கடனில்லாத வாழ்க்கை எப்படி இருக்கும். இந்த சந்தோஷமான வாழ்க்கையை யாரும் இந்த காலத்தில் அனுபவிப்பதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு கடன் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு தேவைக்காக கடன் வாங்கக் கூடிய சூழல் ஏற்பட்டுத் தான் போகிறது எனலாம். ஆனால் ஒருவர் வாங்கும் இந்தக் கடன் அவர் தம் நிம்மதியைக் கெடுக்கும். சந்தோஷத்தைக் கெடுக்கும். கஷ்டத்தைக் கொடுக்கும். என்றாலும் இதனை தெரிந்தே தான் நாம் கடன் வாங்குகிறோம்.
கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினார் என்பார்கள். வாங்கிய கடனை குறித்த நேரத்தில் அடைக்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். குறிப்பிட்ட கெடுவிற்குள் கடனை அடைக்க முடியாத நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அது கவலை மற்றும் வருத்தம் அளிக்கும். அது சில சமயங்களில் பிரச்சினையாகக் கூட மாறலாம். கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து அதனை திருப்பிக் கேட்கும் நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதும் கடினமாக இருக்கும்.
ஆனால் இந்த கடன் தொல்லையில் இருந்து எப்படி மீண்டு வருவது. கடனே இல்லாமல் எப்படி வாழ்வது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
உங்கள் கடன் அடைய நீங்கள் திருச்செந்தூர் முருகனின் பாதத்தை பற்றிக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்களுக்கு தீர்வு கிட்டும். உங்கள் கடன் தீர கடலில் நீராடி முருகப் பெருமானின் திருவடிகளை வணங்கி மனதார முருகனை வேண்டிக் கொண்டு வாருங்கள். அந்த மண்ணை மிதித்து விட்டு வந்தாலே உங்கள் கடன் தீரும். கஷ்டங்கள் மறையும்.
உங்கள் கையால் பச்சரிசியை ஊற வைத்து காய வைத்து அரிசி மாவு செய்து கொள்ளுங்கள். அதனை உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கு பிள்ளையாருக்கு இந்த பச்சரிசியால் அபிஷேகம் செய்யுங்கள். பின்பு விளக்கு ஏற்றுங்கள். பிறகு வீட்டிற்கு வந்து கிழக்கு முகமாக கெஜலக்ஷ்மி விளக்கு ஏற்றுங்கள். மேற்கு முகமாக அகல்விளக்கை ஏற்றுங்கள். கிழக்கு முகமாக ஏற்றும் விளக்கு பண வரவிற்கும், மேற்கு முகமாக ஏற்றும் விளக்கு கடன் அடையவும் வழி வகுக்கும்.
மேலும் ஒரு பரிகாரம் பற்றி காண்போம். இந்த பரிகாரத்திற்கு கொள்ளு தானியம் தேவை. ஒரு கைப்பிடி அளவு கொள்ளு எடுத்து கொள்ளுங்கள். அதனை ஒரு பேப்பரில் வைத்து மடித்துக் கொள்ளுங்கள். இதனை நீங்கள் விநாயகர் கோவிலுக்கு செல்லும் போது கையோடு எடுத்துச் செல்ல வேண்டும். விநாயகருக்கு முன்பு கடன் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த ஒரு கைப்பிடி கொள்ளை உங்களுடைய கையில் எடுத்துக் கொண்டு தலையை மூன்று முறை சுற்ற வேண்டும். கொள்ளை பேப்பரில் வைத்து மடித்து மீண்டும் வீட்டிற்கு கொண்டு வாருங்கள். அதனை ஓடுகின்ற தண்ணீரில் விட்டு விடலாம் அப்படி இல்லை என்றால் காக்கை குருவிகளுக்கு இரையாக வைக்கலாம். அப்படி இல்லை என்றால் பசு மாட்டிற்கு சாப்பிட கொடுத்து விடலாம். இந்த பரிகாரத்தை பிரதி ஞாயிறு எமகண்டம் நேரத்தில் செய்வது நல்லது.
மற்றுமொரு பரிகாரம். முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பரிகாரம் தடையின்றி நடக்க வேண்டும். என்று விநாயகருக்கு விளக்கு ஏற்றி அவரை வேண்டி 11 முறை சுற்றி வாருங்கள். உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோயிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அங்கு பைரவர் சன்னிதி இருக்கும். இந்த வழிபாட்டை தொடர்ந்து 27 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். 15 நாட்களில் உங்களுடைய கஷ்டம் தீர்ந்தாலும், 27 நாட்களை தவறவிடக்கூடாது. தொடர்ந்து 27 நாட்கள் இந்த விளக்கை ஏற்றனும். மாலை 6 மணிக்கு மேல் தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். பைரவர் சன்னிதானத்திற்கு செல்லும் போதே வீட்டிலிருந்து இந்த முடிச்சை தயார் செய்யவும். 27 மிளகு எடுத்துக்கொள்ளுங்கள். அந்த மிளகை லேசாக பேப்பரில் வைத்து ஒன்றும் இரண்டுமாக நுணுக்கி கொள்ளுங்கள். வெள்ளை துணியில் இந்த மிளகை போட்டு சின்ன முடிச்சாக கட்டிக் கொள்ளவும். கோவிலுக்கு போகும் போது இந்த முடிச்சை எடுத்துட்டு செல்லுங்கள்.
பைரவர் சன்னிதானத்திற்கு முன்பாக ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, அந்த நல்லெண்ணெயில் இந்த மிளகுமூட்டையை போட்டு, அப்படியே தீபம் ஏற்றி, அந்த தீபத்திற்கு முன்பு ஐந்து நிமிடம் அமர்ந்து உங்கள் கடன் பிரச்சினை தீர வேண்டிக் கொள்ளுங்கள்.. தொடர்ந்து 27 நாள் இந்த விளக்கை ஏற்றி முடிப்பதற்குள் உங்கள் கட்ன்பிரச்சினை தீர்வதற்கான வழிவகை கிட்டும். இந்த விளக்கை பகல் நேரத்தில் ஏற்றக்கூடாது. பைரவருக்கு மாலை 6 மணிக்கு மேல் தீபம் ஏற்றுவது சிறப்பு. முடிந்தால் காலை 6 மணிக்கு முன்பு இந்த தீபத்தை ஏற்றலாம்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025