அஷ்டோத்திர சத நாமாவளி என்பது இந்துக் கடவுள்களின் நூற்றியெட்டு பெயர்களை கொண்ட தொகுப்பாகும். நாம ஆவளி என்பதற்கு பெயர்களின் வரிசை என்று பொருளாகும்.இந்த பெயர்களைக் கூறி பூஜை செய்வதற்கு அஷ்டோத்திர சத நாம அர்ச்சனை என்று கூறுவார்கள் சத என்றால் நூறு, உத்திரம் என்றால் பிறகு அஷ்ட என்றால் எட்டு. நூறு நாமவளியும் பிறகு எட்டு நாமாவளியும் இணைந்ததே அஷ்டோத்தர நாமாவளி என்பது. இன்று நாம் இந்தப் பதிவில் காண இருப்பது விஷ்ணு அஷ்டோத்திர சத நாமாவளி ஆகும். மும்மூர்த்திகளில் ஒருவரும், காக்கும் கடவுளுமான விஷ்ணு பகவானை போற்றிப் பாடும் பாடலே விஷ்ணு அஷ்டோத்திரம். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் வேலையை விஷ்ணு செய்கிறார். அதனால் விஷ்ணு பகவானின் ஆசீர்வாதத்தையும் அருளையும் நாம் பெறுவது மிகவும் அவசியம் ஆகும். அவரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் நாம் பெறவேண்டும் என்றால், முதலில் அவருக்கு மனமார பூஜை செய்யவேண்டும். அவருடைய போற்றிகள், மந்திரங்கள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். இந்த அஷ்டோத்திர நாமவளியைக் கூறி பூஜை செய்து விஷ்ணு பகவானின் அருளைப் பெற்றிடுங்கள்.

January 27, 2026
January 19, 2026
January 13, 2026
January 12, 2026