Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
வேலை வாய்ப்பை அள்ளித் தரும் எளிய பரிகாரம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வேலை வாய்ப்பை அள்ளித் தரும் எளிய பரிகாரம்

Posted DateJune 17, 2024

பல பேருக்கு வாழ்வாதாரமாக இருப்பது அவர்கள் பார்க்கும் வேலை என்று தான் கூற வேண்டும். வேலை கிடைத்தால் தான் வருமானம் வரும். வருமானம் இருந்தால் தான் வாழ்க்கை நடத்த முடியும். பல பேருக்கு படித்து முடித்து விட்டு வேலை கிடைக்காமல் இருக்கலாம். ஒரு சிலருக்கு தாங்கள் விரும்பும் வேலை கிடைக்காமல் இருக்கலாம். ஒரு சிலருக்கு அரசாங்கத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம்.

எனவே வேலை என்று எடுத்துக் கொண்டால், நமக்கு கண்டிப்பாக வேலை என்பது அவசியம். அது நல்ல வேலையாக இருக்க  வேண்டும். மனதிற்கு பிடித்த வேலையாக  இருக்க வேண்டும். அதன் மூலம் நல்ல வருமானம் வேண்டும் என்ற   எதிர்பார்ப்புகள்  நம் அனைவருக்கும்  உண்டு. உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுவார்கள்.அந்தக் காலத்தில் ஆண்கள் மட்டுமே வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் வேலை பார்க்க வேண்டிய கட்டாய சூழல் உள்ளது. சிலருக்கு திருப்தி இல்லாத வேலை இருக்கும். ஒரு சிலருக்கு நிரந்தரம் அற்ற வேலை இருக்கும். ஒரு சிலருக்கு வேலை கிடைக்காமலே இருக்கும்.

நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு நமக்கு உரிய தகுதி இருக்க வேண்டும். அதற்கேற்ற படிப்பு இருக்க வேண்டும். ஒரு சில சமயங்களில் வேலைக்கான தேர்வு எழுத வேண்டியிருக்கும். ஒரு சில சமயங்களில் வேலைக்கான நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். இரண்டு இடத்திலும் நாம் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றல் இரண்டும் நமக்கு தேவைப்படும்.  இவை அனைத்தையும் மீறி நமது மனதிற்கேற்ற வேலை நமக்கு கிடைக்க வேண்டும். அதன் மூலம் நல்ல வருமானம் வேண்டும். கிடைக்கும் வேலை நல்ல வேலையாக இருக்க வேண்டும். அதனை நாம் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். கிடைத்த வேலை நிரந்தரமாக இருக்குமா? இந்த வேலை தங்குமா? என்றெல்லாம் பயம் வரலாம். நமது முயற்சி மற்றும் கடவுளின் அருள் இரண்டும் இருந்தால் நமக்கு எளிதில் வேலை கிடைக்கும். பயத்தில் இருந்து மீண்டு வரவும் நல்ல வேலை கிடைக்கவும் செய்யக் கூடிய எளிய பரிகாரம் ஒன்றைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இந்த வழிபாடு கால பைரவருக்கு உண்டான வழிபாடு ஆகும். இந்த வழிபாட்டை நாம் தேய்பிறை அஷ்டமி அன்று செய்யலாம். அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் செய்யல்லாம். முதல் நாளே நல்ல தேங்காயாக பார்த்து தேங்காயை வீட்டிற்கு வாங்கி வரவும். அதை நன்றாக சுத்தம் செய்து அதில் மஞ்சள் தடவி வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். மறுநாள் ராகு கால நேரத்தில்  அருகில் உள்ள பைரவர் ஆலயம் சென்று சன்னதிக்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து அது முழுவதும் பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். அடுத்ததாக நீங்கள் கொண்டு வந்த தேங்காயை சரிசமமாக உடைத்து அதில் இருக்கக்கூடிய நீரை கால்படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். பிறகு தேங்காய்க்கு சந்தனம் குங்குமம் வைத்து பச்சரிசியின் மேல் வைக்க வேண்டும். அடுத்ததாக இந்த தேங்காயில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து செவ்வரளி பூக்களை உதிரியாக வாங்கி வந்து உங்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலை மனதிற்குள் வைத்துக்கொண்டு அந்த பூக்களை மாலையாக தொடுத்து பைரவருக்கும்  கொடுக்க வேண்டும். சிறிது உதிரிப்பூக்களையும் எடுத்து பைரவருக்கு அர்ச்சனை செய்வதற்காக கொடுத்து விடுங்கள். பிறகு உங்களுக்கு நீங்கள் நினைத்த வேலை கிடைக்க வேண்டும் என்று கூறி  அர்ச்சனை செய்ய சொல்லுங்கள். இப்படி தொடர்ந்து ஒன்பது தேய்பிறை அஷ்டமி அல்லது ஒன்பது ஞாயிறு தேங்காய் தீபத்தை ஏற்றி வைத்து பைரவருக்கு செவ்வரளி மாலையை சாற்றி செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய நீங்கள் நினைத்த வேலை நினைத்த படி கிடைக்கும்.