நோயில்லாத வாழ்வு வாழ்வதைத் தான் நாம் அனைவரும் விரும்புவோம். எத்தனை செல்வங்கள் இருந்தாலும் அதனை அனுபவிக்கும் திறன் நமக்கு இருக்க வேண்டும். அதற்கு நாம் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். என்றாலும் மனித வாழ்வில் தவிர்க்க முடியாதது நோய் எனலாம்.நோயானது நமக்கு பல காரணங்களால் ஏற்படுகிறது. பரம்பரை அல்லது மரபணு காரணமாக நோய் ஏற்படலாம். நாம் உண்ணும் உணவு காரணமாக நோய் ஏற்படலாம். நமது மன நிலை காரணமாக உடலில் நோய் ஏற்படலாம். எது எப்படி இருந்தாலும் நோய் என்பது நமக்கு தீராத துன்பத்தை விளைவிப்பதாக இருக்கும்.
எனவே சிறந்த ஆரோக்கியமே சீரும் செல்வமும் ஆகும். ஆரோக்கியத்தை பேணிக் காத்தலே நமது தலையாய கடமை எனலாம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் நமது கடமைகளை சரிவர செய்ய இயலும்.
என்றாலும் இன்றைய காலகட்டத்தில்நோய் இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். முற்காலத்தில் எல்லாம் வயது முதிர்ந்தவர்க்ளுக்குத் தான் மூப்பு காரணமாக சில நோய்கள் தாக்கும். இன்று சிறு வயது குழந்தைகளுக்கு கூட பெரியவர்களுக்கு வரும் நோய் தாக்குகிறது. இளைஞர் இளைஞிகள் கூட நோய்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு சிலருக்கு இனம் புரியாத நோய்கள் கூட ஏற்படுகின்றன. என்ன வியாதி என்று கண்டு பிடிக்க முடியாமலேயே சில நோய்கள் தாக்குகின்றன. எத்தனையோ மருந்து மாத்திரைகள் எடுத்தும் சில நோய்கள் தொடர்ந்து உபாதைகளை அளித்துக் கொண்டு தான் இருக்கிறது.
தீராத நோயாக இருந்தாலும் கடுமையான நோயாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் குணமடையலாம்.
எந்தவொரு தீராத கஷ்டத்திற்கும் நாம் மேற்கொள்ள வேண்டிய வழிபாடு தீப வழிபாடு எனலாம். எந்தவிதமான கஷ்டத்தையும் நீக்கும் சக்தியும் ஆற்றலும் தீபச் சுடருக்கு உண்டு எனலாம். எனவே நீங்கள் தீப வழியாட்டை மேற்கொள்வதன் மூலம் நோயில் இருந்து குணமடையலாம்.
நீங்கள் தீராத நோயால் கஷ்டப் படுகிறீர்கள் அல்லது உங்கள் உறவினர்கள் நோயால் அவதிப்படுகிறார்கள் என்றால் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். இந்தப் பரிகாரம் தீப பரிகாரம் ஆகும்.
இந்த பரிகாரத்திற்கு இரண்டு பெரிய அகல் விளக்கு மற்றும் இரண்டு சிறிய அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் இரண்டு பெரிய மண் அகல் விளக்குக்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அகலில் ஒரு கைப்பிடி உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றொரு அகல் விளக்கில் மிளகை எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல சிறிய அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் எண்ணெய் திரி போடுங்கள். ஒரு அகல் விளக்கில் சிறிதளவு உப்பு போட்டு, உப்பு உள்ள பெரிய அகல் விளக்கின் மேல் வையுங்கள். மற்றொரு அகல் விளக்கில் திரி எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு மிளகு போட்டு மிளகு உள்ள பெரிய அகல் விளக்கின் மேல் வைக்க வேண்டும். இரண்டு தீபங்களையும் ஏற்றுங்கள். தீபம் கிழக்கு முகமாக இருக்க வேண்டும். இந்த விளக்கை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் ஏற்றவும்.
இந்த விளக்கை ஏற்றும் போது யாருக்காக ஏற்றுகிறீர்களோ அவரின் பெயர் மற்றும் நட்சத்திரம் கூறி அவருடைய உடல் உபாதைகள் குணமாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். நம்பிக்கையுடன் ஏற்றுவது அவசியம்.இவ்வாறு செய்து வர உங்கள் நோய் படிப்படியாக குணமாகும்.
உங்கள் வேண்டுதல் முடிந்தவுடன் அந்த மிளகையும் உப்பையும் ஓடும் நீரில் விட்டு விடவும். இல்லை எனில் உப்பை கரைத்து விடவும். மிளகை கால் படாத இடத்தில் போட்டு விடவும்.
தீராத வியாதியினால் துன்பப்படுபவர்கள் அதன் தாக்கத்திலிருந்து வெளிவர மேலே கூறிய இந்த தீப பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025