Ashta Aishwarya Program- Join our 9-Month Program to Manifest Eight Types of Wealth in Life Join Now
Sri lalitha pancharatnam lyrics tamil | ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்

Posted DateJanuary 31, 2024

ப்ராதஹ: ஸ்மராமி லலிதா வதநாரவிந்தம்

பிம்பாதரம் ப்ரதுல மௌக்திக ஷோபிநாசம்

ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்டலாட்யம்

மந்தஸ்மிதம் மிருக மதோஜ்வல பாலதேஷம். 1

காலைவேலையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன். அது கோவைப்பழமொத்த உதடுகளுடையதாயும், பெரிய முத்துக்களான மூக்குத்தியுடையதாயும், மாணிக்க குண்டலங்களுடையதாயும், புன்முறுவல் உடையதாயும், கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியுடையதாயுமுள்ளது.

ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம்

ரத்னாங்குலீய லசதாங்குலி பல்லவாட்யாம்

மாணிக்ய ஹேம வலயாங்கத ஷோபமானாம்

புண்ட்ரேக்ஷு சாபா குஸுமேஷு ஸ்ருநீர்தானாம். 2

காலையில் ஸ்ரீலலிதாம்பிகையின் கல்பகக் கொடி போன்ற கைகளை சேவிக்கிறேன். அது சிவந்த மோதிரம் மிளிரும் துளிர் போன்ற விரல்களுடையதாயும், மாணிக்கம் பதிந்த தங்க வளையல்களும், தோள்வளையும் கொண்டு விளங்குகின்றன. கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ரம்பமும் அவற்றில் உள்ளன.

ப்ராதர் நமாமி லலிதாசரணாரவிந்தம்

பக்தேஷ்ட தானநிரதம் பவசிந்து போதம்

பத்மாசநாதி ஸுரநாயக பூஜனீயம்

பத்மான்குஷத்வஜ ஸுதர்ஷன லாஞ்சநாட்யாம். 3

பக்தர்களின் இஷ்டத்தை எப்பொழுதும் நல்குவதும் சம்ஸாரக்கடலைக் கடப்பதற்காக அமைவதும், பிரம்மதேவன் முதலிய தேவர்கள் வழிபடத் தக்கதும், தாமரை அங்குசம், கொடிசுதர்சனம் முதலிய இலச்சினை கொண்டதுமான ஸ்ரீலலிதாம்பிகையின் திருவடித்தாமரையை காலையில் வணங்குகின்றேன்.

ப்ராதஸ் ஸ்துவே பரசிவம் லலிதாம் பவாநீம்

த்ரய்யந்த வேத்யா விபவாம் கருணானவத்யாம்

விஸ்வஷ்ய ஸ்ருஷ்டி விலயஷ்திதி ஹேதுபூதாம்

விஷ்வேஸ்வரீம் நிகம வாங் மனஷாதி தூரம். 4

உபநிஷத்துக்களில் தெரிந்து தெளிய வேண்டிய மஹிமை கொண்டவளும், மாசற்ற கருணை பூண்டவளும், உலகத்தை படைக்கவும், காக்கவும், பிறகு லயமடையச் செய்பவளும், வேதங்களுக்கும், வாக்குகளுக்கும், மனதிற்கு அப்பாற்பட்டவளுமான பரசிவையான ஸ்ரீ லலிதாம்பிகையை காலையில் ஸ்தோத்திரம் செய்கிறேன்

ப்ராதர் வதாமி லலிதே தவ புண்யநாம

காமேஷ் வரேதி கமலேதி மகேஸ்வரீதி|

ஸ்ரீ சாம்பவேதி ஜகதாம் ஜனனி பரேதி

வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேஷ்வரேதி. 5

ஹே லலிதாம்பிகே. உனது புண்யமான பெயரை காலையில் சொல்கிறேன். காமேச்வரி என்றும், கமலா என்றும், மஹேச்வரீ என்றும், ஸ்ரீசாம்பவீ என்றும், உலகத்தின் உயரியதாய் என்றும், வாக் தேவதை என்றும், த்ரிபுராம்பிகை என்றும் அல்லவா அந்த பெயர்கள் அமைந்தன.

யஹ் ஸ்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாய

ஸௌபாக்யதம் சுலலிதம் படதி ப்ரபாதே

தஸ்மை ததாதி லலிதா ஜடிதி பிரசன்னா

வித்யாம் ஸ்ரியம் விபுல ஸௌக்ய மனந்த கீர்த்திம். 6

ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்தோத்திரமான இவ்வைந்து ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை. மிக எளிதானவையுங்கூட – காலையில் படிப்பவருக்கு மகிழ்ச்சியுடன் கல்வி, செல்வம், குறைவற்ற சௌக்யம், புகழ் ஆகியவற்றை அருள்கிறாள்.

இதி ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் சம்பூர்ணம் .