இந்த மாதம் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன.அதன் மூலம் உங்களுக்கு பண வரவு காணப்படும். பொருளாதாரம் சம்பந்தமான உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி காணலாம். உத்தியோகத்தின் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் பொருளாதார வளர்ச்சி உங்களுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தரலாம். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள போதிய பணம் உங்களிடம் இருக்கலாம். இந்த மாதம் உங்கள் எதிரிகளைத் தோற்கடிக்கவும், சிரமங்களை சமாளிக்கவும் தைரியத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும். நீங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் சாத்தியமாகும். அதன் மூலம் லாபம் மற்றும் ஆதாயம் காண்பீர்கள். கூட்டுத் தொழில் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம். தொழில் மூலம் நிதி வளர்ச்சி காண உங்கள் முடிவுகளை நீங்களாகவே எடுப்பது நல்லது. மற்றவர்களை நம்பி எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.கூட்டாளிகள் மூலம் வியாபாரம் வீழ்ச்சியைக் காணலாம். எனவே, இழப்புகளைத் தவிர்க்க கூட்டாண்மைகளிலிருந்து விலகி இருங்கள். உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தாமதங்களைத் தவிர்க்க பிறரை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் தந்தை மற்றும் தந்தை வயதை ஓத்த நபர்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களால் செலவுகள் மற்றும் நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக பயணங்களைத் திட்டமிடுங்கள், இது இழப்புகளைக் குறைக்கவும் திருப்தியை அளிக்கவும் உதவும். காதல் உறவுகளில் தோல்விகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொறுமையைக் கடைப்பிடிக்கவும், உறவு முறிவைத் தவிர்க்க உங்கள் அன்புக்குரியவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். இந்த காலம் உங்கள் துணையை கண்டுபிடிப்பதிலும் திருமணம் செய்வதிலும் தாமதத்தை அதிகரிக்கலாம். திருமண வாழ்க்கையில், உங்கள் வாழ்க்கை துணையுடன் சுமூகமான உறவைப் பேணுவது கடினமாக இருக்கும். கல்வி வளர்ச்சி மற்றும் உங்கள் இலக்குகளை அடைவதற்கு மிகவும் உறுதுணையான காலம். உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதம் உயர் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
காதலர்கள் தங்கள் உறவுகளில் கவனமாக செயல்பட வேண்டும். உங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் நீங்கள் கவனமுடன் நடந்து கொள்வதன் மூலம் உறவில் இடைவெளியை தவிர்க்க முடியும். உங்கள் காதல் விஷயங்களில் நீங்கள் சுதந்திரமாக முடிவெடுங்கள். உங்கள் தனிப்பட்ட விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். காதல் உறவுகளில் காணப்படும் சிக்கல்கள் காரணமாக உங்களால் பணியில் கவனம் செலுத்த இயலாமல் போகலாம்.இதனால் உத்தியோகம் / தொழிலில் வீழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சிரமங்களைத் தவிர்க்க காதலுக்கும் பணிக்கும் /தொழிலுக்கும் சமமான முக்கியத்துவத்தை வழங்குங்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் பல உறவுகளால் சமூகத்தில் திடீர் வீழ்ச்சிகளையும் அவமதிப்புகளையும் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, உங்கள் தகவல்தொடர்பு சாதனங்களுக்கான பாஸ்வேர்டை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அனைவருடனும் வரம்புகள் மற்றும் தூரத்தை பராமரிக்கவும், சிரமங்களைத் தவிர்க்க மற்றவர்கள் உங்களை நெருங்க அனுமதிக்காதீர்கள்.திருமணத்திற்கு துணை தேடுபவர்கள் பல சிரமங்களை சந்திக்க நேரலாம். எனவே, நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். திருமண வாழ்க்கையில், உங்கள் வாழ்க்கை துணையுடன் சில பிரச்சினைகள் எழும், இது வாக்குவாதங்களை ஏற்படுத்தும். மேலும், உங்கள் பங்குதாரர் உங்கள் வார்த்தைகளுக்கு செவிசாய்க்காமல் இருக்கலாம், இது பிரிவினையின் எண்ணத்தை கொண்டு வரக்கூடும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : பிருகஸ்பதி பூஜை
இந்த மாதம் நீங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய தொழில் உங்கள் நிதி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். வெளி நாடுகள் மூலம் வரும் பண வருவாய் உங்கள் நிதி வளர்ச்சியை ஆதரிக்கும். உங்கள் வருமானம் மற்றும் சேமிப்பை மேம்படுத்த குறுகிய பயணங்களும் துணைபுரியலாம். உங்கள் இளைய உடன்பிறந்தவர்களின் திருமணச் செலவுகள் ஏற்படக்கூடும். இந்த சுப செலவு உங்களுக்கு திருப்தியை அளிக்கும். இருப்பினும், உங்கள் குடும்பத்தில் உங்கள் தந்தை மற்றும் தந்தை வயதை ஒத்த நபர்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, அவர்கள் மீது அதிக கவனம் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களால் செலவுகள் மற்றும் நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இழப்புகளைக் குறைக்க உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக பயணங்களைத் திட்டமிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. கூட்டாண்மை மூலம் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, கூட்டாண்மைகளைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. விஷ்ணு பகவானை தவறாமல் வழிபடுவது பெரிய வளர்ச்சியைப் பெற உதவும்.
