Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
2024 - மேஷ ராசியில் சூரியன்-குரு சேர்க்கை - Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

2024 – மேஷ ராசியில் சூரியன்-குரு சேர்க்கை

Posted DateApril 5, 2024

 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்!

மேஷம் 2024 இல் சூரியன்- குரு சேர்க்கை:

ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில்  தங்கள் சஞ்சாரத்தை அடுத்தடுத்த ராசிக்கு மாற்றிக்  கொண்டே இருக்கும். இந்த மாற்றம் நமது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2024 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில்  சூரியன் மேஷத்தில் நுழையும். மேஷம் செவ்வாயின் வீடு. அங்கு ஏற்கனவே குரு அமர்ந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில்,  சூரியனும் குருவும்  இணைவார்கள். வேத ஜோதிடத்தின்படி, சூரியனுக்கும் குருவுக்கும் இடையே நட்பு இருக்கும். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மேஷ ராசியில் இந்த சேர்க்கை நிகழும்.

2024 ஏப்ரலில் குரு-சூரியன் சேர்க்கை அனைத்து 12 ராசிகளுக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் சில ராசிகளுக்கு உச்ச பலன்களை வழங்கும். மேஷ ராசியில்  சூரியன்-குரு இணைவதால் மூன்று ராசிக்காரர்கள் விரும்பிய பலன்களைப் பெறுவார்கள். அவர்கள் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள், அதிர்ஷ்டம் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும், மேலும் பல்வேறு துறைகளில் வெற்றியை அடைவார்கள். மேலும் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதைக் காணலாம். அதற்கு முன் ஜோதிடத்தில் சூரியன் மற்றும் குருவின்  முக்கியத்துவத்தைப் பார்ப்போம்.

சூரியனும் குருவும் ராஜ கிரகங்கள் மற்றும் ஒன்றுக்கொன்று நட்பு கிரகங்கள். பெயர் புகழ் அந்தஸ்து தரும் சேர்க்கை என்று சூரியன் குரு சேர்க்கையைக் கூறலாம். இந்த சேர்க்கை சிவராஜ யோகம் அளிக்கும் என்று கூறுவார்கள்.

சூரியனின் காரகத்துவம்

வேத ஜோதிடத்தில், சூரியன் ஆண்  கிரகம் மற்றும் நெருப்பைக் குறிக்கும். சூரியன் தைரியம் மற்றும் அச்சமின்மையைக் குறிக்கிறது. மற்றும் தாமிரம் மற்றும் தங்கம் போன்ற உலோகங்களை சூரியன் குறிக்கும். தந்தை, தந்தை வழி உறவினர்கள், அரசகுலத்தைச் சேர்ந்தவர்கள் பிரயாணம் செய்பவர்கள், வீரர்கள், விவசாயம் மருத்துவம், சிவப்பு நிறம், கோதுமை, தேன், ஒன்றாம் எண், அரசாங்க வேலை, விதை, மரம், ஞாயிற்றுக்கிழமை, துணிவு, தைரியம், வெற்றி, ஆத்மசக்தி போன்றவற்றிக்கு சூரியனே காரகர் ஆவார்.   ஜாதகத்தில் சூரியனின் நிலை அந்த ஜாதகரின் தந்தையுடனான உறவின் தன்மையைக் குறிக்கிறது. பெண்களின் ஜாதகத்தில், சூரியன் கணவனின் காரணியாகும், இது சமூகத்தில் அல்லது அரசாங்கத்தில் உள்ள நிர்வாக பதவிகளை குறிக்கிறது. சூரியனின் ஆசீர்வாதத்தைப் பெற்ற ஒருவர் பல்வேறு துறைகளில் அபாரமான தலைமைப் பண்புகளைக் கொண்டிருப்பார்.

