உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு நீங்கள் ஆதரவு அளிக்கலாம். இது உங்களுக்கு மன திருப்தியை அளிக்கலாம். இந்த மாதம் உங்கள் வருமானம் உயரலா’ம். உங்களால் பணத்தை கணிசமாக சேமிக்க முடியலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யலாம். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படலாம். நீங்கள் பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றலாம். இது உங்களுக்கு திருப்தி அளிக்கும். உங்கள் உத்தியோக வளர்ச்சிக்கு தேவையான தொழில் நுட்பங்களை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். இந்த மாதம் பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணி நிமித்தமாக நீண்ட தூர பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். அது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கலாம். நீங்கள் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இது உங்களுக்கு மன அமைதியை அளிக்கலாம். உங்கள் செயல்களில் வெற்றி காண உங்கள் முன்னோர்களின் ஆசி துணை நிற்கும். மேலும் உங்கள் சூழலில் நீங்கள் பெயரும் புகழும் பெறலாம். ஆன்மீக குருமார்களின் ஆசிகள் கிடைக்கப் பெற்று நீங்கள் ஆன்மீக மேம்பாடு பெறுவீர்கள். புதிய முயற்சிகள் எதையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டாம். வழக்கமான செயல்களை மட்டும் செய்யுங்கள். நிர்வாகம் மற்றும் மேலாண்மை சார்ந்த பணிகள் உங்களுக்கு அனுகூலமான பலனை அளிக்கும். குடும்ப உறுப்பினர்களால் ஏற்படும் திடீர் பிரச்சினைக்கு நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரலாம். இதனால் உங்கள் செலவு அதிகமாகலாம். எனவே நஷ்டத்தைத் தவிர்க்க அவர்களின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய முயலுங்கள். உங்கள் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கடன் வாங்காதீர்கள். மூன்றாம் நபரின் தலையீட்டை உங்கள் குடும்பத்திற்குள் அனுமதிக்காதீர்கள். உங்கள் பேச்சில் கவனம் தேவை. உங்கள் கோபத்தை குடும்ப நபர்களிடம் வெளிப்படுத்தாதீர்கள்.
கடந்த கால கஷ்டங்களை சமாளித்து இந்த மாதம் நீங்கள் உறவில் மகிழ்ச்சி காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்ப உறவில் மகிழ்ச்சி காணப்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் நீண்ட தூர பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். இது உங்கள் பிணைப்பை அதிகரிக்கும். ஒற்றையர்கள் காதலில் ஈடுபட வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். கணவன் மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஆதரவாக செயல்படுவீர்கள். இதனால் அன்னியோன்யம் கூடும். உங்கள் தாம்பத்திய வாழ்வு சிறக்கும். ஒருவர் மற்றவரின் தேவைகளை உணர்ந்து நடந்து கொள்வீர்கள் இதனால் உறவில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் துணையுடன் நீங்கள் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய நபர்களை சந்திப்பீர்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். உறவினர்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அவர்களால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த மாதம் சுமுகமான நல்லுறவை பராமரிக்க அனுகூலமான மாதம் ஆகும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
இந்த மாதம் உங்கள் வருமானம் பெருகும். சேமிப்பு கணிசமாக உயரும். உங்கள் உத்தியோகம் மற்றும் தனப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு தேவைப்படும் பொருள்களை நீங்கள் வாங்குவீர்கள். வீடு, நிலம், வண்டி, சொத்து போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் வரலாம். இந்த மாதம் நீங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். இது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். வெளிநாட்டு நிலங்கள் மூலம் வருமானம் மற்றும் ஆதாயங்கள் கிடைக்கும். உங்கள் பொருளாதாரம் மேம்படும். குடும்பத்தில் புதிய நபரின் வருகையால் செலவினங்கள் கூடும். உங்கள் குடும்ப விஷயங்களில் பிறரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். பிறருடன் இடைவெளி விட்டுப் பழகுவதன் மூலம் நஷடத்தைத் தவிர்க்கலாம். குழந்தைகளின் மேம்பாடு கருதி பணத்தை முதலீடு செய்வீர்கள். இந்த மாதம் விருந்து விசேஷங்களுக்காக செலவுகளை மேற்கொள்ள நேரலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட :சந்திரன் பூஜை
இந்த மாதம் நீங்கள் உத்தியோகத்தில் கணிசமான வளர்ச்சி காணலாம். வேலைக்கான போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெறலாம். அரசாங்க உத்தியோகம் கிடைக்கலாம். நிர்வாகம் சார்ந்த உத்தியோகத்தின் மூலம் நல்ல பெயரும் புகழும் கிடைக்கலாம். நீங்கள் சமூக சேவையில் ஈடுபடுவீர்கள். இது உங்கள் அரசாங்க உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற வழி வகுக்கும். நீங்கள் பணியில் சாதனைகளைப் புரிவீர்கள். முன்னேறுவீர்கள். பணியிடச் சூழலில் உங்கள் எதிரிகளை வெற்றி காண்பீர்கள். வேலை முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மூலம் பொருளாதார ஏற்றம் காண்பீர்கள். உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு புதிய திட்டங்களை வகுப்பீர்கள். முதலீடுகள் மூலம் கணிசமான ஆதாயம் பெறுவீர்கள். தொழில் புரியும் இடத்தில் பணியாளர்கள் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து அளிப்பார்கள். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்வதன் மூலம் தொழிலில் நீங்கள் முன்னேற்றம் காணலாம்.
உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : பிருகஸ்பதி பூஜை
முகம், கண், இடுப்பு, முதுகுத்தண்டு, குடல் மற்றும் மலச்சிக்கல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு ஏப்ரல் ஒரு சிறந்த காலமாகும். எனவே, முழுமையான மீட்புக்காக இந்தப் பகுதிகளில் பிரச்சனைகளை எதிர்கொண்டால் நீங்கள் சிகிச்சைக்கு செல்லலாம். இருப்பினும், இந்த பகுதிகளில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால், நீங்கள் தற்காலிகமாக புதிய உடல்நல பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே, அவ்வப்போது பரிசோதனை செய்து, மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றி, சரியான உணவைக் கடைப்பிடித்து ஆரோக்கியத்தைப் பேணுவது நல்லது.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : தன்வந்தரி பூஜை
ஏப்ரல் உங்கள் கல்வி வளர்ச்சிக்கு சாதகமான மாதமாகும். உங்கள் குருவின் ஆசீர்வாதத்தைப் பெறுவது சாத்தியமாகும், இது அதிக மதிப்பெண்களைப் பெற உதவும். உங்கள் இலக்கை அடைய உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதமும் உறுதுணையாக இருக்கும். கல்வியில் வெற்றியையும் வளர்ச்சியையும் அடைய ஆசிரியர்கள் உங்களிடம் சிறப்பு கவனம் செலுத்தலாம். உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் சூழலில் உள்ள நண்பர்கள் மற்றும் பிற நபர்களுடன் சுமூகமான உறவைப் பேணுவது சாத்தியமாகும். உயர்கல்விக்கான நீண்ட பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன, இது உங்கள் வளர்ச்சியை ஆதரிக்கிறது. உங்கள் கல்விக்காக புதிய இடங்களுக்கு இடம் பெயர்வது சாத்தியமாகும். கல்வி வளர்ச்சியின் மூலம் உங்கள் விருப்பங்களையும் நிறைவேற்ற முடியும்.
கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை
சுப தேதிகள் : 1,2,9,10,14,15,21,23,26,27,28,29
அசுப தேதிகள் : 3,4,7,8,16,17,18,19,20,30
September 19, 2025
September 17, 2025
September 15, 2025