இந்த மாதம் நீங்கள் உங்கள் உத்தியோகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உகந்த மாதம் ஆகும். நீங்கள் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். அது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். என்றாலும் சில தற்காலிக தாமதங்களை சந்திப்பீர்கள். அது உங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கும். உங்கள் இலக்குகளை அடையும் வரை விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பனிப்புக்கான பலனை நீங்கள் பெற வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் உங்கள் வருமானம் பெருக வாய்ப்பு உள்ளது. வீடு, நிலம் , வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். அதன் மூலம் உங்கள் பொருளாதார நிலை முன்னேறலாம். உங்கள் சொந்த ஊர் சம்பந்தப்பட்ட விஷயங்களை இந்த மாதம் செய்யாமல் தள்ளிப் போடுவதும் பொறுமையுடன் செயல்பட வேண்டியதும் அவசியம். இந்த மாதம் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். கடன் மற்றும் வழக்குப் பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். அதிக பணிகள் காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே முறையான தூக்கம் மற்றும் தேவையான ஓய்வை மேற்கொள்ளுங்கள். ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிட்டலாம். உங்களின் சில பிரச்சினைகளுக்கு உங்கள் பிள்ளைகள் காரணமாக இருக்கலாம். எனவே அவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். ஆரம்பக் கல்வி மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.
இந்த மாதம் காதல் உறவில் மகிழ்ச்சி காணப்பட வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் காதல் துணையை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வாய்ப்பு கிட்டலாம். மேலும் உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர் மற்றும் குடும்ப உறுபினர்களின் சம்மதம் பெறும் வாய்ப்பும் உள்ளது. ஒரு சிலருக்கு பல வாய்ப்புகள் வரலாம். எனவே துணையை தேர்ந்தெடுக்கும் போது கவனம் அவசியம். உங்கள் துணையின் ஆதரவின் மூலம் நீங்கள் பொருளாதார சிக்கல்களை சமாளிப்பீர்கள். திருமணமான தம்பதிகள் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். இந்த மாதம் நீங்கள் புதிய நபர்களை சந்திக்கலாம். அவர்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்வில் தலையிடலாம். இதனால் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு பிரச்சினைகள் வரலாம். எனவே இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. உங்கள் தனிப்பட்ட விஷயங்களை ஆடியோ, அல்லது வீடியோ வடிவில் வைத்திருக்காதீர்கள். உங்கள் கடவுச் சொல்லை பிறரிடம் பகிர்ந்து கொல்ள்ளாதீர்கள். மகான்களை வழிபடுவதன் மூலம் உறவில் மகிழ்ச்சி காணலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : பிருகஸ்பதி பூஜை
இந்த மாதம் உங்கள் வருமானம் மற்றும் சேமிப்பு பணத்தை உங்கள் வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்வீர்கள். எனவே நஷ்டத்தைத் தவிர்க்க பணத்தை உங்கள் வாழ்க்கைத் துணையின் பேரில் சேமியுங்கள். நீங்கள் பிறருக்காகவும் பணம் செலவு செய்யும் வாய்ப்பு பெறுவீர்கள். அதன் மூலம் சமூகத்தில் பெயரும் புகழும் பெறுவீர்கள். என்றாலும் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே உங்கள் செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். உங்கள் உத்தியோகம் மூலம் வருமானத்தை பெருக்கிக் கொள்வீர்கள். மேலும் புதிய பணிகள் உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இந்த மாதம் மூதாதையர் சொத்து உங்களுக்கு வரலாம். உங்கள் தாயிடம் இருந்து பணம் பெறுவீர்கள். ஊக வணிகம் மூலம் திடீர் வருமானம் வரலாம். சிவனை வணங்குவதன் மூலம் நீங்கள் பொருளாதார வளர்ச்சி காணலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை
உங்கள் உத்தியோக முன்னேற்றத்திற்காக நீங்கள் வெளிநாடுகளில் தங்க இந்த மாதம் அனுகூலமாக இருக்கும். உத்தியோகம் மூலம் உங்கள் வாழ்வில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோக முன்னேற்றத்தின் மூலம் நீங்கள் உங்கள் நீண்ட நாள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். வெளிநாடுகளில் இருக்கும் விருச்சிக ராசியினர் உத்தியோக முன்னேற்றத்திற்காக இடம் மாற வாய்ப்புள்ளது. ஆராய்ச்சி துறையில் பணி புரிபவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதம் ஆகும்.
இந்த மாதம் உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு பல கூட்டாளிகள் உங்களுடன் இணைய வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையின் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் புதிய யோசனைகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். அதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வெற்றி காண்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். நீங்கள் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இது உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். இப்பொழுது நீங்கள் மேற்கொள்ளும் முக்கிய முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல பலனை அளிக்கும். உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு அரசு மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது.
உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : புதன் பூஜை
குடல், மலச்சிக்கல், பற்கள் மற்றும் வாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு இந்த மாதம் சாதகமான மாதம் ஆகும். அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து, உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க மருத்துவரின் வழிமுறைகளைப் பின்பற்றவும். இந்த காலம் கடின உழைப்பு மற்றும் தொழில் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அதிக நேரத்தை செலவிடுவதால் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எனவே, உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க சரியான ஓய்வு மற்றும் தூக்கம் மேற்கொள்ளவும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை
மாணவர்கள் தங்கள் லட்சியங்களை அடைவதற்கு ஏற்ற மாதமாக இந்த மாதம் இருக்கலாம். நீங்கள் உங்கள் அறிவு மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு குழுவாக சேர்ந்து படிக்கலாம். புதிய புத்தகங்கள் படிக்கும் வழக்கம் உங்கள் அறிவை வளர்க்கும். எனவே நீங்கள் நூலகம் சென்று புதிய விஷயங்களை படித்து அறிந்து கொள்ளலாம். அரசுத் தேர்வுக்கு நீங்கள் தயாராகலாம். ஆசிரியரின் பாராட்டுகளை பெரும் வாய்ப்பு உள்ளது இது உங்களுக்கு திருப்தியையும் ஊக்கத்தையும் அளிக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை
சுப தேதிகள் : 1,2,10,11,15,16,22,23,26,27,28,29.
அசுப தேதிகள் : 3,4,7,8,9,17,18,19,20,21,30.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025