இந்த மாதம் சொத்துக்களின் மீதிருந்த உங்களின் கவனம் முழுவதும் உங்கள் குழந்தைகளின் நலன் பற்றியதாக மாறலாம். அவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன் பிறந்தவர்களுடன் மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நீங்கள் முறையான தூக்கம் மேற்கொள்வீர்கள். என்றாலும் குடும்பப் பிரச்சினைகள் பற்றிய கவலை உங்களுக்கு இருக்கலாம். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் இருக்கலாம். குடும்ப விஷயங்களில் உங்களின் தந்தை மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்தலாம். இந்த மாதம் உங்கள் தாயுடனான உறவு சிறப்பாக இருக்கும். இந்த மாதம் நிதி சார்ந்த பொறுப்புகள் உங்களுக்கு அதிகரிக்கலாம். அதன் விளைவாக கடன் சுமை அதிகரிக்கலாம். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் சில குறைகள் இருக்கலாம். நீங்கள் வீட்டுச் சூழலை மாற்றி அமைக்க விரும்புவீர்கள்.. உங்கள் முதலீடுகளை மாற்றி அமைக்க விரும்புவீர்கள். இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் குழந்தைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்கள் மனதில் பயமும் பதட்டமும் தொடர்ந்து காணப்படும். ஊக வணிகத்தின் மூலம் சிறந்த வருமானம் காணும் வகையில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
உறவு சார்ந்த விஷயங்களில் முடிவெடுப்பதில் சில குழப்பங்கள் இருக்கலாம். ஒரு சில இளம் கும்ப ராசியினர் மனதில் காதல் அரும்பு மலரலாம். ஒரு சில காதலர்கள் தங்கள் காதல் உறவை திருமண உறவாக மாற்றிக் கொள்ளலாம். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். இது வரை இருந்து வந்த ஏமாற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் மூலம் நல்ல அனுபவங்களைப் பெறலாம். கணவன் மனைவி இருவரின் ஒருங்கிணைந்த செல்வம் குறையலாம். உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் நீங்கள் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை/ கூட்டாளர் உங்கள் உத்தியோக மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை
இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலையை நிர்வகிப்பது சற்று கடினமாக இருக்கும். பணப் புழக்கம் நன்றாக இருந்தாலும் நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் சொந்த பந்தங்களுக்காகவும் பணத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் குறித்த செலவுகள் இருக்கலாம்.மேலும் சில எதிர்பாராத செலவுகளையும் இந்த மாதம் நீங்கள் சந்திக்க நேரலாம். ஊக வணிகம் மற்றும் பங்கு வர்த்தகம் மூலம் நீங்கள் ஆதாயம் காண்பீர்கள். ரியல் எஸ்டேட் மூலம் நல்ல லாபம் கிட்டும். நீங்கள் பணத்தை சேர்ப்பதற்கு அனுகூலமான காலக்கட்டமாக இந்த மாதம் அமையும். இந்த மாதம் கடன் சுமை தற்காலிகமாகக் குறையலாம். அசையாச் சொத்து மற்றும் வாகனம் வாங்கும் வகையில் பணத்தை முதலீடு செய்வீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : கேது பூஜை
கும்ப ராசி அன்பர்களுக்கு வரும் மாதங்களில் நல்ல வாய்ப்புகள் இருக்கும். பணியிடத்தில் அதிகாரம் பெறுவார்கள். சாதுரியத்துடன் செயல்படுவார்கள். மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். சென்ற மாதத்தை விட இந்த மாதம் தொழில் வல்லுனர்களுக்கு சிறப்பான பலன்கள் கிட்டும். உங்களின் படைப்புத் திறனுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் முயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு ஏற்ற பாராட்டு மற்றும் அங்கீகாரம் கிடக்கும். உங்கள் தகவல் தொடர்புத் திறன் சிறப்பாக இருக்கும். அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். பணியில் நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் மூலம் நீங்கள் சிறப்பாகச் செயல்படுவீர்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறுவீர்கள். பணி நிமித்தமாக சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள்.
இந்த மாதம் நீங்கள் தொழிலை சிறந்த வகையில் நிர்வகிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யலாம். கூட்டாளிகளின் ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். இயற்கை காரணங்களால் சில இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு தேவையான காப்பீடு மேற்கொள்வது நல்லது. தொழிலில் அதிகப்படியான லாபத்தைப் பெறுவதற்கு நீங்கள் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் செயல்திறன் பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அரசாங்க ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். உங்கள் தைரியமான மற்றும் நேர்மறையான முயற்சிகள் மூலம் கடந்த கால நஷ்டங்களை தீர்ப்பீர்கள். பணியாளர்கள் மூலம் தொழில் லாபத்தில் சில தடைகளை சந்திக்க நேரும். என்றாலும் உணர்ச்சி வசப்படாமல் செயல்படுவதன் மூலம் நிலைமையை சமாளிக்கலாம்.
உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். என்றாலும் தசை பிடிப்பு மற்றும் எலும்பு மூட்டுகளில் பிரச்சினைகளை சந்திக்க நேரும். மாதத்தின் முதல் பாதியில் உங்கள் தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். முறையான தூக்கம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் சிறு தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களின் முடிவெடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும். தங்கள் திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்துவார்கள். என்றாலும் ஒரு சில மாணவர்களுக்கு சனியின் பாதகமான தாக்கம் காரணமாக மந்தமான முன்னேற்றம் காணப்படும். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதலைப் பெறுவதன் மூலம் நிலைமையை சமாளிக்கலாம். வெளிநாடு சென்று உயர் கல்வி பயில நினைக்கும் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க : சிவன் பூஜை
சுப தேதிகள் : 3, 4, 5, 6, 10, 11, 12, 13, 20, 21, 22, 23 & 30.
அசுப தேதிகள் : 14, 15, 16, 24, 25, 26 & 27.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025