Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மிதுனம் மே மாத ராசி பலன் 2024 | May Matha Mithunam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மிதுனம் மே மாத ராசி பலன் 2024 | May Matha Mithunam Rasi Palan 2024

Posted DateApril 16, 2024

மிதுனம்  மே மாத பொதுப்பலன்கள் 2024

இந்த மாத ஆரம்பம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கலாம். எனவே இந்த காலக்கட்டத்தை நீங்கள் முறையாக உங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்வது உங்களுக்கு நன்மை அளிக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண இயலும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணவும் இந்த காலக்கட்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். உங்கள் பிள்ளைகள் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.  இந்த மாதம், உங்கள் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கலாம். எனவே, பட்ஜெட் அமைத்து  செலவுகளை மேற்கொள்ளுங்கள். கடன்கள். வழக்குகள், மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றில் தற்காலிக பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். பங்கு சந்தை மற்றும் ஊக வணிகம் மூலம் ஆதாயம் கிட்டாது போகலாம்.

அதில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பணியிடத்தில் பொறுமை காக்க வேண்டும் மற்றும் பிறரை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். குழு உறுப்பினர் மற்றும் குழுத் தலைவரிடம் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். அவர்களுடன் வாக்குவாதத்தைத் தவிருங்கள்.    குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடித்து அளிக்க முயலுங்கள் . தொழிலில் செய்யும் மாற்றம் நஷ்டம் அல்லது வீழ்ச்சியை ஏற்படுத்தலாம். எனவே வழக்கமான  நடவடிக்கைகளை மட்டும் தொடருங்கள். மாற்றம் ஏதும் செய்யாதீர்கள். தொழில் முதலீடு மூலம் நஷ்டம் ஏற்படலாம். எனவே முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.  கூட்டுத் தொழிலில், கூட்டாளர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்பட மாட்டார்கள். எனவே அவர்களை சார்ந்து செயல்படாது இருப்பது நல்லது. நீங்கள் திருமணம் ஆனவர் என்றால் உங்கள் வாழ்க்கைத் துணையின் தவறுகளை மன்னியுங்கள்.  காதலர்களுக்கு இது சாதகமான பலன் தரும் மாதமாக இருக்கும். நீங்கள் தியானம் மேற்கொள்வது நல்லது.

காதல் / குடும்ப உறவு :

கணவன் மனைவி உறவில் ஒற்றுமையும் அதன் காரணமாக  மன நிறைவும் இருக்கலாம்.   இருவரும் சேர்ந்து குறுகிய தூரப் பயணங்களை மேற்கொள்ளலாம். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். இருவரும் பரஸ்பரம் தங்களின்  தரமான நேரத்தை ஒன்றாக சேர்ந்து  கழிக்கலாம். ஒருவரின் வெற்றிக்கு மற்றவர்  உறுதுணையாக இருக்கலாம்.   பரஸ்பரம்  பரிசுகளை வாங்கித் தரலாம்.   உங்கள் வாழ்க்கைத் துணை சில குடும்ப உறுப்பினர்களைக் கண்டு பயப்படலாம். இதனால் அவர் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரலாம். அவரின் பயத்தைப் போக்க நீங்கள் அவருக்கு நம்பிக்கை ஊட்டலாம்.     காதலில் இருப்பவர்கள் தங்கள் காதலில் தைரியமாக செயல்பட்டு வெற்றி காணலாம். உங்கள் துணையை    நீங்கள் ஈர்க்கலாம். மாத இறுதியில் திருமணமான தம்பதிகள் சில சங்கடங்களை சந்திக்க நேரலாம். உங்கள் துணையின் தவறுகளை மன்னிப்பதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம். காதலில் மகிழ்ச்சி பெற லக்ஷ்மி தேவியை வணங்குங்கள்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை :

உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள நீங்கள் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களின் இந்த முயற்சி உங்களை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். இந்த மாதம் வளர்ச்சி கிட்டும் என்பதால் இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கடின உழைப்பின் மூலம் நீங்கள் அதிக வருமானம் ஈட்டுவீர்கள். தொழிலில் போட்டியாளர்களை வென்று உங்கள் தொழிலில் முன்னேறி நீங்கள் வெற்றி  காண்பதற்கான வாய்ப்புகள்  உள்ளளன.  அதிர்ஷ்டம் மூலம் திடீர் பண வரவு பெறுவீர்கள். இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். தொழில் கூட்டாளி மூலம் சில நஷ்டங்களை சந்திக்க நேரலாம். எனவே கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. சில புதிய நபர்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்து உங்களை ஏமாற்றுவதற்கு மோசமான யோசனைகளை வழங்கலாம். எல்லோரிடமிருந்தும் வரம்புகளையும் தூரத்தையும் பராமரிக்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தொடர்புடைய கடன்கள், சட்டப் பிரச்சனைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் போன்றவற்றிற்காக உங்கள் பணத்தை செலவழிக்க வாய்ப்புகள் உள்ளன. மகான்களைத் தவறாமல் வழிபடுவது செலவுகளைக் குறைத்து உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை

உத்தியோகம் :

இந்த மாதம் உங்கள் உத்தியோக நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் நீங்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் பெறுவீர்கள். உங்கள் உத்தியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதில் வெற்றி காணவும் தெற்கு திசை உசிதமானதாகும். இந்த மாதம் உங்கள் வழக்கமான நடவடிக்கைகளை மட்டும் எந்தவித மாற்றமும் இன்றி செய்யுங்கள்.  பணியிடத்தில் ஆவணங்கள், தரவுகள் மற்றும் தகவல் தொடர்பு போன்ற விஷயங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரலாம். இதனால் உங்கள் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் நேரலாம். குழு உறுப்பினர்களுடன் பேசும் போது கவனமாக இருப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பணியிடத்தில் நீங்கள் அனைவருடனும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.

தொழில்:

இந்த மாதம் நீங்கள் பொறுமை காக்க வேண்டும். முதலீடு செய்வதை தள்ளிப் போட வேண்டும். கூட்டுத் தொழிலுக்கு இந்த மாதம் ஏற்றதல்ல. முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் சில பணத்தை இழக்க நேரிடலாம்.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை

ஆரோக்கியம் :

இடுப்பு, முதுகுத்தண்டு, அடிவயிறு மற்றும் தலை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு இந்த மாதம் ஆதரவான காலமாக இருக்கும். எனவே, நீங்கள் இந்த பகுதிகளில் சிக்கல்களை எதிர்கொண்டால்  சிகிச்சைக்கு செல்லலாம். விஷ்ணுவைத் தொடர்ந்து வழிபடுவது உடல்நலப் பிரச்சினைகளைக் களைந்து உங்கள் ஆரோக்கியத்தைப் பேண உதவும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : புதன் பூஜை

 மாணவர்கள் :

மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். மாணவர்கள் இரவு நேரத்தை படிப்புக்காகப் பயன்படுத்தலாம், இது அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.இந்த மாதம் அவர்கள் மேற்கொள்ளும்  இரவுப் படிப்பு அவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தி அதிக மதிப்பெண்களைப் பெற உதவிகரமாக இருக்கும். பகல் நேரத்தில் மனதை ஒருமுகப்படுத்தி கவனம் செலுத்த முடியாத வகையில் கவனச்சிதறல்கள் இருக்கலாம், எனவே இந்த நேரத்தில் படிப்பில் கவனம் செலுத்தவும்,  மனதை அமைதிப்படுத்தவும், உங்கள் இலக்குகளை அடைய   தியானம் மேற்கொள்ளுங்கள். உங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். ஆசிரியர்களின் ஆதரவைப் பெற அவர்களுடன் சுமூகமான உறவைப் பேணுங்கள்.

கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

 

சுப தேதிகள் : 2,3,6,7,13,14,19.20,21,22,29,30.

அசுப தேதிகள் : 1,8,9,10,11,12,23,24,27,28.