Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மிதுனம் ஏப்ரல் மாத ராசி பலன் 2024 | April Matha Mithunam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கடகம் ஏப்ரல் மாத ராசி பலன் 2024 | April Matha Kadagam Rasi Palan 2024

Posted DateMarch 25, 2024

கடகம்  ஏப்ரல்  மாத பொதுப்பலன்கள் 2024

இந்த மாதம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றாலும் சில தடைகள் மற்றும் தாமதங்களை சந்திக்க நேரும். எனவே உங்கள் காரியத்தில் வெற்றியைப் பெற நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். இந்த மாதம் நீங்கள் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள்.  சில சங்கடங்களைத் தவிர்க்க நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பிறருடைய விவகாரங்களில் நீங்களாக ஈடுபடுவதன் மூலம் நீங்கள் கடினமான பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எனவே நீங்களாக பிறருடைய பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்க செல்லாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. அண்டை அயலாருடன் பிரச்சினைகள் வரக்கூடிய காலக்கட்டமாக இந்த மாதம் இருக்கும். அவர்கள் உங்கள் சொத்தை சேதப்படுத்தலாம். அதன் காரணமாக உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். நீங்கள் அவர்களுடன் சண்டை போட நேரலாம். இந்த மாதம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். இதனால் நீங்கள் அமைதி இழக்க நேரலாம். எனவே வாக்குவாதங்களை தவிருங்கள். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அதன் மூலம் சுமுக நல்லிணக்க உறவை பராமரிக்க இயலும். வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் கூட்டாளிகளின் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். அதனால் சில நஷ்டங்கள் கூட ஏற்படலாம். எனவே கூட்டுத் தொழில் முயற்சியில் இருந்து விலகி இருங்கள். இந்த மாதம் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். கடன் சுமை இருக்கும். வழக்கு விவகாரங்களை சந்திக்க நேரலாம். ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே எதிலும் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுங்கள். சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் எதிர்மறைகள் நீங்கி முன்னேற்றம் காண இயலும்.

காதல் / குடும்ப உறவு :

இந்த மாதம் உங்கள் துணையுடன் சில கடினமான சூழலை சந்திக்க நேரலாம். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். தவறான புரிந்துணர்வு மற்றும் வாக்கு வாதங்கள் எழலாம். இது உங்கள் உறவில் சிக்கலை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் உறவில் பிரிவினை கூட ஏற்படலாம்.  எனவே உங்கள் துணையுடன் வாக்குவாதங்களைத் தவிருங்கள். அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் உறவில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் சந்திப்பது கூட கடினமாக இருக்கலாம். இதனால் தகவல் பரிமாற்றத்திலும் குறைகள் வரலாம்.  இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். இதனால் உறவில் மகிழ்ச்சி கூடும். ஒற்றையர்கள் புதிய நபர்களை சந்திக்கலாம். அவர்கள் மூலம் ஏமாற்றப்படலாம்.எனவே வாழ்க்கைத் துணையை தேர்ந்தடுக்கும் போது கவனம் தேவை. பொறுமை அவசியம்.   திருமணமான தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க நேரும். உங்கள் எதிர்பார்ப்புகளை குறித்துக் கொள்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உங்கள் செயல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.         

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம். எனவே நஷ்டங்களைத் தவிர்க்க திட்டமிட்டு வரவு செலவை மேற்கொள்ளுங்கள். உங்களின் புதிய முயற்சிகளில் நீங்கள் தோல்வியை சந்திக்க நேரலாம். நீங்கள் கடன் வாங்க நேரலாம். எனவே புதிய முயற்சிகளுக்கு திட்டமிடாமல் உங்கள் வழக்கமான செயலகளை மட்டும் இந்த மாதம் தொடர்ந்து செய்யுங்கள். உத்தியோகத்தின் மூலம் பண வரவு இருக்கும். என்றாலும் உங்கள் வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் கடன் வாங்க நேரலாம். வழக்கு விவகாரங்கள் மற்றும் ஆரோக்கியக் குறைபாடுகள் போன்றவற்றை சரி செய்ய நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரலாம். நீங்கள் கவனமுடன் செயல்பட்டால் இந்த சங்கடங்களைத் தவிர்க்கலாம். எதிரிகள் மூலம் உங்களுக்கு பிரச்சினைகள் அதிகமாகலாம். அதனை தீர்க்க நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரலாம். கூட்டுத் தொழில் மூலம் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது. சமூக சேவைக்கு உங்கள் பணத்தை அர்ப்பணிப்பதன் மூலம் உங்களுக்கு செலவுகள் மற்றும் நஷ்டங்கள் குறையலாம்.  