இந்த மாதம் உங்கள் உத்தியோகத்திற்கு அனுகூலமான மாதமாக இருக்கும். உத்தியோகம் சார்ந்த உங்கள் முயற்சிகளில் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் எதிரிகளை வெல்லும் வலிமையையும் நம்பிக்கையையும் நீங்கள் பெறுவீர்கள். கஷ்டங்களை சமாளிப்பீர்கள். திருப்திகரமாக பணி புரிவீர்கள்.. உங்கள் வேலையில் நீங்கள் சாதனைகள் படைத்து உயர் பதவிக்கு செல்வீர்கள். உங்கள் உத்தியோக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வேலை மாற்றம் மற்றும் இட மாற்றம் இருக்கலாம். பிற நாடுகளிலும் பன்னாட்டு நிறுவனங்களிலும் உள்ள வேலைகள் இந்த காலகட்டத்தில் பெரும் வளர்ச்சியை அளிக்கும்.
இந்த மாதம் உங்கள் தொழிலைப் பொறுத்தவரை நீங்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். தொழில் சார்ந்த முடிவுகளை நீங்களே எடுபப்து நல்லது. மற்றவர்களை சார்ந்து இருக்காதீர்கள். தொழிலில் நஷ்டத்தைத் தவிர்க்க உங்கள் திட்டங்களை ஒன்றிற்கு இரண்டு முறை ஆராய்ந்து பார்த்து செயல்படுத்துங்கள். தொழிலில் உங்கள் கவனம் சிதறலாம். சில பின்னடைவுகள் அல்லது வீழ்ச்சியை நீங்கள் காண நேரலாம். எனவே திட்டமிட்டு உங்கள் பணிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் என இரண்டிற்கு இடையே சமநிலையுடன் செயல்படுங்கள். கூட்டுத் தொழில் மேற்கொள்பவர்கள் தங்கள் கூட்டாளிகள் மூலம் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். எனவே இந்த மாதம் கூட்டுத் தொழில் தவிர்ப்பது நல்லது.
உத்தியோகம் / தோழிலில் மேன்மை பெற : சுக்கிரன் பூஜை
முழங்கால் மூட்டுகள், கால்கள், வயிறு மற்றும் முதுகுத்தண்டு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு ஜூலை மாதம் ஒரு அனுகூலமான காலமாகும். எனவே, முழுமையான மீட்புக்காக இந்த பகுதிகளில் சிக்கல்களை எதிர்கொண்டால் நீங்கள் சிகிச்சைக்கு செல்லலாம். இருப்பினும், நுரையீரல் மற்றும் சுவாசத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, நீங்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து மருத்துவரின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. நீண்ட பயணங்கள் மற்றும் ஆன்மீக பயணங்கள் மன அமைதிக்கு உறுதுணையாக இருக்கும். கருப்பசாமியை வழிபட்டால் பெரிய சிரமங்கள் இல்லாமல் உங்கள் ஆரோக்கியம் பேண உதவும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை
இந்த மாதம் சிம்ம ராசி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அனுகூலமாக இருக்கும். ஆரம்பக் கல்வி மற்றும் உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு தங்கள் இலக்குகளை அடைந்து பெரிய முன்னேற்றம் காணலாம். கல்வி சார்ந்த விஷயங்களில் கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரலாம். கல்வி கற்பதில் இருந்து வந்த தாமதம் மற்றும் சிரமங்கள் குறைய ஆரம்பிக்கும். நீங்கள் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் பெற நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற முடியும். தகவல்தொடர்பு தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம் உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும். இது உங்கள் சூழலில் புகழைக் கொடுக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை
சுப தேதிகள் : 1,5,6,12,13,17,18,19,20,28,29,30.
அசுப தேதிகள் : 7,8,9,10,11,21,22,25,26,27,
September 19, 2025
September 17, 2025
September 15, 2025