குருவின் (வியாழன் கிரகம்) காரகத்துவம்: 

ஜோதிடத்தில், வியாழன் முக்கிய கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது  குரு அல்லது ஆசிரியராக பார்க்கப்படுகிறது. இந்த கிரகம் மதம் மற்றும் ஆன்மீகத்தின் சின்னமாகவும் உள்ளது. கால புருஷனின் ஒன்பதாம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியாகவும், இரண்டாவது, ஐந்தாவது, ஒன்பதாம் மற்றும் பதினொன்றாவது வீட்டின் காரணியாகவும் கருதப்படுகிறது. புத்திரன்,புத்திரி, அரசர், சாஸ்திரிகள், மந்திரி, ஆசான், வக்கீல், வித்வான், மஞ்சள் நிறம், பொன் வெள்ளி நகைகள், புஷ்பராகக் கற்கள்,  இனிப்பு, பள்ளி, ஆலயங்கள் தர்மம், வித்தை ஆகியவற்றிற்கு குருவே காரகர் ஆவார். குரு, அதாவது வியாழன் ஜாதகத்தில் வலுவான நிலையில் அல்லது மற்ற சுப கிரகங்களுடன் இணைந்திருந்தால், அந்த நபர் நேர்மையான அன்பான இயல்புடையவராக இருப்பார் வியாழன் கிரகம் திருமண மகிழ்ச்சிக்கான காரணியாகவும் கருதப்படுகிறது. வியாழன் மகாதசை உள்ளவர்கள் வியாழக்கிழமைகளில் விரும்பிய பலன்களைப் பெறுவார்கள். புஷ்பராகம் வியாழனின் அதிர்ஷ்ட ரத்தினம்.

 மேஷ ராசியில் சூரியன்-குரு சேர்க்கை  2024: நற்பலன்களைப் பெறவிருக்கும் மூன்று அதிர்ஷ்ட ராசிகள்

மேஷம் :

மேஷ ராசி அன்பர்களே! உங்கள் ராசியில் சூரியன் மற்றும் குரு சேர்க்கை நிகழும். இது உங்களின் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் கொண்டு வரும். இந்த காலகட்டத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  புதிய நபர்களுடன் தொடர்பு ஏற்படலாம். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். உங்கள்  மதிப்பும் மரியாதையும் கூடும். மேலும் நீங்கள்  தொழிலில் முன்னேற்றத்தையும் அனுபவிப்பீர்கள்.உங்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கான உங்களின் அனைத்துத் திட்டங்களும் வெற்றியடையும். எல்லாத் துறைகளிலும் வெற்றிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உங்கள் காதல் உறவு திருமண உறவாக மாறும். இந்த காலகட்டத்தில் திருமணம் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் வணிக கூட்டாண்மையில் ஈடுபட்டிருந்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் வணிகம் வேகமாக வளரும். உங்கள் அதிர்ஷ்டத்தின் காரணமாக, உங்கள் வாழ்க்கை துணைக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே!  சூரியன் மற்றும் குரு சேர்க்கை  உங்கள் வாழ்க்கையில் பல நன்மைகளையும் வெற்றிகளையும் தரும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள், தொழிலதிபர்களுக்கு தேவையான லாபம் கிடைக்கும். இது நல்ல அதிர்ஷ்டத்தின் நேரமாக இருக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நடவடிக்கைகளிலும் நீங்கள் வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் உள்ளன. நீங்கள் சில காலமாக ஒரு வேலையைத் தேடிக்கொண்டிருந்தால், விரும்பிய வேலையைப் பெறுவதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன. உங்களில் ஒரு சிலருக்கு  வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். பயணத்தின் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். மற்றும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். தந்தையுடனான உறவு மேம்படும், தந்தையின் ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருத்த  பதவி உயர்வு இந்த காலகட்டத்தில் கிட்டும். மேஷ ராசியில் சூரியன்- குரு சேர்க்கை உங்களுக்கு  மிகவும் பயனுள்ளதான பலன்களை அளிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு  ஒன்பதாம் வீட்டில் சூரியன் மற்றும் குரு சேர்க்கை  நடக்கிறது. ஒன்பதாம் வீட்டிற்குரிய நற்பலனகள் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் மற்றும் திட்டங்களில் வெற்றி காண்பதற்கான நேரம் இது.  உங்களுக்கு  அதிர்ஷ்டம் துணைபுரியும். நிலுவையில் உள்ள பணிகள் குறித்த நேரத்தில் முடிவடையும். சிம்ம ராசி மாணவர்களின் வெளிநாடு செல்லும் ஆசைகள் இக்காலகட்டத்தில் நிறைவேறும். மேஷம் 2024 இல் சூரியன்-குரு சேர்க்கையின்படி, புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வீட்டில் ஒருவித சுப காரியம் அல்லது செயல்பாடு நடப்பதற்கான அறிகுறிகளும் உள்ளன.