Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
மிதுனம் ராசிக்கான சந்திராஷ்டம நாட்கள் 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மிதுனம் ராசிக்கான சந்திராஷ்டம நாட்கள் 2024

Posted DateApril 23, 2024

வேத ஜோதிடத்தில், சந்திரன் மனம், தாய், புத்திசாலித்தனம், உள்ளுணர்வு, பெருமை, நடத்தை மற்றும் உணர்ச்சிகளைக் குறிக்கிறது. இது பெண்பால் அம்சத்தைக் குறிக்கிறது. பூமிக்கு மிக அருகாமையில் உள்ள கோள்  என்பதால், (ஜோதிடத்தில் சந்திரன் கோளாக கருதப்படுகிறது) அது மனித வாழ்வில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சந்திரன் நம் மனதையும் உள்ளத்தையும் ஆளுகிறது. வேகமாக நகரும் கிரகம்.  மேலும் சந்திரன் தேய்ந்து வளரும் இயல்பு உடையது. இதனால் நமக்கு  மனநிலை மாற்றங்கள் மற்றும் உணர்ச்சி எழுச்சிகள் ஏற்படுகின்றன.

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

‘சந்திர’ என்றால் சந்திரன், ‘அஷ்டமம்’ என்பது எட்டு. சந்திராஷ்டமம் என்பது சந்திரன் உங்கள் ஜென்ம ராசிக்கு  எட்டாம் வீட்டில் சஞ்சரிபப்து ஆகும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற சந்திரனுக்கு ஏறக்குறைய இரண்டரை நாட்கள் ஆகும். சந்திரன் உங்கள் எட்டாவது ராசியில் சஞ்சரிக்கும்  முழு காலமும் சந்திராஷ்டமம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தின் முக்கியமான பகுதி 13-டிகிரி, 20-நிமிட சந்திரனின் இயக்கம் ஆகும். உங்கள் பிறந்த நட்சத்திர ராசிக்கு எட்டாம் ராசியைக் கடக்கும்போது பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏறத்தாழ இருபத்தி எட்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த பெயர்ச்சி  நிகழ்கிறது.

சந்திராஷ்டமம் உங்களை எவ்வாறு பாதிக்கிறது?

சந்திராஷ்டமத்தின் போது, ​​சந்திரன் உங்கள்  ராசியிலிருந்து எட்டு வீடுகளுக்கு அப்பால் இரண்டே கால் நாட்கள் சஞ்சாரம் செய்கிறது.  இந்த நாட்களில், உங்கள் மனம் எதிர்மறை எண்ணங்கள், தொந்தரவான உணர்ச்சிகள், பாதுகாப்பின்மை மற்றும் கவலைகளால் பாதிக்கப்படலாம்.

சந்திரன், உங்கள் மனதைக் கட்டுப்படுத்துவதால், அதிக மனக் குழப்பங்களை உருவாக்கி, மன அழுத்தத்திற்கு ஆளாக்கி விடுகிறது.  உங்கள் மனம் சில வகையான வேதனைகளை அனுபவிக்கிறது, மேலும் நீங்கள் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் போகலாம்.

சந்திராஷ்டம நாட்களில் என்ன செய்ய வேண்டும்?

கவனமாக இருங்கள் மற்றும் அவசரம் மற்றும் மனக்கிளர்ச்சியைத் தவிர்க்கவும். முக்கியமான முடிவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் உங்கள் மனதில் நிச்சயமற்ற தன்மை இருக்கலாம். வீட்டில் மற்றும் வேலையில் பதட்டமான அல்லது மன அழுத்தம் நிறைந்த தொடர்புகளைத் தவிர்க்கவும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, முடிந்தவரை எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் விழிப்புணர்வு நிலைகளை உயர்த்துங்கள்.

நீங்கள் பிரார்த்தனை அல்லது தியானத்தில் ஈடுபடலாம். சந்திரனை வழிபடுங்கள் மற்றும்  ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.

மிதுன ராசிக்கு சந்திராஷ்டம நாட்கள் 2024

மிருகசீர்ஷம் – 3 மற்றும் 4 வது பாதங்கள், ஆருத்ரா(திருவாதிரை) 4  பாதங்கள், மற்றும் புனர்பூசம் நட்சத்திரங்கள் – 1, 2 மற்றும் 3 வது பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசியின் கீழ் வருகிறார்கள்.

மாதம் ஆரம்பிக்கும் தேதி & முடியும் தேதி  நேரம்
ஜனவரி 11.01.2024, 11.05 pm 13.01.2024, 11.35 pm
பிப்ரவரி 08.02.2024, 10.04 am 10.02.2024, 10.02 am
மார்ச் 06.03.2024, 08.28 pm 08.03.2024, 09.20 pm
ஏப்ரல் 03.04.2024, 04.37 am

30.04.2024, 10.36 am

02.05.2024, 02.32 pm

29.05.2024, 08.06 pm

மே 27.05.2024, 04.05 pm 29.05.2024, 08.06 pm
ஜூன் 23.06.2024, 10.48 pm 26.06.2024, 01.49 am
ஜூலை 21.07.2024, 07.27 am 23.07.2024, 09.20 am
ஆகஸ்ட 17.08.2024, 05.28 pm 19.08.2024, 07.00 pm
செப்டம்பர் 14.09.2024, 03.24 am 16.09.2024, 05.44 pm
அக்டோபர் 11.10.2024, 11.41 am 13.10.2024, 03.44 pm
நவம்பர் 07.11.2024, 05.54 pm 09.11.2024, 11.27 pm
டிசம்பர் 04.12.2024, 11.19 pm 07.12.2024, 05.07 pm

சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க வேண்டியவை:

நிதி முதலீடுகளில் ஈடுபட வேண்டாம்

ஊக வணிகங்களில்  இருந்து விலகி இருக்கவும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்

சூடான விவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளிலிருந்து விலகி இருங்கள்

எதிர்மறையான சிந்தனை மற்றும் செயல்களை தவிர்க்கவும்.