Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மிதுனம் ஜூலை மாத ராசி பலன் 2024 | July Matha Mithunam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மிதுனம் ஜூலை மாத ராசி பலன் 2024 | July Matha Mithunam Rasi Palan 2024

Posted DateJune 19, 2024

மிதுனம் ஜூலை மாத பொதுப்பலன் 2024:

சுய வளர்ச்சி, புதிய வளர்ச்சி நடவடிக்கைகள், குறுகிய பயணங்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு நீண்ட பயணங்கள் மற்றும் காதல் உறவுகள் பற்றிய பல கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஜூலை வழங்கும்.  இருப்பினும், யதார்த்தமாக இருப்பதை விட கற்பனை உலகில் இருப்பதன் மூலம் உங்கள் விருப்பங்கள்  நிறைவேறுவதாக எண்ணுவீர்கள். உங்கள் குழந்தைகள் மீதான அக்கறைகூடும். அவர்கள் மீது நீங்கள் அன்பையும் பாசத்தையும் பொழிவீர்கள் குழந்தைகள், இளைய சகோதரர்கள் மற்றும் தந்தையின் செல்வாக்கு இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன்  வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது இதனை தவிர்ப்பதன் மூலம் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

புதிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் குறுகிய பயணங்கள் செலவுகளை அதிகரிக்கலாம் மற்றும் நிதி இழப்புகளை ஏற்படுத்தும். எனவே, இந்த நடவடிக்கைகளின் போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட பயணங்கள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரும். வாடிக்கையாளர்களின் பாராட்டு உங்கள் தொழிலில் சிறப்பாக செயல்பட உந்துதலாகவும் ஆதரவாகவும் இருக்கும். உங்கள் வணிக வளர்ச்சிக்கான முதலீடுகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது உங்கள் நிதி வளர்ச்சிக்கு பெருமளவு ஆதரவாக இருக்கும்.  உங்களின் தொழில் வளர்ச்சிக்காக புதிய இடங்களுக்கு இடம் பெயர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. வியாபாரம் மற்றும் வேலையில் பதவி உயர்வுகள் மூலம் லாபம் கிடைக்கும், இது மனநிறைவை தரும். சொத்துக்கள் மூலம் பணம் பெற முடியும். இது உங்கள் நிதி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்கள் மற்றும் மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவின் மூலம் பெரிய நிதி வளர்ச்சியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கல்வியில் வளர்ச்சி பெற  மாணவர்களுக்கு இந்த மாதம்  உறுதுணையான காலமாக இருக்கும். உயர்கல்வியில் உங்கள் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, இது வீழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே, வெற்றியை அடைய உங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். இது காதல் உறவுகளில் பிணைப்பை அதிகரிக்க உதவும் மாதமாகும்.

காதல் / குடும்ப உறவு : 

உங்கள் துணையின் உதவி மூலம் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். உங்கள் காதல் துணையின் ஆலோசனை உங்கள் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் துணை உங்களிடம் விசுவாசமாக நடந்து கொல்லாம். இதனால் உங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கலாம்.  உங்களைச் சுற்றி இருப்பவர் மூலம் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்கலாம். உங்கள் துணையுடன் உங்களால் நேரம் செலவழிக்க இயலாமல் போகலாம். உங்கள் இளைய சகோதர சகோதரிகள் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளலாம் மற்றும் அவர்கள் மூலம் உங்கள் காதலுக்கு பிரச்சினை ஏற்படலாம். எனவே, உங்கள் காதல் உறவுக்கான உதவியைப் பெற நண்பர்கள் அல்லது இளைய உடன்பிறப்புகளுடன் தொடர்பு கொள்ளும்போது மிகவும் கவனமாக இருங்கள். ஒருதலைக் காதலில் இருப்பவர்கள் தங்கள் காதலியின் அங்கீகாரத்தைப் பெறலாம். உங்கள் துணையுடன் நீங்கள் வெளியிடங்களுக்குப்   பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது அவர்களுடன் நெருக்கமாக இருக்க உதவும். திருமண வாழ்க்கையில், மகிழ்ச்சியை அடைய உங்கள் துணையின் தவறுகளை மன்னிக்க வேண்டும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

 நிதிநிலை :

நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் ஸ்திரமான வளர்ச்சி காண்பீர்கள்.  தொழில் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் ஆதாயம் மூலம் நீங்கள் பொருளாதார வளர்ச்சி காண்பீர்கள். தொழில் வளர்ச்சி கருதி  நீங்கள்  முதலீடுகளை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் பெரிய அளவில் லாபம் மற்றும் ஆதாயம் காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களும் உங்கள் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கலாம்.  உங்கள் தாயின் ஆதரவாலும் உங்கள் சேமிப்பு மேம்படும். உங்கள் உத்தியோகத்தின் மூலம்  சம்பள உயர்வு சாத்தியமாகும், இது உங்கள் நிதி வளர்ச்சியை மேம்படுத்தலாம். வீடுகள், நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மூலம் பணத்தைப் பெற முடியும். இதுவும் உங்கள் நிதி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இந்த மாதம் உங்கள் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  இது உங்கள் வருமானத்தை அதிகரிக்கவும் உங்கள் சேமிப்பை மேம்படுத்தவும் உதவும். வாழ்க்கைத் துணையின் மூலம் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, இதனால் நிதி இழப்புகள் ஏற்படலாம். மேலும், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மூலம் செலவுகள் அதிகரிக்கலாம். எனவே, பணத்தை மிச்சப்படுத்த உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. குழந்தைகள் நலன் கருதி நீங்கள் செலவுகளை மேற்கொள்வீர்கள்.

உங்கள் நிதிநிலை மேம்பட :சந்திரன் பூஜை

உத்தியோகம் :   

உங்கள் உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்கள் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். நீண்ட பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.  பயணங்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். சிறப்பாகப்  பணியாற்றி பணியிடத்தில் பெயரையும் புகழையும் பெறுவீர்கள். நிர்வாகத்திடம் இருந்து பாராட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது மேலும் சிறப்பாக செயல்படுவதற்கும் அடுத்த நிலைக்குச் செல்வதற்கும் ஊக்கமளிக்கும். இழப்புகள் மற்றும் சிரமங்களைத் தவிர்க்க பணி சார்ந்த விஷயங்களில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவது நல்லது.  உங்களின் குலதெய்வத்தின் ஆசீர்வாதம் உங்கள் செயல்களில் வெற்றியை அடைய உதவும்.

தொழில் : 

இந்த மாதம்   தொழில் முதலீடுகள் மூலம் பெரிய வருமானத்தைப் பெற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். உங்கள் கூட்டாளிகள் மதி நுட்பத்துடன் செயல்படுவார்கள். அதன் மூலம் உங்கள் வருமானத்தில் முன்னேற்றம் சாத்தியமாகும். உங்கள் நிதி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது நலம் விரும்பிகளின் ஆதரவைப் பெறுவது நல்லது.  உங்கள் பலத்தை நிரூபிக்கவும், குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றவும், நிதி வளர்ச்சியின் மூலம் திருப்தி அடையவும் வாய்ப்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : பிருகஸ்பதி பூஜை

ஆரோக்கியம் :   

இரத்தம், குடல், அந்தரங்க உறுப்புகள் மற்றும் மூலவியாதி  தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு இந்த மாதம் துணைபுரியும் காலமாகும். எனவே, முழுமையான மீட்புக்காக இந்த பகுதிகளில் சிக்கல்களை எதிர்கொண்டால் நீங்கள் சிகிச்சைக்கு செல்லலாம். இருப்பினும், கண்கள் மற்றும் சிறுநீரகங்களில் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க, மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அவ்வப்போது பரிசோதனைகள் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. எந்தவொரு பெரிய சிரமமும் இல்லாமல் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த காலம் சாதகமானது. ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவதால் மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை

மாணவர்கள் : 

இந்த மாதம் ஆரம்பக் கல்வி மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். உயர்கல்வி மாணவர்கள் தங்கள்  பணிகளை முடிப்பதில் தாமதம் மற்றும் சிரமங்கள் காரணமாக  வீழ்ச்சியைக்  காணலாம். எனவே, உங்கள் அனைத்து செயல்களையும் அர்ப்பணிப்புடன் செய்வதன் மூலம் வெற்றி காணலாம்.  உங்கள் சூழலில் உள்ளவர்களுடன் சுமூகமான உறவைப் பேணுவது கடினமாக இருக்கும், இது சண்டைகளை ஏற்படுத்தும். எனவே, பொறுமையைக் கடைப்பிடிக்கவும், மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

சுப தேதிகள் : 1,7,8,12,13,14,15,16,23,24,25,28,29.

அசுப தேதிகள் : 2,3,4,5,6,17,18,21,22,30.