உங்கள் நிதிநிலை மேம்பட : சந்திரன் பூஜை

உத்தியோகம் :

இந்த மாதம் உத்தியோகத்தில் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எனவே நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். உங்கள் வழக்கமான பணிகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். இந்த மாதம் உங்கள் பணிகளை முடிப்பதில் தாமதங்கள் இருக்கலாம். இதனால் நீங்கள் சில பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். சக பணியாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படலாம். இது பணியிடச் சூழலில் சில சவால்களை சந்திக்க வைக்கும். எனவே இதனை தவிர்க்கவும் உத்தியோகத்தில் முன்னேற்றம் காணவும் நீங்கள் பணியிடத்தில் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம்.  

தொழில் :

இந்த மாதம் தொழிலில் நீங்கள் சில நஷ்டங்களை சந்திக்க நேரும். எனவே முதலீடு செய்யும் யோசனை இருந்தால் அதனை தள்ளிப் போடுவதன் மூலம் நஷ்டத்தை தவிர்க்கலாம்.     தொழிலுக்குத் தேவையான வழக்கமான பணிகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். கூட்டுத் தொழில் வேண்டாம். ஏற்கனவே கூட்டுத் தொழிலில்  இருப்பவர்களுக்கு உங்கள் கூட்டாளிகள் சில யோசனைகளைக் கோரலாம். அவற்றை ஏற்க வேண்டாம். அது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம். தொழிலில் பணியாளர்களுடனும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பணிகள் தாமதமடையலாம். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.     

உங்கள் உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : பிருகஸ்பதி பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் நீங்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படலாம். எனவே அவ்வப்போது மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வதன் மூலம் பெரிய அளவில் பாதிப்பு வராமல் காத்துக் கொள்ளலாம்.   இந்த மாதம் நீங்கள் ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொள்ளலாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயலுங்கள். இந்த மாதம் உங்களுக்கு ENT  பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ள்ளது.   

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : தன்வந்தரி பூஜை

மாணவர்கள் :

உங்களின் அர்ப்பணிப்பு மூலம் கல்வியில் வெற்றி காணலாம். எனவே விடா முயற்சி செய்து வெற்றி காணுங்கள். நண்பர்களுடனான உறவில் பிரிவு வரலாம். இது உங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கலாம். எதிரிகளிடம் இருந்து விலகி இருங்கள். வாக்குவாதங்களைத் தவிருங்கள். உங்கள் இலக்கை அடைய உங்கள் சுற்றி இருப்பவர்களின் ஆதரவை நாடுங்கள். குழுப்பணி ஆற்றுவது அல்லது குழுவினருடன் சேர்ந்து படிப்பது போன்றவற்றை தவிருங்கள். குறித்த நேரத்துள் உங்கள் பணிகளை முடிப்பது உங்களுக்கு சவாலாக இருக்கலாம். இதனால் உங்கள் பெயரும் புகழும் கெடலாம். ஆசிரியரிடம் நல்ல சுமுகமான உறவைப் பின்பற்றுங்கள். உங்கள் சந்தேகங்களை அவரிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் இலக்கை அடைய இயலும்.

கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

சுப தேதிகள்: 7,11,12,13,18,19,20,23,24,25

அசுப தேதிகள் : 1,2,5,6,8,14,15,16,17, 22