ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் மாற்றங்களை சந்திக்கத் தயாராக இருகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்படலாம். எந்தவொரு விஷயத்திலும் நீங்கள் அறிவுப்பூர்வமாக செயல்படலாம். இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் முன்னேற்றம் இருக்கலாம். அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் நல்ல உறவை பராமரிக்கலாம். உங்கள் கருத்துகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்களுடன் நல்ல நட்பு பாராட்டலாம். உங்கள் குழந்தைகள் இந்த மாதம் தங்கள் வாழ்வில் மாற்றங்களைக் காணலாம். அவர்களின் நலன் கருதி சிறிது பணத்தை நீங்கள் செலவு செய்யலாம்.
இந்த மாதம் உங்கள் கலை ஆர்வம் அதிகரிக்கலாம். உங்கள் உடல் நலனில் அக்கறை தேவைப்படலாம். உங்கள் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே, உடல் நலனில் அக்கறை வேண்டும். ஆவணங்கள் சார்ந்த சில பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். இந்த மாதம் உங்கள் வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். மகிழ்ச்சியும், வளமும் இந்த மாதம் உங்களிடத்தில் இருக்கலாம். இந்த மாதம் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அவற்றைத் தாண்டி செயல்படும் வலிமை உங்களிடம் இருக்கலாம்.
உறவு விஷயங்களில் உங்களுக்கு வலுவான பற்றுதல் இருக்கலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவிலும் பிணைப்பு வலுவாக இருக்கலாம். தாம்பத்திய வாழ்வு சிறப்பாக இருக்கலாம். உறவில் அன்னியோன்யம் வளரலாம். சுமுக உறவு இருந்தாலும் சில சமயங்களில் உறவில் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த மாதம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளி நாடு செல்லும் வாய்ப்பு கிட்டலாம். சில சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், குடும்ப விஷயங்கள் சிறப்பாக இருக்கலாம். குடும்பத்தில் உங்கள் பொறுப்பு அதிகமாக இருக்கலாம். பொதுவாக உறவில் ஸ்திரத்தன்மை காணப்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நீங்கள் விட்டுக் கொடுக்கலாம். நீங்கள் உங்கள் துணையுடன் உணர்வுப் பூர்வமாக நெருங்கலாம். உறவில் நம்பிக்கையும் பரஸ்பரம் மரியாதையும் இந்த மாதம் காணப்படலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : ராகு பூஜை
உங்கள் நிதிநிலையில் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகக் கருதி நீங்கள் கவலைப்பட நேரலாம். உங்கள் கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்வீர்கள். இந்த மாதம் நீங்கள் பட்ஜெட் அமைத்து செயல்படலாம். இந்த மாத கிரக நிலைகள் நீங்கள் செல்வம் சேர்க்க ஏதுவானதாக இருக்கும். உங்கள் வருமானம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உங்கள் குழந்தைகளின் நலன் கருதி சில செலவுகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். அது தவிர்க்க முடியாத செலவாக இருக்கும். நீங்கள் வீடு, மனை போன்றவற்றில் முதலீடு செய்யலாம். குடும்ப நபர்களின் தேவைக்காக எதிர்பாராத செலவு செய்வீர்கள். அது மருத்துவம் சார்ந்த செலவாக இருக்கலாம். உங்கள் பணத் தேவைகளுக்கு நீங்கள் சேமிப்பை பயன்படுத்திக் கொள்ள நேரலாம். இந்த மாதம் ஊக வணிகம் மற்றும் பங்கு வர்த்தகம் மூலம் ஆதாயம் கிட்டாது. வீடு மாற்றம், வாகனம் வாங்குதல், சொத்து வாங்குதல் போன்ற செலவுகளை சந்திக்க நேரலாம். உங்கள் வாழ்க்கைத் துணை / தொழில் கூட்டாளி மூலம் ஆதாயம் பெறலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : புதன் பூஜை
உத்தியோகத்தைப் பொறுத்தவரை ஸ்திரத்தன்மை காணப்படலாம். வருமானம் சீராக இருக்கலாம். மற்றும் உத்தியோகத்தில் ஏற்றம் இருக்கலாம். பணிச்சூழலில் நீங்கள் சில தடைகளை எதிர்கொள்ள நேரலாம். பணிகள் மலை போல குவியலாம். உங்கள் திறமை பணியில் வெளிப்படலாம். நீங்கள் தலைமை ஏற்று பணிகளை நடத்துவீர்கள். சக பணியாளர்களுடன் சில பிரச்சினைகள் ஏற்படலாம். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டும். பணியில் முன்னேற்றம் காணத் தேவையான தொழில் நுட்பங்களை மற்றும் பிற விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். மாத ஆரம்பத்தில் உங்கள் பணியில் சில மந்த நிலை இருக்கலாம். மாத பிற்பகுதியில் பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். வாக்குவாதங்கள் மற்றும் ஈகோவை தவிர்ப்பது நல்லது. அதன் மூலம் பின்னடைவை தவிர்க்கலாம். சக பணியாளர்களின் ஆதரவு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
இந்த மாதம் தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் இருந்தால் அதனை தள்ளிப் போடவும். முதலில் தொழிலில் ஸ்திரத்தன்மை காண முயற்சி மேற்கொள்ளுங்கள். தொழில் சார்ந்த சிறந்த முடிவுகளை நீங்கள் இந்த மாதம் எடுக்கலாம். அது உங்களை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லலாம். புது தொழில் வாய்ப்பு கிட்டலாம். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரலாம். அதன் மூலம் வருமானம் கூடலாம். தொழிலில் உங்கள் தலைமைப் பண்பு சிறப்பாக இருக்கும். உங்கள் பொருட்களின் சந்தை மதிப்பு உயரும் வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் கூட்டுத் தொழில் உங்களுக்கு அனுகூலமான பலனை அளிக்கும். அதன் மூலம் லாபம் மற்றும் ஆதாயம் காண்பீர்கள். நீங்கள் தொழிலில் மிகவும் தெளிவாக மற்றும் சுதந்திரமாக முடிவுகளை எடுப்பீர்கள். நல்ல பணப்புழக்கத்தின் மூலம் வணிகத்தில் மூலதன தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அரசாங்கத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளும் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் இருந்து உங்களின் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும்.
உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : சனி பூஜை
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் தோல் மற்றும் நினைவாற்றல் தக்கவைப்பு தொடர்பான பிரச்சினைகள் உணரப்படலாம். உடல் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் தொண்டை தொடர்பான நோய்த்தொற்றுகள் சில சந்தர்ப்பங்களில் அனுபவிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படலாம். குழந்தைகள் நலனுக்காக நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரலாம். உங்கள் உணவுப் பழக்கத்தை கண்காணிக்க வேண்டும் மற்றும் சுவையான உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது உங்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த மாதம் நீங்கள் நல்ல தூக்கத்தை அனுபவிப்பீர்கள். இது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட கவனத்திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். நினைவாற்றல் அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்கள் காரணமாக கவனச் சிதறல் ஏற்படலாம். இது உங்களின் கல்வி முன்னேற்றத்தைத் தடுக்கலாம். கல்வியில் சிறந்து விளங்க உங்கள் ஒய்வு நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவிட வேண்டும். வெளிநாட்டில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களின் விருப்பங்கள் இந்த மாதம் நிறைவேறும்.
கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை
சுப தேதிகள் : 3, 4, 5, 13, 14, 15, 16, 17, 21, 22, 23, 24, 30 & 31.
அசுப தேதிகள் : 6, 7, 8, 9, 10, 25, 26 & 27.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025