Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
தனுசு ஜூன் மாத ராசி பலன் 2024 | June Matha Dhanusu Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தனுசு ஜூன் மாத ராசி பலன் 2024 | June Matha Dhanusu Rasi Palan 2024

Posted DateMay 28, 2024

தனுசு ஜூன் மாத பொதுப்பலன் 2024:

இந்த மாதம் கலவையான பலன்கள் காணப்படும். எதிர்பாராத கருத்து வேறுபாடுக்ளுக்குப் பிறகு மீண்டும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடும் வாய்ப்பு உள்ளது. உங்கள் தோற்றத்தில் மெருகு கூடும். உங்கள் மனதின் தெளிவு உங்கள் முகத்தில் வெளிப்படும். வரும் மாதங்களில் சொத்து தொடர்பான விஷயங்கள் ஒரு தீர்வுக்கு வரும். உடன் பிறப்புடனான  பிரச்சினைகள் தொடரும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். நீங்கள் எதிரிகளை வெல்வீர்கள். உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு இது அனுகூலமான மாதம். உங்கள் முன்னேற்றத்தில்  அதிர்ஷ்டம் பெரும் பங்கு வகிக்கும். எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாகும் காரணத்தால் உங்கள் மகிழ்ச்சி சற்று குறையலாம். உங்கள் வேலையில் நீங்கள் பற்றிலாமல் இருக்கலாம். குழந்தைகளிடம் நீங்கள் உங்கள் ஈகோ மனப்பான்மையைக் காட்டுவீர்கள். மாதத்தின் இரண்டாம் பாதியில் நீங்கள் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவீர்கள். பயனுள்ள காரியங்களுக்காக செலவு செய்வீர்கள். என்றாலும் உங்கள் நிதிச்சுமை கூடும். உங்கள் சொந்த ஊரில் இருந்து வேறு இடங்களுக்கு மாற விரும்புவீர்கள். இந்த மாதம் உங்கள் மன அமைதி குறையலாம்.

காதல் / குடும்ப உறவு :

உறவு சார்ந்த விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களைச் சுற்றி இருக்கும் நபர்களால் நீங்கள் உணர்ச்சி வசப்பட வாய்ப்புள்ளது.  இது உங்கள் தனிப்பட்ட வாழ்வை பாதிக்கலாம். காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் வாக்குவாதங்களும் ஏற்பட  வாய்ப்பு உள்ளது. நேர்மை, வெளிப்படை பேச்சு மூலம் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில்  கணவன் மனைவிக்கு இடையே அன்பும் பாசமும் பெருகும். ஒரு சிலருக்கு புதிய உறவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஈகோ பிரச்சினை காரணமாக குடும்ப உறுப்பினரக்ளுக்கு இடையே  வாக்குவாதங்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம். ஒரு சிலருக்கு உறவில் பிரிவுகள் கூட சாத்தியம். திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஆழ்ந்த பிணைப்பு இருக்கலாம். மொத்தத்தில் இந்த மாதம் உறவைப் பொறுத்தவரை கலவையான பலன்களைக் காணலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : புதன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை மிதமாக இருக்கும். உங்களுக்கு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் பணத்தை செலவு செய்யலாம். தந்தை வழி பூர்வீகச் சொத்து கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் தேவைக்காக நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். கடன் வாங்கும் கட்டாயம் ஏற்படலாம். பணப்புழக்கம் திடீர் என்று அதிகரிக்கலாம். வீடு மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிட்டும். பண வருவாய் இருக்கும். நீங்கள்  இடமாற்றம் அல்லது முதலீடுகளை விற்கும் வகையில் செலவுகளை மேற்கொள்ள நேரலாம். பங்கு வர்த்தக விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். மாதத்தின் இரண்டாம் பாதியில் தொழில் கூட்டாளிகள் மூலம் பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

உங்கள் நிதிநிலை மேம்பட : சனி பூஜை

உத்தியோகம் :

இந்த மாதம் உங்கள் உத்தியோக வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் சக பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் சாதுரியமாகப் பழக வேண்டும். மேலதிகாரிகள் உங்கள் பிரச்சினைகளுக்கு காரணமாக அமையலாம். தொழில் நிபுணர்களுக்கு இந்த மாதம் சவாலான காலக்கட்டமாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் முன்னேற்றம் இருந்தாலும் சக பணியாளர்கள் எதிரிகள் போல செயல்படலாம். பயமும் பதட்டமும் உங்களை ஆட்கொள்ளலாம். பணியில் வெற்றி பெற பயம் மற்றும் பதற்றத்தைக் கைவிட  வேண்டும்.  மாதத்தின் கடைசி வாரத்தில் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அங்கீகாரம் கிட்டும். உத்தியோகத்தின் மூலம் உங்கள் பொருளாதார நிலை உயரலாம்.  இந்த மாதத்தின் முதல் பாதியில், உங்கள் உத்தியோகம்/ தொழிலில் மேலதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின்  குறுக்கீடு இருக்கலாம்.

 தொழில் :

தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் மிதமான பலன்கள் கிட்டும் மாதமாக இருக்கும். கூட்டாளிகள், நண்பர்கள் மற்றும் பங்குதாரார்கள் மூலம் உங்கள் தொழிலை ஸ்திரப்படுத்டுவீர்கள் / விரிவுபடுத்துவீர்கள். இந்த மாதம் நீங்கள் புதிய கூட்டுத் தொழிலில் இறங்கும் வாய்ப்பு உள்ளதை கிரக நிலைகள் சுட்டிக் காட்டுகின்றன.  தொழில் உத்திகளை மறு பரிசீலனை செய்யவும், தொழிலை விரிவுபடுத்த புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் காணப்படும் சவால்கள்  தற்காலிகமாக பயத்தையும் பதட்டத்தையும் அளிக்கலாம். அரசு அதிகாரிகள் மூலம் சிக்கல்கள் மற்றும் வழக்குப் பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த கால சந்தைப் பங்கீடு வீழ்ச்சியில் இருந்து இந்த மாதம் மீள்வீர்கள்.சந்தைப் பங்கை மீட்டெடுப்பதில் வாடிக்கையாளர் திருப்தி முக்கியமானதாக இருக்கும். தொழிலில் உங்கள் இலக்கு மற்றும் நீண்ட கால கண்ணோட்டத்தைப் பொறுத்து உங்கள் செயல்பாடுகள் இருக்கலாம்.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : கேது பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்களுக்கு மன அழுத்தம் இருக்கலாம். எனவே இந்த காலக்கட்டத்தில் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கவலை உங்களுக்கு இருக்கலாம்.  உண்ணும் உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். ஆரோக்கியத்தைப் பராமரிக்க தொடர்ந்து எளிய உடற்பயிற்சி மேற்கொள்ளவும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை

மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். என்றாலும் கல்வி கற்கும் போது பொறுமை அவசியம். ஆசிரியர் மற்றும் வழிகாட்டிகளுடனான உறவு என்று வரும் போது கலவையான பலன்களைக் காண்பீர்கள். புதிய நண்பர்கள் மூலம் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதனைத் தவிர்க்க வேண்டும். கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் ஒரு சில மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனத்தில் சேர்க்கை கிடைக்கப் பெறுவார்கள்.

கல்வியில் சிறந்து விளங்க : துர்கா பூஜை

சுப தேதிகள் : 1, 2, 5, 6, 7, 8, 14, 15, 16, 17, 18, 26, 27, 28 & 29.

அசுப தேதிகள் : 9, 10, 11, 19, 20, 21, 22 & 23.