாக இருக்கலாம். உத்தியோகம் மூலம் திடீர் பண வரவு இருக்கும். பணியிடத்தில் மன அழுத்தமும் பணிச்சுமையும் பெருமளவு குறையும். பணியிடத்தில் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கான வெகுமதியும் பெறுவீர்கள். பணியிடத்தில் நீங்கள் சக பணியாளர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். நீங்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றுவீர்கள்.  உங்கள் திறமைகள் பணியிடத்தில் வெளிப்படும். அலுவலகத்தில் காணப்படும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உங்கள் பொறுப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். இந்த மாதம் உங்கள் பதவியை சிறப்பாக நிர்வகிப்பீர்கள்.  கருத்து வேறுபாடுகளின் போது நீங்கள் சாதுரியத்தை வெளிப்படுத்துவீர்கள். இந்த மாதம் உங்கள் மேலதிகாரி மற்றும் சக[பணியாளர்களிடம் நல்லுறவை  பராமரிப்பீர்கள்.

தொழில் :

இந்த மாதம் நீங்கள் தொழில் மூலம் லாபம் காண்பீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். கூட்டாளர்களுடன் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தொழிலில் சிறிய பின்னடைவுகள் இருக்கலாம். என்றாலும் வருவாயில் முன்னேற்றம்/வளர்ச்சி படிப்படியாக இருக்கலாம். வணிகத்தில்  மேலாண்மை தலைமை மற்றும் நிர்வாகம் மாற்றத்திற்கு உள்ளாகலாம். தொழிலைப் பொறுத்தவரை  கடக ராசிக்காரர்களுக்கு ஜூலை  மாதம் நற்பலன்களை அளிக்கும் மாதமாகும். தொழில் மூலம் கிடைக்கும் உங்கள் பணத்தை  திறம்பட முதலீடு செய்ய நீங்கள் இந்த காலகட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ரியல் எஸ்டேட் முதலீடுகள் மூலம் லாபங்கள் இருக்கலாம். வணிக ஒப்பந்தங்கள் லாபகரமான வழியில் முடிவடையும். இந்த மாதத்தின் ஆரம்ப பாதியில் செலவுகள் அரசாங்க விதிமுறைகள் மற்றும் தேவைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

உத்தியோகம் / தொழிலில்  மேன்மை பெற : சனி பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும்  இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் உடல் உஷ்ணம் மற்றும் பித்த அதிகரிப்பு ஏற்படலாம். மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இந்த மாதம்   நீங்கள் மன ஆரோக்கியத்துடன்  காணப்படுவீர்கள். என்றாலும்  சளி அல்லது தலைவலி போன்ற சிறிய உடல் பாதிப்புகளை நீங்கள் சந்திக்கலாம். யோகா அல்லது நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். மொத்தத்தில்,கடக ராசி நபர்கள் ஆரோக்கியமான மற்றும் துடிப்பான மாதத்தை அனுபவிக்க முடியும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை

மாணவர்கள் :

மாணவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியப் பிரச்சினை காரணமாக படிப்பில் கவனச் சிதறல் இருக்கலாம். இது படிப்பில் இடையூறுகளை ஏற்படுத்தலாம். மனதை ஒருமுகப்படுத்தி படிப்பதன் மூலம் பாடங்களை சரியான முறையில் கற்க முடியும். தடைகளை கடக்க ஆசிரியர்கள் மற்றும் குருக்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் உதவிகரமாக இருக்கும். மொத்தத்தில், ஜூலை மாதம் கடக ராசி மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும்  மாதமாக விளங்குகிறது. பள்ளி மாணவர்கள் சிறப்பாக தேர்வுகளை எழுதி வெற்றி காணலாம். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியும். வெளிநாட்டுக் கல்வி தொடர்பான வாய்ப்புகளுக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கு இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் அவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். .

கல்வியில் சிறந்து விளங்க: சிவன் பூஜை

சுப தேதிகள் : 1, 2, 3, 4, 12, 13, 14, 15, 16, 19, 20, 21, 22, 28, 29, 30 & 31.

அசுப தேதிகள் : 5, 6, 7, 8, 9, 23, 24 & 25.