Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
துலாம் ஜூன் மாத ராசி பலன் 2024 | June Matha Thulam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

துலாம் ஜூன் மாத ராசி பலன் 2024 | June Matha Thulam Rasi Palan 2024

Posted DateMay 27, 2024

துலாம் ஜூன் மாத பொதுப்பலன் 2024:

துலாம் ராசியினர் இந்த மாதம் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகளை சந்திப்பார்கள். மாதத்தின் முதல் பாதியில் மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். தனிப்பட்ட வாழ்வில் சில விரும்பத்தகாத நிகழ்வுகளை சந்திக்கலாம். தந்தை அல்லது வழிகாட்டியுடன் மோதல்கள் ஏற்படலாம். வாழ்வில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். இந்த சவால்களை சந்திக்க நேர்மறை அணுகுமுறையுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். கடவுள் வழிபாடு அமைதியை அளிக்கலாம். பொதுவாகவே பிறருடன் பழகும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம். சர்ச்சைகளில் ஈடுபடலாம். குடும்ப உறுப்பினர்களுடன் தவறான புரிதல்கள் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். வழிகாட்டிகளின் போதனைகள் மற்றும் தத்துவங்கள் இந்த காலக்கட்டத்தில் உதவிகரமாக இருக்கும். புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை அல்லது நீண்ட தூர பயணங்களுக்கு செல்லலாம். நீங்கள்  சில எதிர்பாராத மாற்றங்களையும் சந்திக்கக்கூடும்.

 காதல் / குடும்ப உறவு :

திருமண வாழ்வில் இந்த மாதம் மிதமான சந்தோசம் இருக்கும். குடும்ப வாழ்வில் வாழ்க்கைத் துணையிடம் சில தவறான புரிந்துணர்வு இருக்கலாம். ஒரு சிலர் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள நேரலாம். இந்த மாதம் தாம்பத்திய சுகம் குறைவாக இருக்கலாம். வாழ்க்கைது துணையின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணையிடம் புறக்கணிப்பு உணர்வு ஏற்படலாம். உங்கள் அன்பையும் பாசத்தையும் வாழ்க்கைத் துணையிடம் பொழிவதில் கவனம் செலுத்த வேண்டும். தம்பதியரின் ஒருங்கிணைந்த செல்வம் தற்காலிக வீழ்ச்சியைக் காணக்கூடும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண :அங்காரகன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதத்தின் முதல் பகுதியில் அதிக செலவுகள் காணப்படலாம். எனவே உங்கள் பொருளாதார நிலை மிதமாக இருக்கும். உங்கள் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நீங்கள் கடன் வாங்க நேரலாம். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் தந்தையின் ஆரோக்கியம் கருதி நீங்கள் பணம் செலவு செய்ய நேரலாம். பொருளாதார நிர்வாகத் திறனை நீங்கள் கற்கலாம். பூர்வீகச் சொத்துகள் உங்கள் கைக்கு வரலாம். வாழ்க்கைத் துணை மற்றும் கூட்டாளிகள் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். ஊக வணிகம் மற்றும் பங்கு வர்த்தகம் மூலம் ஆதாயமும் லாபமும் காண்பீர்கள். இந்த மாதம் நீங்கள் ரகசிய ஆதாரங்கள் மூலம் சம்பாதிக்கலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை

உத்தியோகம் :

உத்தியோகத்தில் மிதமான முன்னேற்றம் காணப்படும். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் போக்கைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் எதிர்பாராத நிகழ்வுகளால் நீங்கள்  தூண்டப்படலாம்.  தொழில் வல்லுனர்களுக்கும் இந்த மாதம் மிதமான பலன்களே கிட்டும். உங்கள் சக பணியாளர்கள் உங்களை விட வலுவாக இருக்கலாம். நீங்கள் வழிகாட்டிகளிடம் இருந்து சிறந்த வழிகாட்டலைப் பெறலாம். இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் உங்கள் செயலில் சாதுரியமும் பேச்சில் அதிகாரமும் காணப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு இந்த மாதம் குறைவாக இருக்கலாம். ஒரு சில துலாம் ராசியினருக்கு சக பணியாளர்கள் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

தொழில் :

தொழில் செய்யும் துலாம் ராசியினர் தங்கள் தொழிலில் அதிகாரம் பெறுவதில் சில போராட்டங்களை சந்திக்க நேரலாம். தொழிலில் சாதுரியமாக செயல்பட வேண்டியது அவசியம். நீங்கள் தொழிலில் நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தின் ஒரு பகுதியாக நீங்கள்  பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண் பங்குதாரர்கள் மற்றும் பணியாளர்களிடமிருந்து ஆதரவு மற்றும் சங்கடம் இரண்டும் இருக்கலாம். தொழில்  வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய கட்டுப்பாடுகள் மற்றும் பிற விதிகளை அரசாங்கம் விதிக்கலாம். வியாபார பரிவர்த்தனைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளில் பங்குதாரர்கள் உங்களை விட ஓரு படி உயர்ந்து இருப்பார்கள். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகம் நன்மை தரும். பயணம், தளவாடங்கள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான வணிகங்களும் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் சிறப்பாக செயல்படலாம்.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை

ஆரோக்கியம் :

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ராசி அதிபதி சுக்கிரன் பலவீனமாக இருப்பதால்  மாதத்தின் முதல் பாதி சோதனைக் காலமாக இருக்கலாம். இந்த காலக்கட்டத்தில் அதிக பணி அழுத்தம் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். நல்ல ஆரோக்கியத்திற்கு இந்த மாதம் முறையான உணவுப் பழக்கம் அவசியம். இந்த மாதம் சிறிய விபத்து அல்லது காயங்கள் ஏற்படலாம். எனவே வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை

மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்கள் கலவையான பலன்களைக் காண்பார்கள். மாணவர்களின் தன்னம்பிக்கை குறையலாம். ஞாபக சக்தி மற்றும் கவனம் மேம்பட்டு காணப்படும். மாணவர்கள் மேல் படிப்பிற்காக பயணம் மேற்கொள்ளலாம். இடம் மாறலாம். இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் தத்துவக் கல்வியில் நாட்டம் இருக்கலாம். கடவுள் நம்பிக்கை கூடலாம். ஆசிரியர் மற்றும் வழிகாட்டியுடன் இணைந்து செயல்படலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

Set featured image

சுப தேதிகள் : 1, 2, 3, 4, 10, 11, 12, 13, 22, 23, 24, 25, 28, 29 & 30.

அசுப தேதிகள் : 5, 6, 14, 15, 16, 17, 18 & 19.